தில்லியில் தோற்றுவிட்டாலும் அவரைப்பற்றிய பிம்பம் நம் உள்ளத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதால் இக்கட்டுரை. தேர்தலோடு இக்கட்டுரையை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம் ஆனால் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்நிறுத்தப்பட்டதால் தான் அவரை பற்றி தெரிந்தது. (தில்லி தேர்தலுக்கு முன்பு எழுத ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் அவ்வளவு வேகம்)
கிரண் பேடி தில்லியின் கன்னாகட்டு பிளேசில்அனுமதியற்ற இடத்தில்
நிறுத்தியிருந்த பிரதமர் இந்திரா காந்தி பயணம் செய்யும் மகிழுந்தை
இழுத்து சென்றார் அதனால் அடுத்த நாளே பழிவாங்கப்பட்டு கோவாவுக்கு
மாற்றப்பட்டார் என்று அறிந்திருந்தோம். இதையெல்லாம் கூறியது கிரண் பேடி
என்ற கிரண் கேடி தான். தன்னைப் பற்றி இப்படியான உருவகத்தை அவர்
ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களும் அதையே இத்தனை நாளும் வெளியிட்டன.
மேற்கண்ட
செய்தியை ஏப்ரல் மாதம் 2010இல் போபாலில் சமூக அறிவியல் பள்ளி
மாணவர்களிடம் அவர்களின் இசுபெக்ட்ரம் 2010 நிகழ்ச்சியில் உரையாற்றும்
போதும் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர்
ஒன்றும் செய்யவில்லை போக்குவரத்து துணை ஆய்வாளர் நிர்மல் சிங் என்பவர்
முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த மகிழுந்துக்கு அபராதம் விதித்தார்
என்பது. அச்சமயத்தில் இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அதுவும் அது பிரதமர் பயணம் செய்யும் மகிழுந்து அல்ல அது பிரதமர்
அலுவலக மகிழுந்து (DHI 1817). அங்கு வேலை செய்த யாரோ பயன்படுத்தியுள்ளார்கள்.
அம்மகிழுந்துக்கு தேவையான பொருட்களை அங்குள்ள கடையில் வாங்க
நிறுத்தியுள்ளார்கள். அதனால் அக்கடைக்கு நிர்மல் சிங் தண்டம் விதித்து சீட்டு கொடுத்துள்ளார். அக்கடையின் பாதுகாவலர் இது பிரதமர்
அலுவலக மகிழுந்து என்று கூறியும் தண்டம் விதித்தார் நிர்மல் சிங். நேர்மையான அதிகாரி நிர்மல் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய புகழை
இத்தனை காலமும் அனுபவதித்து வந்துள்ளார். இதுல கொடுமை என்னன்னா உண்மையான செய்தி கிரண் பேடியின் பக்கத்தில் உள்ளது ஆனால் எல்லோரும் அப்பக்கத்தை பார்க்காமல் கிரண் பேடி கூறியதையே நம்பினர். கிரண் பேடி கூட அவர் பக்கத்தை பார்க்காத போது அடுத்தவர்கள் பார்க்கனும் என்பது சரியல்ல :). இப்போது இவர் தளம் மீளமைக்கப்பட்டதால் பழைய செய்தி கண்ணுக்கு தட்டுப்படவில்லை. இப்போது இவர் கடையில் டீ போடுகிறார்கள். நடக்கட்டும்.
இது நடந்தது ஆகத்து
1982இல். கிரண் பேடி கோவாவுக்கு மாற்றப்பட்டது 1983 மார்ச்சில். கோவாவில்
பணியிலிருந்த இவர் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு (விடுப்பு ஏற்படவில்லை) தில்லிக்கு ஓடி வந்துவிட்டார்.
மகளுக்கு உடல் நிலை மோசமடைந்ததால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உடனடியாக தில்லி வந்தார். நிருவாக ரீதியாக அதாவது சட்டப்படி இது தவறு என்றாலும் உணர்வு வழியில் இது சரி. ஆனால் இதற்கு நேர்மாறாக மிசோரமில் நடந்தார்.
காங்கிரசு அரசு இவரை பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டதால் தான் இவருக்கு பாசக மேல் அன்பு பொங்குகியது என்பதும் வடிகட்டிய பொய். இவருக்கு காங்கிரசு
அரசாங்கம் இக்கட்டான நேரங்களில் உதவியுள்ளது. இவர் முறையற்ற முறையில் வழக்கறிஞர்கள் மேல் தடியடி
நடத்தியதை அது பற்றி விசாரித்த விசாரணை ஆணையமும் (வாத்வா ஆணையம்) கண்டித்துள்ளது. குற்றம் செய்த வழக்கறிஞரை தண்டித்தது சரி என்றும் ஆனால் எல்லா வழக்கறிஞர்கள் மேலும் தடியடி நடத்தியது தவறு என்றும் கூறியது. இவருக்கு தில்லியில் பெரிய பதவி தரக்கூடாது என்றும் அது கூறியது. இவரை
மாற்ற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை இராசீவ் காந்தியின் அரசில் அப்போது உள்துறை
அமைச்சராக இருந்த பூட்டா சிங் மறுத்துவிட்டார். இவருக்கு பாசக மேல் அன்பு பொங்கியது தவறில்லை அதற்கு காங்கிரசு அரசு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டது தான் காரணம் என்பது இவருக்கு அழகல்ல.
1992ஆம் ஆண்டு மிசோரம்
மாநிலத்திற்கு மாற்றப்பட்ட இவர் தன் மகளுக்கு அம்மாநில ஒதுக்கீட்டில்
டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். சட்டப்படி இதில்
தவறு இல்லை என்றாலும் அவ்வொதுக்கீடு மிசோரம் மாநில மலை வாழ் மக்களுக்கானது. சட்டத்தின் ஓட்டையை தனக்காக பயன்படுத்தினார். மிசோரம் மாநில தலைமைச் செயலரும் அம்மாநில ஒதுக்கீட்டில் கிரண் பேடி தன் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தவறில்லை என்றாலும் பொது நலன் கருதி அவ்வொதுக்கீட்டை பயன்படுத்தாமல் மிசோரம் மக்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. மிசோரம் இடவொதுக்கிடை இவர் பயன்படுத்தியதால் மிசோராமில் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மிசோரம் அரசும் இவர் மிசோரமில் இருப்பது ஆபத்து என்றும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு தருவது இயலாத செயல் என்றும் இவருக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்று கூறியதால் அம்மாநில நிருவாகத்தின் அறிவுரைப்படி அங்கிருந்து வந்துவிட்டார்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், மார்ச் 09, 2015
சனி, டிசம்பர் 27, 2014
சம்மு காசுமீர் தேர்தல் அலசல்
2014 ஆம் ஆண்டு சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.
இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.
மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.
பாசக லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.
தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.
காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.
அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?
மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர். இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.
சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று. சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.
பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.
People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.
சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.
தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.
முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25
இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02
குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.
மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09
நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14
ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20
முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

கட்சி | வெற்றி பெற்றது | % வாக்குகள் | மொத்த வாக்குகள் |
---|---|---|---|
பாரதிய சனதா கட்சி (பாசக) | 25 | 23 % | 11,07,194 |
மக்களின் சனநாயக கட்சி | 28 | 22.7 % | 10,92,203 |
தேசிய மாநாட்டு கட்சி | 15 | 20.8 % | 10,00,693 |
காங்கிரசு | 12 | 18% | 8,67,883 |
மார்க்சிய பொதுவுடைமை | 1 | 0.5% | 24,017 |
மக்கள் கூட்டமைப்பு | 2 | 1.9% | 93,182 |
மக்கள் சனநாயக முன்னனி | 1 | 0.7% | 34,886 |
கட்சி சாராதவர்கள் | 3 | 6.8% | 3,29,881 |
மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர். இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.
சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று. சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.
பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.
People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.
சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.
தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.
முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25
சம்மு பகுதி: (6) | பாசக | 04 |
---|---|---|
காங்கிரசு | 02 | |
காசுமீர் பகுதி: (5) | காங்கிரசு | 01 |
தேசிய மாநாடு | 04 | |
லடாக் பகுதி: (4) | காங்கிரசு | 03 |
கட்சி சாராதவர் | 01 |
இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02
சம்மு பகுதி: (9) | பாசக | 03 |
---|---|---|
காங்கிரசு | 03 | |
தேசிய மாநாடு | 01 | |
மக்களின் சனநாயகம் | 01 | |
கட்சி சாராதவர் | 01 | |
காசுமீர் பகுதி: (9) | காங்கிரசு | 01 |
தேசிய மாநாடு | 01 | |
மக்களின் சனநாயகம் | 03 | |
மார்க்சிய பொதுவுடமை | 01 | |
மக்கள் கூட்டமைப்பு | 02 | |
கட்சி சாராதவர் | 01 |
குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.
மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09
காசுமீர் பகுதி: (16) | காங்கிரசு | 01 |
---|---|---|
தேசிய மாநாடு | 03 | |
மக்களின் சனநாயகம் | 11 | |
மக்களின் சனநாயக முன்னனி | 01 |
நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14
சம்மு பகுதி: (2) | பாசக | 02 |
---|---|---|
காசுமீர் பகுதி: (16) | தேசிய மாநாடு | 04 |
மக்களின் சனநாயகம் | 11 | |
காங்கிரசு | 01 |
ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20
சம்மு பகுதி: (20) | பாசக | 16 |
---|---|---|
மக்களின் சனநாயகம் | 02 | |
தேசிய மாநாடு | 02 |
முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்
வெள்ளி, டிசம்பர் 05, 2014
இப்போது கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன ?அலசல்
உலக அரசியலில் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன? பாதிப்பு நமக்கு உண்டே அதை தெரிஞ்சுக்க வேண்டாம்?
யூலை முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது தெரியும் இதற்கு காரணம் கச்சா எண்ணெயால் அதிக லாபம் அடையும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தருவதாக இருக்கலாம். உருசியாவின் பொருளாதார பலம் அதன் கச்சா எண்ணெய் தான். அடிமடியில் கையை வைத்தால் உருசியா உக்ரைனுக்கு தரும் நெருக்கடி குறையும் மேற்கின் பலம் அங்கும் பல இடங்களிலும் அதிகரிகரிக்கும்.
கவனித்துப்பார்த்தால் யூலை மாதம் தான் மலேசிய வானூர்தி புரட்சி\கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. புரட்சி\கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் கிழக்கிலுள்ள சுலோவின்சுக் நகரை அரசின் படைகளிடம் விட்டு விட்டு ஓடியதும் அப்போது தான் (அரசு படையின் தாக்குதல் தீவிரம்).
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதால் உருசியா மீது சில பொருளாதார தடை விதித்ததும் அம்மாதத்தில் தான். உருசியா இதை மறுக்கிறது என்பது வேற. உருசியா ஆதரவு இல்லாம புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும்? தெரிந்த இரகசியம் என்பது இது தான்.
ஏன் உருசியா உக்ரைன் விடயத்தில் தலையிட வேண்டும்?. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் உக்ரைன் உருசிய பேரரசின் பிடிக்குள் தான் எப்போதும் இருந்துள்ளது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் காட்டும் நெருக்கமும் நேட்டோ உருசியாவின் அண்டை நாடுகளில் தளம் அமைப்பதும் அதற்கு உவப்பாக இல்லை. உக்ரைனும் நேட்டோவின் கைகளுக்குள் போவதை தடுக்க முயல்கிறது. நேட்டோ பக்கத்தில் வருவது உருசியாவின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல். பல நாடுகள் இணைந்தது நேட்டோ என்றாலும் நடைமுறையில் அது அமெரிக்காவின் முகமூடி. இது எல்லொரும் அறிந்ததே.
இப்போதும் நேட்டோ உக்ரைனை தங்களுடன் சேர்ப்பதில்லை என்ற உறுதியை உருசியாவானது நேட்டோவிடம் கேட்கிறது. அதை அவர்கள் தந்தால் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை நிறத்திவிடுவதாகவும் அவர்களை உக்ரைன் அரசுடன் இணைந்து இருக்குமாறும் சொல்வதாக கூறுகிறது. அப்படி சொல்லவில்லை ஆனால் உறுதி கிடைத்தால் கொடுக்கபோகும் பதில் அதுதான். இது வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
2011, 2012, 2013ம் ஆண்டுகளை விட இப்போது எப்படி பாறைநெய் பயன்பாடு குறையும்? கிணறுகளில் இப்போது கச்சா எண்ணெய் குறைந்திருக்கும். ஆனா விலை???? எப்படி? கணக்கு உதைக்குதே. 2010இல் கூட இன்றைய விலையை விட அதிகம்.
பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் (Shale oil) எடுப்பது காரணமாக சொல்லப்பட்டாலும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தான் உண்மையான காரணமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
அந்த அளவுக்கா பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து விட்டார்கள்? அதில் எடுத்த விபரம் வெளியே வரலையே.
பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய்- இதை களிப்பாறை கச்சா எண்ணெய் எனலாமா?
நம்மூர் அரசியலே பெரிசா இருக்கு இதுல உலக அரசியல் நமக்கு எதுக்கு? ஆனா அதன் பாதிப்பு நம்மை தாக்கும்.
நம்மூர் பக்த கோடிகள் விலை குறைந்ததற்கு மோதி தலைமையில் நடுவண் அரசு அமைந்தது தான் காரணம் என்று கூறாமல் இருந்தால் சரி. இப்படியும் கூறுவார்கள் அதையும் சிலர் நம்புவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
டிசம்பர் 1 அன்று விலை குறைந்துள்ளது. ஆமா நமக்கு எவ்வளவு விலைய குறைச்சு இருக்காங்க?
பாறைநெய், டீசல் போன்றவற்றின் குறைந்த விலைகுறைப்புக்கு ஏமாறாதிங்க மக்களே. சந்தைவிலையை பொருத்து விலை நிர்ணயம் என்று சொல்லி விலையை ஏத்தும் போது கடுமையா ஏத்திட்டு குறைக்கும் போது ????
பாறைநெய் விலை அதிகரித்தது என்றால் விலை நிர்ணயமானது கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சார்ந்தது என்பார்கள்.
2010லிருந்து பாறைநெய் விலை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இது சென்னையை அடிப்படையாக கொண்ட விலை நிலவரம்:
ஆண்டு 2010
2010இல் விலை ஒரு முறை கூட குறையவில்லை.
ஆண்டு 2011

![]() |
5 ஆண்டு விலை நிலவரம் |

ஓர் ஆண்டின் விலை நிலவரம் |

ஓர் ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு |
5 ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு |
2010லிருந்து பாறைநெய் விலை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இது சென்னையை அடிப்படையாக கொண்ட விலை நிலவரம்:
ஆண்டு 2010
தேதி | விலை |
---|---|
பிப்பரவரி 2 | 51.59 |
ஏப்பிரல் 1 | 52.13 |
யூன் 26 | 55.92 |
செப்டம்பர் 8 | 56.02 |
செப்டம்பர் 21 | 56.31 |
அக்டோபர் 17 | 57.09 |
நவம்பர் 9 | 57.44 |
டிசம்பர் 16 | 60.65 |
2010இல் விலை ஒரு முறை கூட குறையவில்லை.
ஆண்டு 2011
தேதி | விலை |
---|---|
மார்ச்சு 2 | 61.63 |
மே 15 | 67.22 |
யூலை 1 | 67.5 |
செப்டம்பர் 16 | 70.82 |
நவம்பர் 4 | 72.73 |
நவம்பர்16 | 70.38 |
டிசம்பர் 1 | 69.55 |
ஆண்டு 2012
தேதி | விலை |
---|---|
மே 24 | 77.53 |
யூன் 3 | 75.4 |
யூன் 29 | 72.27 |
யூலை 24 | 73.16 |
யூலை 25 | 72.19 |
ஆகசுட்டு 1 | 72.19 |
அக்டோபர் 9 | 71.48 |
அக்டோபர் 27 | 71.77 |
நவம்பர் 16 | 70.57 |
ஆண்டு 2013
தேதி | விலை |
---|---|
சனவரி 1 | 70.58 |
சனவரி 18 | 70.26 |
பிப்ரவரி 16 | 72.17 |
மார்ச்சு 2 | 73.95 |
மார்ச்சு 16 | 71.41 |
ஏப்பிரல் 2 | 70.34 |
ஏப்பிரல் 16 | 69.08 |
மே 1 | 65.9 |
யூன் 1 | 66.85 |
யூன் 16 | 69.39 |
யூன் 29 | 71.71 |
யூலை 15 | 73.6 |
ஆகசுட்டு 1 | 74.49 |
செப்டம்பர் 1 | 77.48 |
செப்டம்பர் 14 | 79.55 |
அக்டோபர் 1 | 75.68 |
நவம்பர் 1 | 74.22 |
டிசம்பர் 21 | 74.71 |
ஆண்டு 2014
தேதி | விலை |
---|---|
சனவரி 4 | 75.71 |
மார்ச்சு 1 | 76.48 |
ஏப்பிரல் 1 | 75.49 |
ஏப்பிரல் 16 | 74.6 |
யூன் 7 | 74.71 |
யூன் 25 | 74.76 |
யூலை 1 | 76.93 |
ஆகசுட்டு 1 | 75.78 |
ஆகசுட்டு 15 | 73.47 |
ஆகசுட்டு 31 | 71.55 |
அக்டோபர் 1 | 70.87 |
அக்டோபர் 15 | 69.59 |
நவம்பர் 1 | 67.01 |
டிசம்பர் 1 | 66.05 |
பாசக ஆட்சிக்கு வந்து 6 முறை விலை குறைந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் விலை குறையவில்லை.
நானும் விலை குறைச்சிருக்கேன் என்று சொல்லி மக்களை நம்பவைக்க இது உதவும். ஆனா விவரம் தெரிஞ்சவன் கிட்ட இந்த பருப்பு வேகாது, ஆனா ஊடகங்களும் அரசின் ஊதுகுழலா இருந்து மக்களை நம்பவைக்கும்.
கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பாறைநெய் விலையை அரசு குறைக்க சொல்லாமல் இறக்குமதியாகும் கச்சா எண்ணைய்க்கு மூன்று வார இடைவெளிக்குள் பாறைநெய்க்கு லிட்டருக்கு 3.75 ரூவா என்றும் டீசலுக்கு லிட்டருக்கு 2.5 ரூவா என்றும் உற்பத்தி வரி விதித்து (அதிகரித்து, முன்னமே வரி உண்டு) பொதுமக்களுக்கு விலை குறைவு ஏற்படாமல் செய்துள்ளது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் 40 % அளவுக்கு குறைந்துள்ளது ஆனால் பாறைநெய் 11%, டீசல் 8% மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சுட்டியில் விரிவாக போட்டுள்ளார்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)