என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயன்று வருகிறேன். எப்படியும் அடுத்த மாதத்துக்குள் சிக்கலுக்கான காரணத்தை கண்டுபிடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்.
சரிசெய்துவிட்டேன் என்று நினைத்த tamilers.com சிக்கல் மீண்டும் வந்துவிட்டது.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
செவ்வாய், மே 25, 2010
திங்கள், மே 24, 2010
Tamilersஆல் ஏற்பட்ட தொல்லை நீங்கியது
இரண்டு மூன்று நாளா என்னோட வலைப்பதிவுக்கு வந்தா 10 வினாடி கழித்து tamilers.com தளத்துக்கு போயிடும், இதுவும் உருப்படியான தளம் இல்லை, இது விற்பனைக்கு உள்ளது வேண்டுமா? என்ற தகவலும் சில விளம்பர தகவல்களும் தான் அதில் உள்ளவை. நான் புகழ்பெற்ற பதிவர் கிடையாது, என் இடுகைகளை படிப்பவர்களும் குறைவு (ஒழுங்கா எழுதுனா தான நிறைய பேர் படிப்பாங்கன்னு நீங்க சொல்வது என் காதில் கேட்கிறது). ஏன் என் வலைப்பதிவுக்கு இந்த நிலைமை? ஒன்னும் புரியலை.
என்னோட பதிவில் ஏகப்பட்ட Gadget களும் இல்லை இருப்பதும் சிலவே, அவையும் நம்பகமானவை... என் வார்ப்புருவும் கூகுள் கொடுத்தது தான், மற்றவர்களிடம் இருந்து தரவிறக்கம் பண்ணியது இல்லை. அப்படி இருக்கும் போது ஏன்? என்ன காரணத்தால் இப்படி ஆகுதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டேன்.
blogspotக்கு மயில் அனுப்பலாம்ன்னா மயில் முகவரி தெரியலை... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையாயிடுச்சு.
நம்ம சிக்கலை சொல்லி தேடுனா சில பேரு தரவிருக்கம் செய்யப்பட்ட வார்ப்புருவில் மாற்றம் செய்தா அல்லது மூன்றாவது ஆளோட Gadget ஐ நீக்கிட்டா சிக்கல் தீர்ந்திடும்ன்னு சொல்லியிருந்தாங்க. சில பேர் அந்த மாதிரி செய்து சிக்கல் தீர்ந்துன்னு சொல்லியிருந்தாங்க.
நானும் உருப்படியா இருந்த சில Gadget களை நீக்கிபார்த்தேன். புண்ணியம் இல்லை. வார்ப்புரு கூகுள் கொடுத்த எளிமையான ஒன்று, அதனால அதில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை...
வேற வழியில்லை\தோன்றவில்லை என்பதால் வார்ப்புருவ சோதனை பண்ணிபார்ப்போம்ன்னு முடிவு எடுத்தேன். வார்ப்புருவ நோட்பேட்ல வெட்டி ஒட்டி Tamilers இருக்கான்னு பார்த்தா,அட, அந்த கருமம் அங்க இருந்துச்சு. அது tamilish கொடுத்த ஜாவா சிகிரிப்டுக்கு மேல இருந்துச்சு. உடனே Tamilers இருந்த ஜாவா சிகிரிப்டை வார்ப்புருவில் இருந்து நீக்கிட்டு சேமித்ததும் நம்ம வலைப்பதிவு ஒழுங்கா வேலை செய்யுதுங்க.
எப்படி Tamilers ஜாவா சிகிரிப்டு என் வார்ப்புருவில் வந்ததுன்னு தான் தெரியலை.
.

வெள்ளி, மே 14, 2010
பியான்சேவின் பாட்டுக்கு குழந்தைகளின் அபார நடனம்.
குழந்தைகளின் அபார நடனம்.
பியான்சேவின் மூல நடனம் இங்கே.
குழந்தைங்க உடை மற்றும் நடனம் இங்கே விவாதத்துக்குரியதாக மாறியிருக்கு. நாம அந்த மாதிரி எல்லாம் விவாதம் பண்ண வேண்டாம். இரண்டையும் பாருங்க.

குறிச்சொல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்,
குழந்தை,
நடனம்,
பியான்சே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)