வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூன் 22, 2006

குறும்பாறு

தமிழ்மணத்தில் இப்போ "ஆறு" கரைபுரண்டு ஓடிக்கிட்டுருக்கு. அதுல சிறிய துணை ஆறா இந்த குறும்பாறு கலக்குது, இதுல தண்ணி குறைச்சல்ன்னு சொல்லாதிங்க தண்ணி வரதே பெரிய சங்கதி.

(1) எந்த ஊர் நீங்க?
பொறையாறு.


(2) எந்த சாமி புடிக்கும்?
ஆறுமுக சாமி.


(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
அய்யன்னாறுக்கு


(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
சாமியாறை
(எழுத்துப் பிழை காணாதீர்கள் 'ர' வை அழுத்தி சொல்லுவது வழக்கம் :-)) )

(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
காவேரி ஆறு.

(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.

(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
அது "கிருஷ்ணா" ஆறு.


(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
நதியா வை.


(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
"வைகை" புயல்.


(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
சிந்து.

6 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

//டாவடிச்ச பொண்ணு பேர்?

சிந்து. //

அவங்க தங்கை பெயர் பைரவியா :-))

நீங்க பண்றது லந்து!

வவ்வால் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நாகை சிவா சொன்னது…

//அவங்க தங்கை பெயர் பைரவியா //
பைரவி இல்லங்க. வவ்வால் கோதாவரி.....

அப்பு, உண்மையிலே பொறையாரா... இல்ல குறும்பு பண்ணுவதற்கு சொன்னாதா?

Machi சொன்னது…

வந்து தொங்கிட்டு போனதுக்கு நன்றி வவ்வால். :-) )
நீங்க இசை ரசிகரா இருப்பீங்க போல இருக்கு? சிந்துன்னு சொன்னா பைரவின்னு சொல்றீங்க.
அவ தங்கை பேர் நர்மதா. ( எல்லாம் ஆறு தான் :-) )

Machi சொன்னது…

வாங்க நாகை சிவா. என் டாவோட தங்கை பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?
அவ பேர் நர்மதா ;-) சில சமயம் கோதாவரின்னும் கூப்பிடுவோம் :-))

நம்ம ஊர் பொறையாறு இல்லப்பு. சும்மா ஆறு குறும்புதேன்.

வவ்வால் சொன்னது…

//அவ தங்கை பேர் நர்மதா. ( எல்லாம் ஆறு தான் :-) ) //

நர்மதா கிட்டே என்ன தா என்று கேட்பிங்க:-))

நாகைசிவா..

//பைரவி இல்லங்க. வவ்வால் கோதாவரி.....//

அப்போ எதாவது சண்டைனா ஒண்டிக்கு ஒண்டி கோதாவுக்கு வறியா நைனா? கேட்பாங்களோ :-))