வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மே 03, 2006

கருத்துக்கணிப்பு - திமுக 6.12% வாக்குகள் முன்னனி

                கருத்துக்கணிப்பு எல்லாம் சரியாக கணிப்பதில்லை என்பது என் கணிப்பு . 2001ல் Exit Poll கூட தவறாக வந்ததை மறக்ககூடாது.

                தற்போது தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு வேடிக்கையான வேதனை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரங்கற கதையா ஊடகத்துறையில் ( லாப நோக்கோடு )இருப்பவர்கள் எல்லாம் கருத்துகணிப்பு நடத்துறாங்க. சரி அதையாவது முறையா செய்யறாங்களா என்றால் அதுவும் இல்லை. கொஞ்சம் கூட பேனா கூசாமல் கருத்துகணிப்பு என்ற பெயரில் தனது கருத்துக்களை மக்களிடம்(வாசகர்களிடம்) திணிக்கிறார்கள். கெட்டிக்காரன் புழுகு எத்தனை நாளைக்கு ? என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் இந்த வகையில் ஒரு பொய்யான தகவலை பரப்பி மக்களை குழப்புவது & திசை திருப்புவது தான் அவர்கள் குறிக்கோள். இது தான் சனநாயகத்தின் நாலாவது தூணின் வேலை என்னும் போது சனநாயகத்தின் நிலைமை நமக்கு சொல்லாமலே புரியும். ஒரு பத்திரிக்கை கூட சார்பு தெரியாம எழுதுவது இல்லை. ( விகடனை பற்றி எனக்கு தெரியாது ).

                வலைபூக்களும் ஓரு ஊடகமே, வலைப்பதிவன் என்ற முறையில் நானும் ஒரு கருத்து கணிப்பு நடத்துவதாக முடிவு கட்டினேன் ( ஊரோடு / ஊடகத்தோடு ஒத்து வாழ் ) அதனால் வந்ததே இந்த பதிவு. ;)

                இப்போ 2006 சட்டசபை தேர்தல் குறித்த என் கருத்துகணிப்பு. ( என் ஊகம் )


  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% குறைவாக இருந்தால் கூட்டணியே வெற்றியை நிர்ணயிக்கும். அந்த வகையில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெரும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% அதிகமாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். வெற்றிக்கு திமுக கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 70% அதிகமாக இருந்தால் தேதிமுக (விஜயகாந்த்) பெருமளவில் வாக்குகளை பெறும். வெற்றிக்கு திமுக கூட்டணி மிக கடுமையாக உழைக்க வேண்டும்.


  •                 தேதிமுக, திமுக கூட்டணி வாக்குகளை விட அதிமுக வாக்குகளையே அதிகம் பிரிக்ககூடும். காரணம் விஜயகாந்திற்கு நகரங்களை விட கிராமங்களில் செல்வாக்கு (ரசிகர்கள்) அதிகம்.


                சும்மா ஊகமா சொன்னா மக்கள் ஒத்துக்க மாட்டாங்க, அதனால நான் தமிழத்தின் பல பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதன் முடிவை உங்களுக்கு இங்கு அளிக்கிறேன்.


                                திமுக                - 42.85

                                அதிமுக            - 36.73

                                தேதிமுக          - 10.20

                                பாசக                  - 6.12

                                மற்றவர்கள் - 4.08


                திமுக, அதிமுக வெற்றியை விட தேதிமுக எவ்வளவு வாக்குகள் பெறப்போகிறார்கள் என்பதே இத்தேர்தலின் சிறப்பு அம்சம்.

2 கருத்துகள்:

மாயவரத்தான் சொன்னது…

ஒரு ரெண்டு நாள் கழிச்சு இதே மாதிரி அ.தி.மு.க. ஜெயிக்கும்னு ஒரு கருத்துக்கணிப்பு போட்டுக்குங்க. ஒரு வேளை தி.மு.க. ஜெயித்தால், "ஆஹா.. நான் தான் அன்னைக்கே சொன்னேனே" அப்படீன்னு இந்தப் பதிவை சுட்டிக் காட்டுங்க. அ.தி.மு.க. ஜெயிச்சா அந்தப் பதிவு!

இது தான் நடக்குது இப்போ!

Machi சொன்னது…

மாயவரத்தான், நீங்க சொல்ற மாதிரி நடக்கறதா எனக்கு தெரியலை. எல்லாம் தீவிரமான ஒரு பக்க சார்பு தான்.