இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.
மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.
பாசக லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.
தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.
காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.
அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?
கட்சி | வெற்றி பெற்றது | % வாக்குகள் | மொத்த வாக்குகள் |
---|---|---|---|
பாரதிய சனதா கட்சி (பாசக) | 25 | 23 % | 11,07,194 |
மக்களின் சனநாயக கட்சி | 28 | 22.7 % | 10,92,203 |
தேசிய மாநாட்டு கட்சி | 15 | 20.8 % | 10,00,693 |
காங்கிரசு | 12 | 18% | 8,67,883 |
மார்க்சிய பொதுவுடைமை | 1 | 0.5% | 24,017 |
மக்கள் கூட்டமைப்பு | 2 | 1.9% | 93,182 |
மக்கள் சனநாயக முன்னனி | 1 | 0.7% | 34,886 |
கட்சி சாராதவர்கள் | 3 | 6.8% | 3,29,881 |
மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர். இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.
சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று. சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.
பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.
People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.
சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.
தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.
முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25
சம்மு பகுதி: (6) | பாசக | 04 |
---|---|---|
காங்கிரசு | 02 | |
காசுமீர் பகுதி: (5) | காங்கிரசு | 01 |
தேசிய மாநாடு | 04 | |
லடாக் பகுதி: (4) | காங்கிரசு | 03 |
கட்சி சாராதவர் | 01 |
இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02
சம்மு பகுதி: (9) | பாசக | 03 |
---|---|---|
காங்கிரசு | 03 | |
தேசிய மாநாடு | 01 | |
மக்களின் சனநாயகம் | 01 | |
கட்சி சாராதவர் | 01 | |
காசுமீர் பகுதி: (9) | காங்கிரசு | 01 |
தேசிய மாநாடு | 01 | |
மக்களின் சனநாயகம் | 03 | |
மார்க்சிய பொதுவுடமை | 01 | |
மக்கள் கூட்டமைப்பு | 02 | |
கட்சி சாராதவர் | 01 |
குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.
மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09
காசுமீர் பகுதி: (16) | காங்கிரசு | 01 |
---|---|---|
தேசிய மாநாடு | 03 | |
மக்களின் சனநாயகம் | 11 | |
மக்களின் சனநாயக முன்னனி | 01 |
நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14
சம்மு பகுதி: (2) | பாசக | 02 |
---|---|---|
காசுமீர் பகுதி: (16) | தேசிய மாநாடு | 04 |
மக்களின் சனநாயகம் | 11 | |
காங்கிரசு | 01 |
ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20
சம்மு பகுதி: (20) | பாசக | 16 |
---|---|---|
மக்களின் சனநாயகம் | 02 | |
தேசிய மாநாடு | 02 |
முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்