வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், அக்டோபர் 23, 2012

என்னுடைய நிழற்படம் பல தளங்களில்

எனக்கு நிழற்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சிறந்த நிழற்படம் கலைஞனாவது எனது ஆசைகளில் ஒன்று. தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பதிவு மூலம் நிழற்படம் பற்றி நான் அறிந்து கொண்டது நிறைய. படித்ததை செயல் படுத்தி பார்த்தேனா என்பது தனி. அப்படி செய்திருந்தால் இன்னேரம் பெரிய ஆளா வந்திருப்பேன். அவர்கள் மாதந்தோறும் நடத்தும் போட்டிகள் சிலவற்றில் நான் கலந்துகொண்டுள்ளேன். நிறைய போட்டிகளில் கலந்துக்க முடியாம போனதுக்கு காரணம் சிறந்த படத்தை அனுப்பவேண்டும் என்று நினைத்து அதை எடுப்பதற்குள் போட்டிக்கு படங்கள் அனுப்பவேண்டிய இறுதி நாள் வந்துடும். மாத போட்டிக்கு 2 மாசம் எடுத்துக்கிட்டா  எப்படி? இஃகி இஃகி.

5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து  இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா  என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை,  .....


5 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

அந்த படங்களுக்கான சுட்டியைக் குடுங்க முதல்ல... சும்மா நாயம் பேசிட்டு!!

குறும்பன் சொன்னது…

அந்த படத்தையே உங்களுக்கு அனுப்பறேன்.

பழமைபேசி சொன்னது…

அனுப்புங்க வெரசா!

குறும்பன் சொன்னது…

அந்த படத்தை பதிவேற்றியாச்சே, இன்னும் நீங்க பார்க்கலையா. குறிப்பு:- உங்க தனிப்பட்ட மயிலுக்கு அனுப்பலை.

குறும்பன் சொன்னது…

நான் எடுக்க தவறிய படங்கள் தண்ணீர் நிறைய இருந்த போது பாலாற்றை கடந்தேன் அப்போ அதை படம் பிடிக்க தவறிட்டேன். மொடக்குறிச்சி பக்கம் காளிங்கராயன் வாய்க்கால் வயல்களுக்கு நடுவே பாய்ந்து சென்றது அழகான அக்காட்சியை படம் பிடிக்க தவறிட்டேன். பவானி கூடுதுறை சிவன் கோயிலுக்கு 7 மணி வாக்குல போனதால் வெளிச்சம் இல்லாததால் காவிரி, பவானி & காவிரி பவானி கூடுவதையும் குமாரபாளையத்தையும் பவானியையும் இணைக்கும் பாலத்தையும் எடுக்க முடியவில்லை.