யாரு எதை அதிகமாக குடிக்கிறார்கள் என்ற உன்னதமான செயலை குவார்ட்சு (Quartz)என்ற இதழ் தெரிந்து வெளியிட்டுள்ளது. யுரோமானிட்டர் ( Euromonitor) அப்படிங்கிற சந்தையை ஆய்வு செய்யும் நிறுவனம் குவாட்டருக்கு உதவியிருக்கு.
இதுல நாமும் சீனாவும் நேர் எதிர். அவன் பிராந்தி நாம விசுகி. அவனுக்கு ஆதரவு பிலிப்பைன்சு மட்டுமே.
சௌதி அரேபியாவில் அதிகம் விற்பனையாவது விசுகியாம்.
அமெரிக்காகாரன் அதிகம் காலி பண்ணுவது வோட்கா.
தென்அமெரிக்காவில் அதிகம் விற்பனையாவது ரம்.
மெக்சிக்கோகாரனுங்களுக்கு மட்டும் டக்கிலா மீது காதல்.
ஜின்னை (இது பொம்பளை சரக்காமே?) அதிகமா குடிக்கறவன் நெதர்லாந்து ஆளு.
ஆசியாவில் விசுகி தான் டாப்பு. இப்ப புரியுது ஏன் மல்லையா பணம் சம்பாதிரிக்கறான்னு.
பிரேசிலில் வோட்கா போர்ச்சுகலில் விசுகி ஏன் இந்த வேறுபாடு என்று தான் புரியலை.
இங்கிலாந்து காரன் விசுகி நிறைய குடிப்பான்னு பார்த்தா அங்க வோட்கா ராச்சியம் தான்.
விசுகி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து, எகிப்து, சௌதி அரேபியா, தாய்லாந்து, தென்கொரியா, சப்பான், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, வெனிசுலா, அர்சென்டினா, எசுப்பானியா, போர்ச்சுகல், பெல்ஜியம், டென்மார்க், சுவீடன், கிரேக்கம், பிரான்சு
பிராந்தி:
சீனா, பிலிப்பைன்சு
ரம்:
சிலி, கொலம்பியா, பெரு, இத்தாலி
வோட்கா:
அமெரிக்கா, கனடா, உருசியா, பிரேசில், இங்கிலாந்து, அயர்லாந்து, நார்வே, செருமனி, போலந்து, உக்ரைன், துருக்கி, பின்லாந்து, செக் குடியரசு, சுவிச்சர்லாந்து, ஆசுதிரியா, சுலோவாக்கியா, அங்கேரி, ருமேனியா, பல்கேரியா, மொராக்கோ
ஜின்:
நெதர்லாந்து
டக்கிலா:
மெக்சிக்கோ
ஆக உலகில் அதிகம் விற்பனையாவது வோட்காவும் விசுகியும்.
http://qzprod.files.wordpress.com/2014/01/liquor-map21.png
2 கருத்துகள்:
வித்தியாசமான போதைத் தகவல்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி. இந்தியக்குடிமகனுக்கு இது தெரியாட்டி அசிங்கமாச்சே இஃகிஇஃகி
கருத்துரையிடுக