பா.ம.க வுக்கு சவால்விடும் வகையில் தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் பா.ம.க வின் கோட்டையிலேயே களம் இறங்கியுள்ளதால் பா.ம.க அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ள பா.ம.க தலைவர் இராமதாஸ் அவர்கள் விஜயகாந்திற்கு "டெபாசிட்" தொகைகூட கிடைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். விருதாசலம் தொகுதி வெற்றியை இராமதாஸ் ஒரு மானப்பிரச்சனையாக கருதுவதாக பா.ம.க வின் முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். அதனால் தற்போதைய வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு பதிலாக காடுவெட்டி குரு விருதாசலத்தில் போட்டியிடுகிறார். ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவுக்கு பதிலாக "இராமு படையாச்சி" போட்டியிடுகிறார்.
காடுவெட்டி குரு தற்போது களத்தில் குதித்துள்ளதால் விருதாலச்தில் சூடு பறக்கும் என்று நிச்சயமாக கூறலாம், தேர்தல் கமிசன் சிறப்பு பார்வையாளரை இத்தொகுதிக்கு நியமித்து கண்காணித்தல் தேர்தல் பிரச்சினை இல்லாமல் நடக்க உதவும்.
4 கருத்துகள்:
ஏப்ரல் ஒன்றாம் தேதி வாழ்த்துக்கள்
அரசியலில் எதுவும் நடக்கலாம் நடக்கும். நான் சொன்னது நடந்துவிட்டால் தீர்க்கதரிசியாகி இதுபோல் பல பல செய்திகளை வலை மக்களுக்கு தெரிவிப்பேன் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன். -:))
'காடு வெட்டி' குரு ... திகில் பட வில்லன் பேரு மாதிரி .. ரெம்ப யோசிச்சீங்களோ ..
இங்க ஆளுக கொஞ்சம் மோசம்.. நானும் ட்ரை பண்ணினேன்.. பெருசா யாருமே ஏமாறலை...
suka காடுவெட்டி குரு பாமகவில் முக்கிய நபர். காடுவெட்டி இவரின் ஊர் பெயரா என்று தெரியாது. ஆனா அதிரடியான ஆளு தான். பாமக வின் அதிரடி மன்னன் இவர் தான்..
ஒருத்தரும் ஏமாறலை :-( எல்லோரும் உஷாரா இருந்தா எப்படிதான் காமெடி பண்றது ? அதனால் என் நண்பரிடம் நான் ஏமாந்தேன் :-))
கருத்துரையிடுக