தமிழ் விக்கிப்பீடியா மூலம் தெளிவா கத்துக்கிட்டேன்
அதாவது வெண்பா 2 முதல் 12 அடிகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு அடியிலும் 4 வார்த்தைகள் இருக்கனும் ஆனா கடைசி அடியில் 3 வார்த்தை தான் இருக்கனும்.
திருக்குறள் 2 அடியில் உள்ள வெண்பா.
ஈரசைச்சீர் வரும். மூவசையில் கனிச்சீர் (தேமாங்கனி, ..) வராது. காய்ச்சீர் மட்டும் வரும்.
ஈரசைச்சீர்கள் - தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
மூவசைசீர்கள் - தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் மட்டுமே வெண்பாவில் வரும்.
காய்ச்சீருக்கு அடுத்து நேர் அசை தான் வரனும் அதாவது தே.மாங்.காய் இதற்கு அடுத்து தே.மா அல்லது கூ.விளம் தான் வரனும்.
தளை தட்டுது என்பார்கள். தளை தட்டாமல் இருக்கனும். வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
- இயற்சீர் வெண்டளை - மாச்சீருக்கு அடுத்து நிரை அசையே வருனும். அதாவது தேமா, புளிமாவுக்கு அடுத்து கூவிளம், கருவிளம், கூவிளங்காய், கருவிளங்காய் தான் வரனும் அதே மாதிரி விளச்சீருக்கு அடுத்து நேர் அசையே வரனும் அதாவது கூவிளம், கருவிளம் என்பவற்கு அடுத்து தேமா, தேமாங்காய், கூவிளங்காய் தான் வரனும்.
- வெண்சீர் வெண்டளை - காய்சீருக்கு அடுத்து நேரசையே வரனும். அதாவது மூவசைச்சீர்களான காய்ச்சீருக்கு அடுத்து தேமா, கூவிளம் தான் வரனும்.
மாமுன்நிரை விளமுன்நேர் காய்முன்நேர் என்ற இலக்கண நெறிகளை மனதில் கொண்டால் தலை அல்ல தளையை பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஈற்றுச்சீர் அதாவது இறுதி அடியில்(வரி) உள்ள கடைசி சொல் நாள், காசு, மலர், பிறப்பு என்பது மாதிரி முடியவேண்டும்.
ஈற்றுச்சீர் அதாவது இறுதி அடியில்(வரி) உள்ள கடைசி சொல் நாள், காசு, மலர், பிறப்பு என்பது மாதிரி முடியவேண்டும்.
அசை பிரிப்பது எப்படி?
மெய் எழுத்து இருந்தால் அது தான் கடைசி
கப் , காக், வாய்க் - நேரசை
விளம், டமாம், மலர்க் நிரையசை
கபாலி கபா.லி - நிரை. நேர்
மாதம் மா.தம் , வேண்டு வேண்.டு - நேர் . நேர்
அதாவது நெடிலுக்கு முன் குறில் வரலாம். அது நிரை ஆகிவிடும். நெடிலுக்கு பின் குறில் வராது. மெய் எழுத்து (புள்ளி வைத்த எழுத்து) வரலாம்.
நெடில் வந்தால் அதனுடன் அசை பிரிப்பு நின்று விடும் & புள்ளி வைத்த எழுத்து (மெய் எழுத்து) உடன் அசை பிரிப்பு நின்று விடும்
காட்டு :- வாண்டு , காதணி -வாண்.டு , கா.தணி
வெண்பாவுக்கான இலக்கண நெறி - மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் என்பதாகும்.
மாமுன் நிரை - தேமா, புளிமாவிற்கு அடுத்த சொல் நிரை அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்,
விளமுன் நேரும் - கூவிளம், கருவிளம் போன்றவற்றிற்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும். காய் சீராக இருந்தாலும் அது கூவிளங்காய், கருவிளங்காயில் ஆரம்பமாக கூடாது.
காய்முன் நேரும் வரும். - மூவிசை சீர்களான காய்ச்சீருக்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்.
திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு
என்ற நளவெண்பா பாட்டை எடுத்துக்கொள்வோம். இது எப்படி அசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த சொற்கள் எந்த சீர் என்பதையும் பார்ப்போம். குறள் வெண்பா தான் எடுத்துக்காட்டுக்கு சுலபம் என்றாலும் நான் நேரிசை வெண்பாவான நளவெண்பா பாட்டை எடுத்துக்கொண்டுள்ளேன்.

திசை| முகந்| த வெண்| கவி| தைத் தேர்| வேந்| தே உன்| றன்
நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
இசை| முகந்| த தோ| ளுக் கிசை| வாள் வசை| யில்
நிரை நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர்
கருவிளங்காய் தேமா புளிமா புளிமா
தமை| யந்| தி யென்| றோ| துந் தை| யலாள் வென்| றோள்
நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர்
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
அமை| யந்| தி யென்| றோ ரணங்| கு
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை பு
புளிமாங்காய் தேமா பிறப்பு
பிறப்பு & காசு ஆகியவற்றில் உள்ள இறுதி அசையை நேர்பு என்பர்
பிறப்பு = பிறப்| பு - நிரை நேர்பு
காசு = கா| சு - நேர் நேர்பு
இறுதியில் குற்றியலுகரம் வரவேண்டும் ஆனால் அது சு வு லு பு உ ளு ழு னு ணு மு ஙு நு து போன்ற "உ"கர குற்றியலுகரமாக இருக்க வேண்டும்
நாள், மலர் போன்றவை நேர், நிரை அவ்வளவு தான். இதற்கு சிறப்பு விதிகள் இல்லை. அதாவது
நாள் - நேர் அசை; காட்டு - புல் பல் பால் மா க .
மலர் -நிரை அசை; காட்டு- மது இதே அல்லி மல்லி பொழில் கலாம்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் - என்ற குறளையும்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்ற குறளையும் அசை பிரித்துப் பாருங்கள்.
விக்கி மூலத்தில் நளவெண்பா உள்ளது.
6 கருத்துகள்:
நல்ல விளக்கம் ,நான் படித்தேன் முயற்சிக்க வில்லை
நல்ல விளக்கம் ,நான் படித்தேன் முயற்சிக்க வில்லை
நல்ல விளக்கம் ,நான் படித்தேன் முயற்சிக்க வில்லை
தேன் தடவித் தந்த
வெண்பா மருந்து கசக்கவில்லை
தெம்பூட்டிப் போகிறது
வாழ்த்துக்களுடன்..
முயன்று பாருங்கள் அபயா அருணா நல்ல வேலை அபாய அருணாவாக நீங்கள் இல்லை ;)
நன்றி இரமணி வெண்டுறையில் வாழ்த்திட்டிங்க. நான் அவலோகிதம் என்ற வலை தளத்தை பாட்டு என்ன பா என்று அறிய பயன்படுத்துகிறேன். http://www.avalokitam.com/
கருத்துரையிடுக