வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மார்ச் 16, 2011

அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லை - செயலலிதா

அதிமுக கூட்டணியில் இரண்டு பொதுவுடமை கட்சிகளும் மதிமுக-வும் இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கு பொதுவுடமை கட்சிகளுகு தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று செயலலிதா உறுதிபடுத்தினார். பாவம் மதிமுகவை அவர் கண்டுக்கவே இல்லை. சரி பின்னாடி உடன்பாடு வரும் தொகுதி ஒதுக்குவாருன்னு வைகோ போன்றவர்கள் நினைச்சிருப்பாங்க. ஆனா அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளை அறிவித்ததின் மூலம் மதிமுகவுக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது (செயலலிதா சாத்திவிட்டார்). அண்ணா, தனி கடை கட்ட நடைய கட்டுங்க.

அதிமுக கூட்டணி


கட்சி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக 160
தேமுதிக 41
CPM 12
CPI 10
மனித நேயமக்கள் கட்சி 3
புதிய தமிழகம் 2
சரத்குமார் கட்சி 2
சேதுராமன் கட்சி 1
குடியரசு கட்சி 1
கொங்கு இளைஞர் பேரவை 1
மதிமுக 00
மொத்தம் 234



மதிமுக இல்லாததால் அதிமுகவுக்கு நட்டமா? 

மதிமுகவுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்கு உண்டு. மேலும் வைகோ போன்ற மக்கள் அறிந்த சிறந்த உணர்வுபூர்வமான பேச்சாளரை இழந்தது அதிமுகவுக்கு பெரும் இழப்பு. வைகோவின் பேச்சு இலவசமாக செய்திதாள்களில் வரும் அத்தகைய விளம்பரத்தை இழந்தது அதிமுகவுக்கு பாதிப்பே. இந்த தேர்தலில் வாக்கு வேறுபாடு குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைக்ககூடிய திமுக அனுதாபிகளான (தற்போது திமுக மேல் கோபமாக உள்ள) தமிழ் உணர்வாளர்கள் பெரும் பாலோரின் வாக்குகளை அதிமுக இழக்கப்போவது உறுதி.

மதிமுக வாக்கு குறைவாக வாங்கினாலும் அதன் தொண்டர்கள் சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். தேர்தல் நேரத்தில் இவற்றை அதிமுக இழந்தது அதற்கு தான் பாதிப்பு. தேமுதிகவிற்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உண்டு ஆனால் தெற்கே இல்லை. மதிமுகவிற்கு தெற்கே உண்டு ஆனால் வடக்கே இல்லை.

ஏன் அண்ணனை தங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை?

தங்கை இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இப்போது வழிகாட்டுபவர்களுக்கு வைகோவை பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். மதிமுகவுக்கு மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் செல்வாக்கு உண்டு அங்கு அதிமுக பலமாக உள்ளது எனவே மதிமுக தேவையில்லை. வைகோ இல்லாமல் போனாலும் விசயகாந்த் கூட்டணியில் இருப்பதால் நாயுடு வாக்குக்கு பாதிப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு ஈடான விளம்பரம் வைகோவுக்கு கிடைப்பதில் உடன்பாடு இல்லை. மதிமுகாவால் ஏற்படும் சிறிய இழப்பை தேமுதிகவால் ஈடுசெய்யலாம். மதிமுகவை விட தேமுதிகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது.

அதிமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது (கிடைக்க கூடாது என்பது என் விருப்பம்). மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு வேணா அமைக்கலாம். ஜெயா தொலைக்காட்சியில் மைனாரிட்டி அரசு என்பதை அழுத்தி சொல்லலாம்.

வியாழன், பிப்ரவரி 10, 2011

கறுப்பு பணம் வைத்திருந்தவர்களில் 15 பேர் பெயர் தெரிந்தது.

வெளிநாட்டில் கோடி கோடி கணக்கில் நம் நாட்டவர் பணத்தை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதது யார் யாரெல்லாம் என்பது தான்.  நம் இந்திய அரசும் செருமனியிடம் இருந்து லீக்டன்சுடைன் நாட்டின் LGT வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை கேட்டு பெற்றுள்ளது. ஆனா கேடி வேலை பண்ணி நமக்கு அது தெரியக்கூடாது என்று மறைத்துள்ளது.
2009 மார்ச் மாதமே செருமனி இந்தியாவிடம் அந்த பட்டியலை கொடுத்துவிட்டது. ஆனா நம்ம கை சுத்தமான மண்ணு அப்பட்டியலை வெளியிடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் கேட்டும் இந்த பதில் தான்.  இதில் 18பேரில் உள்ள 16 பேரின் விவரங்கள் தெகல்காவிடம் சிக்கியுள்ளது. தெகல்கா அதில் 15 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp

1. Manoj Dhupelia - மனோஜ் துபெலியா
2. Rupal Dhupelia - ரூபல் துபெலியா
3. Mohan Dhupelia - மோகன் துபெலியா
4. Hasmukh Gandhi- காசுமுக் காந்தி
5. Chintan Gandhi- சிந்தன் காந்தி
6. Dilip Mehta- திலிப் மேத்தா
7. Arun Mehta- அருண் மேத்தா
8. Arun Kochar- அருண் கொசார்
9. Gunwanti Mehta - குன்வண்டி மேத்தா
10. Rajnikant Mehta- ரஜினிகாந்த் மேத்தா
11. Prabodh Mehta - பிரபோத் மேத்தா
12. Ashok Jaipuria- அசோக் ஜெய்புரியா

3 அறக்கட்டளைகளின் பெயர்கள்

13. Raj Foundation- ராஜ் பவுண்டேசன்
14. Urvashi Foundation- ஊர்வசி பவுண்டேசன்
15. Ambrunova Trust - அம்புருனோவா டிரசுட்
16. பெரிய நிறுவனத்தின் சேர்மன் பெயர். தற்சமயம் அவரின் பெயரை வெளியிடவில்லை. 

இவங்கலாம் என்ன மாதிரியான வணிகம் பண்றாங்க எவ்வளவு பணத்தை பதுக்கி இருக்காங்க அப்படிங்கிற விவரத்தை அவங்க தரப்பு விளக்கத்தை கேட்ட பின் தெகல்கா வெளியிட முடிவுசெய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் 26 பெயர்களை பெற்றுள்ளதாக அரசு கூறி உள்ளது. அதனால் தெகல்காவிடம் கிடைக்காதவர்களும் உண்டு.

கொச்சி பிரிமியர் லீக் அணியை ஏலம் எடுத்தவர்களும் இந்திய அரசிடம் உள்ள கறுப்பு பணம் உள்ளவர்களின் பட்டியலில் உள்ளதாக பேசப்படுகிறது.

என்ன இது மொத்தமே இவ்வளவு பேர் தான் கறுப்பு பணத்தை பதுக்குனவங்களான்னு ஆச்சரியப்படாதிங்க.  ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. இது கொஞ்சமே கொஞ்சம் , இந்த கொஞ்சம் பேரை சொல்லவே அரசு முடியாதுங்குது. ஏன்னா நம்ம அரசியல் பெருந்தலைகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் நபர்களும் அதில் உள்ளது தான்.

குறிப்பு:- மேலும் விரிவான செய்திகளுக்கு உண்மைத்தமிழன் வலைப்பதிவை பார்க்கவும்.













சனி, ஜனவரி 15, 2011

ஒற்றுமையின் பலம் எருமை உணர்த்தும் பாடம்

   அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்!!

ஒற்றுமையின் பலத்தை நாம் பாடங்களில் படித்திருப்போம். ஒரு குச்சிய உடைத்துவிடாலாம் ஆனால் அதே போன்ற குச்சிகளின் கட்டை உடைக்கமுடியாது. தனியொருவனின் கோரிக்கையை விட அமைப்புகளின் கோரிக்கை எடுபடுவதும் ஓர் காட்டு.

உங்களுக்கு தெரியும் தண்ணியிலுள்ள முதலை, நிலத்தில் சிங்கம் மற்றும் எருமைகளின் பலம். சிங்கங்கள் ஒற்றுமையா போராடி நீரில் இருக்கும் முதலையிடம் இருந்து தன் இரையை மீட்டன (படத்துல பார்க்கலாம்). சிங்கமும் பலமானது தண்ணியிலுள்ள முதலையும் பலமானது. காட்டெருமை இவைகளின் இரை. தன் கன்றை சிங்கங்களிடம் இழந்த காட்டெருமைகள் பின் கூட்டமாக ஒற்றுமையாக வந்து கன்றை சிங்கங்களிடம் இருந்து மீட்டு செல்கின்றன. ஒற்றுமை தந்த பலத்தில் எருமை ஒன்று சிங்கத்தை அப்படியே அலாக்கா தூக்கி வீசுவதையும் பார்க்கலாம். எருமைக்கு எப்படி இவ்வளவு தைரியம்? கூட்டமா இருந்தாலும் சிங்கம் தனக்கு தோதான எருமையை வேட்டையாடிடும். இங்க ஒற்றுமையா வந்ததால சிங்கம் ஓடிடுச்சி. 



இதிலிருந்து நாம ஏதாவது புரிஞ்சுக்கிட்டா சரி.