வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூன் 28, 2011

வலு குறைந்த தமிழ்மணம் வழங்கி

ஒரு மாதத்துக்கு மேல் தமிழ்மணம் பக்கத்தை திறந்தால் The connection has timed out என்ற செய்தி 75% க்கு அதிக முறை வருகிறது, 25%க்கும் குறைவான நேரம் தான் முகப்பு பக்கம் தெரிகிறது.  சில நேரம் மட்டுமே தமிழ்மணம் பக்கம் திறக்கிறது. அப்படியே பக்கம் திறந்தாலும் அதிலுள்ள இடுகைகளின் இணைப்பை சொடுக்கினால் அது திறக்காது timed out (50%) என்ற செய்தி வரும். தமிழ்மணம் முகப்பில் உள்ள சில பக்கங்கள் The connection...... என்று பிழையை தான் காட்டும்.

குரோம் உலாவியில்


ஐஇ உலாவியில்

தமிழ்மணம் நிருவாகிகளுக்கு இச்சிக்கல் பற்றி தெரியும் என எண்ணுகிறேன் ஏன்னா ஒரு மாதத்துக்கு மேல் இச்சிக்கல் உள்ளது. இச்சிக்கலை மாதக்கணக்கில் நீடிக்க விடாமல் விரைவில் சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இதற்கு காரணம் தமிழ்மணம் வழங்கி பலுவை தாங்க முடியாதது தான் என்று எண்ணுகிறேன். அவ்வாறு இருந்தால் வழங்கியை மாற்றுங்கள்.

இன்று ஒரு முறை கூட தமிழ்மணம் முகப்பு பக்கத்துக்கு செல்ல முடியவில்லை எல்லா முறையும் The connection has timed out என்ற பிழை செய்திதான் உலாவியில் தோன்றியது.

வெள்ளி, ஜூன் 24, 2011

அஞ்சா நெஞ்சனின் கோட்டையில் தேர்தல் முடிவு விரிவாக.

திமுகவின் தேர்தல் முடிவை அலசலாம் என்று இருந்தேன். சோம்பேறித்தனத்தால் அஞ்சா நெஞ்சனின் கோட்டையை மட்டும் அலசி இருக்கேன் (இதுவே ரொம்ப ரொம்ப தாமதம்). மதுரையே அண்ணனின் கோட்டையாக கருதப்பட்டாலும் திமுகவின் தென் மாவட்டங்களுக்கு அண்ணனே தலைவர். இவரை எதிர்த்து யாரும் இங்கு திமுகவில் இருக்கமுடியாது. கிருசுணா மற்றவர்களுக்கு புரிய வைப்பா..
அஞ்சா நெஞ்சனின் கட்டுப்பாட்டில் வரும் தென் மாவட்டங்கள் 9 (அதிகாரபூர்வமாக கிடையாது ஆனா எல்லோருக்கும் தெரியும்) ... அவை...

1. திண்டுக்கல் மாவட்டம்
2. சிவகங்கை மாவட்டம்
3. மதுரை மாவட்டம்
4. தேனி மாவட்டம்
5. விருதுநகர் மாவட்டம்
6. இராமநாதபுரம் மாவட்டம்
7. தூத்துக்குடி மாவட்டம்
8. திருநெல்வேலி மாவட்டம்
9. கன்னியாகுமரி மாவட்டம்




மொத்தம் 58 தொகுதிகள் இம்மாவட்டங்களில் உள்ளன. இதில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது 12 தொகுதிகளில்.

1-1,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது - 1
1,001-5,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -2
5,001-10,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -3
10,001-15,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -4
15,001-20,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -6
2,0001-25,000க்கும் குறைஇடையேயேயான வாக்குகளில் தோற்றது -11
25,001-30,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -8
30,001-50,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -9
50,000க்கும் அதிகமான வாக்குகளில் தோற்றது - 2

அஞ்சா நெஞ்சனின் அசைக்கமுடியாத கோட்டையாக கருதப்பட்ட மதுரை மாவட்டத்தில் மட்டுமே எல்லா இடங்களிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. அண்ணனின் அன்புத்தொல்லையில் மதுரை மாவட்ட மக்கள் மூச்சு விட முடியாத அளவுக்கு திணறி இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.

இடைத்தேர்தலில் 39,266 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற திருமங்கலத்தில் 26,367 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றது தான் பலருக்கு ஆச்சரியமாக உள்ளது. திருமங்கலத்திலேயே திருமங்கலம் வாய்பாடு (சூத்திரம்) பலிக்காமபோச்சே??? அண்ணனின் பணபட்டுவாடா சரியில்லையா அல்ல அண்ணனின் வேலை சரியில்லையா அல்ல திமுக எதிர்ப்பு அலை அவ்வளவு அதிகமா?

மதுரை மாவட்ட தொகுதிகளின் நிலவரம்

தொகுதி வெற்றி வேறுபாடு
மேலூர் 24,462
மதுரை கிழக்கு 28,755
சோழவந்தான் (தனி) 36,608
மதுரை வடக்கு 46,400
மதுரை தெற்கு 45,451
மதுரை மேற்கு 38,761
மதுரை மத்தி 19,560
திருப்பரங்குன்றம் 48,502
திருமங்கலம் 26,367
உசிலம்பட்டி 15,320

திமுகவிலேயே அதிக வாக்குகள் (53,932) வேறுபாட்டில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் தொகுதி அண்ணனின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிமுக கூட்டணியைவிட அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4-ல் வென்றுள்ளது. இங்க எப்பவும் தமிழக வாடையை விட கேரள வாடை அதிகம் வீசும் என்பது காரணம். இன்னும் அப்படியிருக்க என்ன காரணம்? கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக-வுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு என்பதை நினைவில் கொள்க. கிள்ளியூர் தொகுதியில் அவர்கள் 2-வது இடம்.

திமுக கூட்டணி வென்ற இடங்களின் எண்ணிக்கை 31

அண்ணனின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி விழுக்காடு 10.79 (234-58 = 176 ,  31-12 = 19,  21/176 =10.79% )

அண்ணனின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி விழுக்காடு 20.689 (12/58 = 20.689%)


குறிப்பிட்ட மாவட்டங்களில் பதிவான மொத்தவாக்குகளில் அதிமுக கூட்டணி & திமுக கூட்டணி பெற்ற வாக்குகளின் விழுக்காடு அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் மொத்த வாக்குகள் (100%) அதிமுக கூட்டணி பெற்றது திமுக கூட்டணி பெற்றது
திண்டுக்கல் 11,61,2545,75,194 (49.53%)4,74,675(40.88%)
சிவகங்கை6,58,209 3,26,716 (49.64%)2,90,998 (44.21%)
மதுரை 15,80,741 9,01,916 (57.06%)5,71,730 (36.17%)
தேனி 6,61,6433,31,782 (50.15 %)2,87,372 (43.43%)
விருதுநகர் 10,34,805 5,38,509 (52.04%)4,33,726 (41.91%)
இராமநாதபுரம் 64,06422,98,540 (46.60%)2,29,919 (35.89%)
தூத்துக்குடி 8,23,4124,43,909 (53.91%)3,22,031 (39.11%)
திருநெல்வேலி 14,98,9377,60,477 (50.73%)5,86,490 (39.13%)
கன்னியாகுமரி 8,93,6213,04,273 (34.05%)3,58,339 (40.10%)

உதவி: தமிழ் விக்கிப்பீடியா

செவ்வாய், ஜூன் 21, 2011

அஜித் நினன் வூடு கட்டி அடிக்கறாருய்யா..- கருத்துப்படங்கள்

இரவுண்டு கட்டி அஜித் நினன் அடிக்கராருப்பா. கருத்துப்படம் வரையறவங்களுக்கு இது கொண்டாட்ட காலம்.


எல்லோரும் திகார் ஜெயிலுக்கு போக முடியுமா? அதுக்கு மிகப்பெரிய அளவுல கொள்ளை அடிக்கனும்.


அமைச்சர் எப்ப இருப்பாரு இருக்கமாட்டாருங்கறது நீதிமன்றத்தை பொறுத்து தான் இருக்கு. கலி காலம்; மன்னிக்க ஊழல் காலம்.


அமோக வெற்றியால ஆத்தாவுக்கு வந்த மவுசு. தாத்தாவுக்கு இது தேவையா?


இந்தா இந்தான்னு போக்கு காட்டியே அண்ணா குழுவ நோகடிச்சு லோக்பால் சட்டத்தை சொத்தைபால் சட்டம் ஆக்கனுமுன்னு கபில் சிபல் இருக்கறாரய்யா.

சுட்ட இடம்: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இதழில் நினா வரைந்த கருத்துப்படம்.