நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.
எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும். அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.
எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.
ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.
அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு, ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.
கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.
காட்டு: விலை எச்சா இருக்கே.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், செப்டம்பர் 20, 2010
சனி, செப்டம்பர் 04, 2010
போக்குவரத்து நெரிசல் 100 கிமீ தூரத்துக்கு
சீனாக்காரங்க எதை பண்ணுனாலும் பெரிசா தான் பண்ணுவாங்க. உலகத்திலேயே நீளமான சுவர் எது சீனப் பெருஞ்சுவர் தான். இப்ப அவங்க கட்டியிருக்கும் மூன்று ஆழ் பள்ளத்தாக்கு அணை தான் அணைகளிலேயே மிகப்பெரியது. மிகப்பெரிய கடல் வழி பாலம் எதுன்னா 32.673 கிமீ நீளமுள்ள கன்சு பே பாலம் (Hangzhou Bay Bridge) தான். நில வழி பாலமும் சீனாவில் தான் இருக்கு அது வினன் விகி பெரிய பாலம் (Weinan Weihe Grand Bridge).
இந்த மாதிரி பெரிசுகளுக்கு சொந்த காரங்களான சீனர்களுக்கு குறையாக இருந்த மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் என்ற பெயரும் தற்போது கிடைத்து விட்டது. கிட்டதட்ட 100 கிமீக்கு வண்டிங்க நின்னுது. 10 நாட்களுக்கு மேலாகியும் இது சரியாகலை. நிலக்கரி ஏற்றிக்கிட்டு வர சுமையுந்துகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை. இந்த நெரிசலுக்கு காரணமும் அவை தான், வடக்கில் உள்ள உள் மங்கோலியா மாகாணத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கிட்டு வருவதால் நெரிச்சல் (வரும் வண்டிகளின் எண்ணிக்கையை பீஜிங் நகர எல்லையில் உள்ள பகுதி சமாளிக்க முடியலை மேலும் பீஜிங் நகர எல்லையிலுள்ள சாலையில் மேம்பாட்டு பணி நடந்துகிட்டு இருக்கு இதனால் நெரிச்சல் அதிமாயிடுச்சி. வடக்கே உள்ள திபெத்-பீஜிங் சாலையில் தான் இது நடந்துக்கிட்டிருக்கு. எதுக்கு திபெத் பேர் வச்சாங்க? திபெத் தென் மேற்கு மூலையில் அல்ல இருக்கு? ஏதாவது தொடர்பு இருக்கா??? எதிர்காலத்தில் மங்கோலியாவை ஆட்டய போட இது அச்சாரமா? என்னமோ ஒன்னும் புரியலை. பீஜி்ங் முதல் ஜினிங் (Jining) வரை நெரிசல் இருக்காம்.
பாவம்யா லாரி ஓட்டுனர்கள்.
விசைக்கு எதிர் விசை இருக்குமில்லையா. மாபெரும் நெரிசல் மூலமா பலருக்கு எரிச்சல் இருந்தால் சிலருக்காவது குளிர்ச்சி இருக்கனுமில்லையா? பத்து பதினைந்து நாளா வண்டி அங்குலம் கூட நகராம இருக்கறப்ப அதுக்கு தீனி வேணாம் ஆனா அதில் இருக்கும் மக்களுக்கு? குடிக்க தண்ணி, திங்க சோறு வேணுமே. அதுக்கு அவங்க எங்க போவாங்க? எங்கயும் போக முடியாது. சாலையோரம் உள்ள ஊர்க்காரங்க தான் கதி. இதையறிந்த ஊர்க்காரங்க சாலையில் எங்கும் போகமுடியாம மாட்டிக்கிட்டு இருக்கற வண்டியோட்டிகளுக்கு தண்ணி, சோறு எல்லாம் கொடுத்து உதவராங்க. என்ன எல்லாத்தையும் உண்மையான விலையை விட 5 முதல் 10 மடங்கு விலை வைத்து கொடுக்கறாங்க அதாவது விக்கறாங்க. நல்ல வசூல் வேட்டை தான். இதுபோன்ற ஒரு வாய்ப்பு இன்னொருமுறை அவங்களுக்கு கிடைக்குமோ என்னவோ அதனால இப்பவே லாபம் பார்க்கறாங்க.
குறிப்பு:
10 நாளுக்கு முந்தியே எழுதிவிட்டு மெதுவாக இப்ப பதிவிடுவதற்காக மன்னிக்கவும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த நெரிசல் சரி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள். சரியானா நல்லது தான்.
அண்ணா சாலையில் அல்லது எந்த சாலையிலும் சில மணி நேரம் நெரிசல் இருந்தாலே எரிச்சல் படுபவர்களுக்கு இந்த இடுகை மன நிம்மதியை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது அவர்களுக்காகன இடுகை.
படங்கள் உதவி பல தளங்கள் :)

வெள்ளி, செப்டம்பர் 03, 2010
உமாசங்கர் மீதான தடையை தமிழக அரசு நீக்கியது
http://thatstamil.oneindia.in/news/2010/09/03/tamilnadu-umashankar-ias-suspension-tansi-md.html
நேர்மையான உமாசங்கர் இ.ஆ.ப மீது தமிழக அரசு வீண் பழி சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த அரசுக்கு இவர் வலைந்து கொடுக்கவில்லை என்பதே காரணம். முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் மீது இவர் பல குற்றசாட்டுகளை சுமத்தியிருந்தார்.
இவரின் நீக்கத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், உமாசங்கர் மீதான விசாரணையை தொடங்கலாம். ஆனால் இறுதி விசாரணை முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
தற்போது தமிழக அரசு அவர் மீதானா நீக்கல் உத்தரவை திரும்ப பெற்று அவரை தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக (டான்சி) நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
அவர் மீதான மீதான விசாரணையை தொடங்கியதால் அரசு நீக்கல் ஆணையை திரும்ப பெற்றுக்கொண்டது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)