வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)

4 கருத்துகள்:

vassan சொன்னது…

வணக்கம்.

அமேரிக்க இந்தியர்கள் = Native American Indians ( செவ்விந்தியர்கள்)

இந்திய அமேரிக்கர்கள் = ( east) India(n) American

குமரன் (Kumaran) சொன்னது…

எனக்கு யாரும் இதைப்பத்தி சொல்லலையே. சொல்லாட்டியும் பரவாயில்லை. நாங்க எல்லாம் பழசுங்க.

குறும்பன் சொன்னது…

வணக்கம் வாசன், ஆர்வகோளாறுல எழுதியது, சரிபண்ணிடறேன். :-)

குறும்பன் சொன்னது…

வாங்க குமரன் நீங்கெல்லாம் பழய ஆளுங்க , உங்களுக்கு எதுக்கு பச்சை அட்டை செய்தி? :-)) I-140, I-485 அப்படின்னா என்னன்னு கேட்கற ஆளுங்க நீங்க.. :-))