என்னடா சுய தம்பட்டமா இருக்கேன்னு பார்க்கறீங்களா. இல்லைங்க அது என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் சொன்னது. அவர் அப்படி சொன்னதை நம்ம வலையில் கூட ஏத்தலைன்னா எப்படி? இஃகி இஃகி.
எங்க அலுவலகத்தில் தமிழ் பேசறவங்களும் உண்டு (7 பேர் இருக்கோம்). எல்லா இடத்துலயும் தெலுங்குகாரங்க கண்டிப்பா இருப்பாங்க, பல இடங்களில் அவங்க மட்டும் இருப்பாங்க.
நாங்க தமிழில் தான் பேசிக்குவோம். அதாவது தமிழ்நாட்டுல பேசற மாதிரி தமிலிங்கிலிஸ். அரசியல் அது இதுன்னு பேசினாலும் அரசியல் தான் 70 விழுக்காடு இருக்கும். மீதி மத்த சங்கதிகளை பற்றி இருக்கும். இது எல்லா இடத்துலயும் நடக்கறதுதான அப்படிங்கிறிங்களா.
எங்களில் தமிழ் சொற்களை அதிகமா பயன்படுத்தறவன் நான். அதாவது செகண்ட் என்ற நற்தமிழ் சொல்லுக்கு பதிலா வினாடி என்ற சொல்லை நான் பயன்படுத்தி பேசுவேன். எப்பவும் அப்படி கிடையாது பல முறை நற்றமிழ் தான். ஆனா மத்தவங்க எப்பவும் நற்றமிழ் தான். இது ஒரு காட்டுதான் இது மாதிரி பல நற்றமிழ் சொற்களை நாங்கள் எங்கள் பேச்சில் புழங்குவோம். இது என்ன பெரிய மேட்டர் , இது நார்மல் தான அப்படிங்கிறிங்களா அதுவும் சரிதான்.
ஒரு முறை அந்த விளம்பரம் பார்த்தீங்களா அப்படின்னு கேட்டேன். எங்களில் மூத்தவர் நாம அட்வர்டைஸ்மெண்ட் என்று தான் சொல்லுவோம் இவன் பாருயா விளம்பரம் அப்படிங்கறான் என்று சொல்லிவிட்டு எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று சொல்லிட்டார்.
எனக்கு ஒரே கூச்சமா போயிடுச்சி, அந்த கூச்சம் போக ஒரு இடுகை எழுதிட்டேன், எல்லாம் விளம்பரம் தான் இஃகி இஃகி. .
எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று தான் தலைப்பு இருக்கனும் ஆனா தலைப்பு பெரிசா இருக்குமேன்னு தான் சின்னதா நான் தமிழறிவு நிறைந்தவன் என்று வைத்துவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக