வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மார்ச் 03, 2010

சுவாமி விஜய் மல்லய்யாவின் தத்துவம்

பலான சாமியார் நித்தியானந்தா பேச்சு அதிகமிருப்பதால் இந்த இடுகையை இப்ப எழுதறேன்னு நினைச்சுக்காதிங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.

"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா

ஆங்கில மூலம்

“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா





எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.

Please forward this mail to 10 people…Miracle awaits you.

** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.

** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.

** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.

** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.

** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.


மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.

.

செவ்வாய், மார்ச் 02, 2010

முக்கோணத்தில் புதிர்.

மேல் முக்கோணமும் கீழ் முக்கோணமும் ஒரே அளவு உள்ளவை. மேலுள்ள முக்கோணத்தின் நான்கு பாகங்களை இடம் மாற்றி கீழுள்ள முக்கோணத்தில் வைத்துள்ளார்கள். அப்படி வைக்கும் போது கொஞ்சம் இடம் (ஒரு கட்டம்) மிஞ்சி இருக்கு. எப்படி இது?


ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இரண்டாம் சுற்று பனிப்பொழிவு - புகைப்படம்

2010 பிப்ரவரி மாதம் 2 அடிக்கு மேல் பனிப்பொழிவு இருந்ததையும் அதன் படங்களையும் போன இடுகையில் இட்டிருந்தேன். மூன்று நாள் கழித்து செவ்வாய்கிழமை இரவிலிருந்து புதன் கிழமை நண்பகல் வரை அடுத்த சுற்று பனிப்பொழிவு இருந்தது. 1 அடிக்கு மேல் வரும் என்று சொன்னாலும் 7 அங்குல அளவுக்கு தான் பனிப்பொழிவு இருந்தது. இரவில் அதிக அளவு பனிப்பொழிவு இல்லை. காலையில் கடும் காற்றுடன் நிறைய பனிப்பொழிவு இருந்தது. குளிரை கூட தாங்கிடலாம், ஆனா காற்றுடன் வரும் குளிர் கொடுமையானது. கடும் காற்று என்றால் நிலைமை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். கடும் காற்றுடன் பனி பெய்ததால் 15 அடி தள்ளி உள்ள பொருட்கள் கூட தெரியவில்லை. இதனால் பனி அள்ளும் வேலையை கூட நகர அரசுகள் ஒத்தி வைத்தன. மாலை ஐந்து மணிக்கு மேல் புகைப்படம் எடுக்கலாம் என்று வெளியே சென்றேன். திடீர் திடீர் என்று காற்று அடித்தது, காற்றின் போது குளிர் அதிகமாக இருந்ததால் ஏன்டா வெளியில் வந்தோம் என்று ஆகிவிட்டது. 5 நிமிடம் கூட வெளியில் இருந்து இருக்கமாட்டேன். கையுறையையும் தாண்டி கை சில்லென்று ஆகிவிட்டது, எந்தளவு குளிர் இருந்திருக்கும் என்று பாருங்கள்.

வரும் திங்கள் இரவு 5 அங்குலத்துக்கு பனி இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

1. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி. பனி அள்ளிய பிறகும் நிறைய பனி மீதம் இருக்கு, முழுமையாக சுத்தப்படுத்த குறைந்தது4 நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.



2. நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டாலும் சாலை இன்னும் முழுவதுமாக சுத்தப்படுத்தப்படவில்லை. நடைபாதையை சுத்தப்படுத்தியது அதை ஒட்டியுள்ள நிறுவனம், அரசு அல்ல.



3. சாலை சந்திப்பு, பனி அள்ளும் எந்திரம் வேலையில் உள்ளது.


.
.