வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூலை 18, 2006

அமெரிக்காவில் கண்ணையன்

அமெரிக்காவுக்கு வந்த 'கண்ணன்' ஒரு 'பீரங்கி' ஆனார். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
அமெரிக்கர்கள் கண்ணனை '"கேனன்'" என்று தான் உச்சரிப்பார்கள். பெருமையா இருக்கா? நல்லது.

ஆனா பாருங்க அமெரிக்காவில் "கண்ணையன்" பொழப்புதான் மோசம். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
கண்ணன் 'கேனன்' ஆனா கண்ணையன் "கேனயன்" ஆகிடுவாரே.

வெள்ளி, ஜூலை 07, 2006

இலங்கையில் தடை செய்யப்பட்டவை.


1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்"

2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்"

3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி "

4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி"

5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்".

6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார்.

7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை"

8) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " டைகர் வுட்ஸ் "

9) இலங்கை அரசுக்கு பிடிக்காத விலங்கு "புலி".

10) இலங்கையில் தடை செய்யப்பட்ட உணவு பண்டம் " புளி " புளியை புலியா நினைத்து தடை பண்ணிட்டாங்க. அதனால கொழும்பு போனா புளிக் குழம்பு வேண்டும், புளி இரசம் வேண்டும் என்று கேட்காதிங்க. ஆனா அதிரசம் கிடைக்கும். :-)

11) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஏப்பம் "புளி ஏப்பம்" புளியை புலியா நினைத்து தான் காரணம்.


புதன், ஜூலை 05, 2006

AIIMS போராட்டத்தால் இதய நோயாளி மரணம்

உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.



http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&



என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.