வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
SHAVED CANDLESTICK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SHAVED CANDLESTICK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜூலை 31, 2019
வழுக்கைகள் SHAVED CANDLESTICK
மேல் வழுக்கை
ஓருலக்கை ஒழுங்கான மேல் வழுக்கைக்கு மேல் குச்சி இருக்காது. பார்க்க சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.
இது சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது?
சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான கீழ் குச்சி இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள கீழ் குச்சி இருக்காது.
கீழ் வழுக்கை
ஓருலக்கை ஒழுங்கான கீழ் வழுக்கைக்கு கீழ்குச்சி இருக்காது. பார்க்க தலைகீழ் சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது தலைகீழ் சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. தலைகீழ் சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.
இது தலைகீழ் சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது?
தலைகீழ் சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான மேல் குச்சியும் இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள மேல் குச்சி இருக்காது.
குறிச்சொல்
பங்கு சந்தை,
வழுக்கைகள்,
SHAVED CANDLESTICK
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)