வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜனவரி 03, 2007

விமானம் எப்படி பறக்கிறது? ஒரு விளக்கம்

விமானம் எப்படி பறக்கிறது? என்று கல்லூரி காவலாளிக்கு ஒரு ஐயம் வந்துவிட்டது. என் நண்பனை பார்த்து எப்படிப்பா ஏரோபிளேன் வானத்துல பறக்குது? அங்க தான் ரோடு இல்லையே என்று கேட்டார்.

என் நண்பன் அவருக்கு விளக்க ஆரம்பித்து விட்டான். இவ்வளவு உயரத்தில் பறக்கனும் அதை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு சொல்லும் என்று விலாவாரியாக எடுத்துச்சொன்னான். பாவம் அவர் ஒன்னும் புரியாம விழிச்சார். அதை கவனித்த நான் உடனே களத்தில் குதித்தேன். தள்ளுடா உனக்கு சொல்ல தெரியலை என்று சொல்லிவிட்டு நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்.

அதலாம் இல்லிங்க மெட்ராசுல இருந்து பிளேன் கிளம்புனதும் 10000 அடி உயரத்துக்கு போயிடும் அங்கயே அது நிக்கும், பூமி சுத்துதா? சுத்தி அமெரிக்காவுக்கு கீழ பிளேன் வந்ததும் போன் போட்டு சொன்னதும் பிளேன் கீழ இறங்கி வந்துடும் என்று சொன்னேன்.

என் விளக்கம் அவருக்கு புரிந்துவிட்டது. அதான பார்த்தேன் பிளேன் எப்படி ரோடு இல்லாம ஓடும்? தம்பி சரியா சொன்னப்பா என் சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி எனக்கு நன்றி சொன்னார்.

அவர் எனக்கு நன்றி சொன்னதை கேட்ட நண்பன் நொந்து போயிட்டான், இப்பவும் என்கிட்ட பேசும் போது என்னடா பிளேன் பறக்கற கதையை இன்னும் எத்தனை பேருக்கு சொன்ன அப்படின்னு பொறாமைல கேட்பான். ;-)

இது என் அனுபவம் இல்லை, இது நண்பரின் அனுபவம் ;-) சொன்னார் இங்க போட்டாச்சு.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆகா இவ்வளவு நாளாத் தேடிய விடை இன்று அகப்பட்டது. :)
... ஏன் இவர் குறும்பன் என்று பெயர் வைத்திருக்கிறார், ஆனால் ஒரு குறும்பு விட்டதாய்க் காணமே ...

வல்லிசிம்ஹன் சொன்னது…

kuRumban good one.
sorry to use english here.

it is good to convince and make watchmen happy.
will come in handy sometimes.

Machi சொன்னது…

விடைகண்டவன் என் மூலமா உங்களுக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி :-))

நானாப்பா குறும்பு பண்றேன் :-( பேரு தான் அப்படி நான் குறும்பு பண்ணாத பையங்கோ.

Machi சொன்னது…

ஆமாங்க வல்லிசிம்ஹன் சில சமயம் கேட்கறவங்க திருப்தி அடையர மாதிரி பதில் சொல்லனும் அவங்களும் அந்த மாதிரி பதில தான் ஒத்துக்குவாங்க.

குமரன் (Kumaran) சொன்னது…

:-)))

வெற்றி சொன்னது…

குறும்பன்,
உங்களின் பெயருக்கேற்ற குறும்புத்தனம் உங்களிடம் இருக்கிறது.

/* என் விளக்கம் அவருக்கு புரிந்துவிட்டது. அதான பார்த்தேன் பிளேன் எப்படி ரோடு இல்லாம ஓடும்? தம்பி சரியா சொன்னப்பா என் சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி எனக்கு நன்றி சொன்னார். */

ஹி ஹி ஹி...

VSK சொன்னது…

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்"
என வள்ளுவன் இதைத்தான் சொன்னானோ!
:))

மிக ருசியான குறும்பு!

Machi சொன்னது…

குமரன் & வெற்றி நல்லா சிரிச்சிங்களா?

இது நண்பரோட அனுபவம் ஐயா என்னோடது இல்லை ;-))

Machi சொன்னது…

SK பெரியங்க சொன்னதை நண்பன் அப்படியே புரிஞ்சி நடந்திருக்கான். ;-))

SP.VR. SUBBIAH சொன்னது…

நீங்க சொல்றமாதிரி நடந்ததின்னா(!)
இந்த விசா கருமாந்திரம் எல்லாம் இல்லாம நாங்கள்ளாம் அந்த டாலர் பூமிக்கு (யு.எஸ்) வந்திருவோம்!