வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், மார்ச் 26, 2007

2006ன் உலகின் பெரிய விமான நிலையங்கள்

உலகின் பெரிய விமான நிலையங்கள் அப்படின்னா பரப்பளவில் பெரியதுன்னு நினைச்சுக்காதிங்க 2006ல் அதிக பயணிகளை கையாண்ட நிலையங்களை தான் பெரியதுன்னு சொல்றேன். Airports Council International இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளது.


1. அட்லாண்டாவின் - ஹார்ட்ஸ் பீல்ட் ஜாக்சன் ( Hartsfield-Jackson ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 84,846,639 .

2. சிகாகோவின் - ஓ கரே ( O'Hare ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 76,248,911 .

3. லண்டனின் ஹீத்ரோ ( Heathrow ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 67,530,223 .

4. டோக்கியோவின் ஹனெடா ( Haneda ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 65,225,795 .

5. லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

6. டல்லஸ் & போர்ட் வொர்த் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

7. பாரிஸ் - சார்லஸ் டே கவ்லே ( Charles de Gaulle ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 56,808,967 .

8. ஜெர்மனியின் பிராங்பர்ட் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 52,810,683 .

9. சீனாவின் பெய்ஜிங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 48,501,102 .

10. டென்வர் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 47,324,844 .

11. லாஸ் வேகாஸ் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,194,882 .

12. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam Schiphol Airport) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,088,221 .

13. ஸ்பெயினின் மாட்ரிட் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 45,500,489 .

14. ஹாங்காங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 44,020,000 .

15. தாய்லாந்தின் பாங்காக் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 42,799,532 .


2006ன் சிறந்த விமான நிலையத்துக்கான பரிசை கண்கானிப்பு அமைப்பான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) அறிவித்துள்ளது.

அது எதுன்னு சொல்லுங்க?

அது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தான். 2ம், 3ம் இடங்கள் ஹாங்காங் & ஜெர்மனியின் முனிச்சுக்கு.



சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 35,033,083 மில்லியன், இது 22வது இடத்தில் உள்ளது.

அதிக சரக்குகளை கையாண்ட விமான நிலையங்கள் :

1. மெப்சிஸ் - இது FedEx ன் மையம், முதல் இடத்தை பிடித்த காரணம் தெரியுத? ;) - கையாண்ட சரக்கு 3,692,205 டன்

2. ஹாங்காங் - கையாண்ட சரக்கு 3,608,789 டன்

3. அங்கோர்ச் - கையாண்ட சரக்கு 2,803,792 டன்

4. சியோல் - கையாண்ட சரக்கு 2,336,571 டன்

5. டோக்கியோவின் நரிடா (Narita- NRT) - கையாண்ட சரக்கு 2,280,028 டன்

மேலதிக செய்திகளுக்கு

http://www.airports.org/aci/aci/file/Press%20Releases/2007_PRs/PR060307_PrelimResults2006.pdf

http://www.forbes.com/2007/03/22/worlds-busiest-airports-biz-logistics-cx_rm_0322airports.html



12 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//சிங்கப்பூரின் சாங்காய் விமான நிலையம் //

சாங்காய் அல்ல .சாங்கி.

வெற்றி சொன்னது…

குறும்பன்,
மிகவும் சுவாரசியமான தகவல்கள்.
தகவல்களுக்கு நன்றி.
நான் இதுவரை நியூயோர்க்கில் உள்ள கெனடி விமான நிலையம் தான் மிகவும் busy யான விமான நிலையம் என நினைத்திருந்தேன்....ஆனால் முதல் 15 busy யான விமான நிலையத்திற்குள் கூட இவ் விமான நிலையம் வராதது வியப்பாக இருக்கிறது!

பி.கு:- உலகிலேயே மிகவும் busy குறைந்த விமான நிலையமாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் இருக்குமோ?!

வடுவூர் குமார் சொன்னது…

ஒன்றையாவது தட்டிடிறாங்க இந்த சிங்கைகாரங்க.

பெயரில்லா சொன்னது…

remove "million" from Your blog. i also confused.

Machi சொன்னது…

//சாங்காய் அல்ல .சாங்கி.//
ஜோ மாத்தியாச்சு .

மொதல்லயெல்லாம் சாங்கி சாங்கின்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்கல்லாம் இப்ப சாங்காய் சாங்காய்ன்னு சொல்லிக்கிட்டு திரியரதால நானும் மாத்தி எழுதிட்டேன் :-)

Machi சொன்னது…

அட்லாண்டா முதல் இடம் என்பதை நம்பமுடியவில்லை வெற்றி.
JFK 17 வது இடத்தில் உள்ளது. கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 42,604,975 மில்லியன்.

நியுயார்க்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள நெவார்க் 21 வது இடத்தில் உள்ளது. கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 35,494,863 மில்லியன்.

இதனால JFK 15 இடத்துக்குள்ள வரமுடியலைன்னு நினைக்கிறேன்.

//பி.கு:- உலகிலேயே மிகவும் busy குறைந்த விமான நிலையமாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் இருக்குமோ?! //
இந்த குறும்பதான வேண்டாங்கிறது :-))

Machi சொன்னது…

//ஒன்றையாவது தட்டிடிறாங்க இந்த சிங்கைகாரங்க.//
சிங்கை காரங்க திறமைசாலிங்கப்பா.

இவங்களுக்கு போட்டியா இருக்கிறது ஹாங்காங் தான். இவங்களவிட ஹாங்காங் பல படி மேலே இருக்குது.

Machi சொன்னது…

//remove "million" from Your blog. i also confused//

anony, why you got confused? can you give me the reason?

ஜோ/Joe சொன்னது…

குறும்பன்,
35,494,863 மில்லியன் என்பது 35.494863 மில்லியன் அல்லது வெறும் 35,494,863 என இருக்க வேண்டும் என்று அனானி சொல்கிறார் என நினைக்கிறேன்

Machi சொன்னது…

ஓ... நன்றி ஜோ மாத்தியாச்சு.

நன்றி அனானி தவறு புரியாம போச்சு.

காட்டாறு சொன்னது…

நம்ம நாடு எந்த நிலைன்னு பாத்து சொல்ல முயுங்களா? மக்கள் தொகையும், ப்ளாக் செய்யும் நம்மையும் வச்சிப் பாத்து கூட கொறயா இருந்தாலும் அட்ஜஸ் பண்ணி பாத்துப் போடுங்க குறும்பன்

Machi சொன்னது…

பட்டியலில் இருந்தா காட்டாறா நம்மளை பத்தி எழுதியிருப்பேனே, :-)) 2 விமானம் ஒரே நேரத்தில் வந்தாவே சமாளிக்க நம்மாளுங்க ரொம்ப சிரமப்படுறாங்க, இதுல busy பட்டியலில் வரணும்ன்னு நினைக்கிறது பேராசை.... :-))