வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூலை 25, 2019

மூன்று விண்மீன் - கரடி Bearish Tri-Star Pattern

காளைன்னு ஒன்னு இருந்தா கரடின்னு ஒன்னு இருக்கனுமில்ல. அது தான நியாயம். மூன்று  விண்மீன் - கரடி  ஒழுங்கிலும் மூன்று டோஜிக்கள் தான் ஆனா இவை ஏறு முக போக்கில் தோன்றும்

 இந்த  கரடி ஒழுங்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?



  • முதலில் ஏறு முக போக்கு இருக்கனும்.
  • அடுத்ததாக மூன்று நாள்களுக்கு டோஜி தோன்றனும
  •  முதல் டோஜி உடலுக்கும் அடுத்த டோஜி உடலுக்கும் இடைவெளி இருக்கனும், அதே போல் கீழ் டோஜி உடலுக்கும் மேல் டோஜி உடலுக்கும்  இடையே இடைவெளி இருக்கனும். பார்க்க 3 டோஜிக்களும் Vஐ கவிழ்த்து போட்ட மாதிரி இருக்கும்,
  •  மூன்று டோஜி உடல்களுக்கு இடையே தான்  இடைவெளி இருக்கனும் குச்சி உடலை தொட்டால் தவறில்லை.


சமிக்கையை அதிகரிக்கும் செயல்கள்

  •  மூன்றாவது நாள் டோஜி உடல் கருப்பாக இருந்தால் போக்கு மாற்றம் நடைபெற அதிக வாய்ப்பு.

  •  டோஜிக்கள் தோன்றிய நாளன்று நிறைய வாங்கல் விற்றல் நடந்திருந்தாலும் போக்கு மாற்றம் நடைபெற அதிக வாய்ப்பு. ஆனா குறைவா மட்டும் வாங்கல் விற்றல் நடந்திந்தால் போக்கு மாற்றம் நடைபெறுமா என்பது பெருந்த ஐயத்திற்குரியது.

புதன், ஜூலை 24, 2019

மூன்று விண்மீன் - காளை Bullish Tri Star candlestick pattern

மூன்று தெக்கத்தி விண்மீனுக்கும்  மூன்று விண்மீன் காளைக்கும் உள்ள வேறுபாடு முன்னதில் கருப்பு உடல் பெரிதாக இருக்கும் விண்மீன் என ஒழுங்குக்கு பெயர் இருந்தாலும்  அது பார்க்க விண்மீன் மாதிரி இருக்காது. இதில் மூன்றும் டோஜியா இருக்கும் பார்க்க விண்மீன் மாதிரி இருக்கும். இரண்டுக்கும் ஒழுங்கு அமைப்பிலும் பெரும் வேறுபாடு இருக்கும்.

தெக்கத்தி காளை எப்படி இருக்கனும் என்று   பார்த்துள்ளோம்  எப்படி இந்த  காளை  ஒழுங்கு இருக்கும் என்று பார்ப்போமா?


* முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்.
* அடுத்ததாக மூன்று நாள்களுக்கு டோஜி தோன்றனும்.
முதல் டோஜிக்கும் அடுத்த டோஜிக்கும் இடைவெளி இருக்கனும், அதே போல் கீழ் டோஜிக்கும் மேல் டோஜிக்கும் இடையே இடைவெளி இருக்கனும். பார்க்க 3 டோஜிக்களும் V வடிவில் இருக்கும்,
* மூன்று டோஜி உடல்களுக்கு இடையே தான்  இடைவெளி இருக்கனும் குச்சி உடலை தொட்டால் தவறில்லை

மூன்று தெக்கத்தி விண்மீன்கள் - காளை Three stars in the South Candlestick pattern

மூவுலக்கை ஒழுங்கான இது அரிதாக தான் தென்படும். இது எப்படி இருக்கும் என்பதை  சில விதிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.


  1.  முதலாவதாக இறங்குமுக போக்கு தொடரும்.
  2.  இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல் நீளமான கீழ் குச்சியுடன் தோன்றும். இந்த உடலுக்கு மேல் குச்சி  இருக்காது.
  3.  மூன்றாவதாக (இரண்டாம் நாள்) நீளமான கருப்பு உடலுக்கு அடுத்து அதை விட சிறிய கருப்பு உடல் தோன்றும்.
  4.  நான்காவதாக  மொருசுபு என்றழைக்கப்படும் மேல், கீழ் குச்சி இல்லாத கருப்பு உடல் தோன்றும். இதை இரண்டாம் நாளின் உடலுக்குள் அடக்கி விடலாம்.



கரடியான  மூன்று காகங்களையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.


  • மூன்றாவது நாளின் உடலுக்கு நடு பகுதிக்கு மேல் நான்காவது   நாள் விலை ஏறினால் பங்கை காளைகள் கைப்பற்றி ஏறுமுகம் தொடங்கி விட்டது எனலாம்.