கொலம்பிய நாட்டின் பெண்கள் மிதிவண்டி குழு இடுப்பிற்கு சற்று மேலிருந்து (அதாவது வயிற்று பகுதியிலிருந்து) தொடை வரை தோல் நிறத்தில் ஆன உடையை அணிந்திருப்பது பெரிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.
முதலில் அவர்கள் அந்த ஆடையுடன் காட்சியளித்தை போட்ட பிபிசி பிபிசியில் தான் நான் அச்செய்தியை பார்த்தேன், மற்றவர்களும் வெளியிட்டுருக்கலாம். தோல் நிறத்தில் உள்ள பகுதியை கறுப்பு கோடு கொண்டு அழித்து வெளியிட்டது.
கறுப்பு கோட்டால் மறைக்கப்பட்ட உடையுடன் பெண்கள் குழுவினர் |
கொலம்பிய தலைநகர் பகோடாவில் அவ்வுடையை அணிந்து அவ்வுடையில் தவறு இல்லை என்று அக்குழுவினர் கூறினார்கள்.
இது தான் தோல் நிறத்தை கொண்டுள்ள அவ்வுடை |
அக்குழுவின் உறுப்பினரான ஆஞ்சி ரோசா இவ்வுடையை வடிவமைத்தார். தடகள மற்றும் மிதிவண்டி ஓட்டுபவரான தான் இவ்வுடையால் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இதுவும் மற்ற உடைகளைப்போன்றதே என்றார்.
பன்னாட்டு மிதிவண்டி சங்கத்தின் தலைவர் பிரையன் கூக்சன் இந்த உடைகள் கண்ணியமாக இல்லை என்றும் இவை அனுமதிகப்பட முடியாதவை என்றும் கூறினார்.
மறைக்கப்படாமல் முழுஉடையுன் பெண்கள் குழுவினர் |
இந்த உடையை இவர்கள் அடுத்த வாரம் கொலம்பியா சார்பாக எசுப்பானியாவில் நடைபெறும் பொன்பிராடாவின் உலக வாகையாளருக்கான போட்டியில் அணிவார்களா என்று தெரியவில்லை. இவ்வாரம் இத்தாலியில் நடந்த மிதிவண்டி போட்டியில் இவ்வுடையுனேயே கலந்து கொண்டார்கள்.
இப்போது கறுப்பு பகுதியை விலக்கிவிட்டு முழுவதுவாக அவர்கள் படத்தை பிபிசி போட்டுள்ளது. பிபிசியின் இம்மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக