வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
செவ்வாய், ஜூலை 23, 2019
அடுத்தடுத்த இரு வெள்ளை பட்டைகள் - காளை BULLISH side by side White lines
ஏறு முகத்தில் தோன்றும் இவ்வொழுங்கு மூன்று உலக்கைகளால் ஆனது. வழக்கமா ஏறு முக போக்கில் கரடி ஒழுங்கு தான தோன்றும்? ஏன் இங்க காளை என்று வருது? இந்த ஒழுங்கு தோன்றினால் மேலும் விலை ஏறும் என பொருள். இந்த ஒழுங்கு அரிதாக தான் தோன்றும்.
இந்த ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?
* தெளிவான ஏறு முகம் வேண்டும்.
* இதில் சிறிய வெள்ளை உடல் தோன்ற வேண்டும். (இதை முதல் நாள் என்போம்)
* இரண்டாம் நாளில் முதல் நாளுக்கு மேலாக வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இது முதல் நாளை தொடக்கூடாது.
* மூன்றாம் நாளும் வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இதன் தொடக்கமும் முடிவும் இரண்டாம் நாளை ஒத்ததாக இருக்கும். அதாவது இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிதரி.
* வெள்ளை உடல்களின் நீளம் அதிகமாக இருந்தால் போக்கு தொடர அதிக வாய்ப்பு உண்டு.
* இது சிறந்த போக்கு அறியும் ஒழுங்கு அல்ல என்றாலும் நான்காவது நாள் மேலாக நல்ல இடைவெளியுடன் வெள்ளை உடல் தோன்றினால் போக்கு தொடருது என நம்பலாம்.
அடுத்தடுத்த இரு வெள்ளை பட்டைகள்- கரடி BEARISH SIDE BY SIDE WHITE LINES
இறங்கு முகத்தில் தோன்றும் இவ்வொழுங்கு மூன்று உலக்கைகளால் ஆனது. வழக்கமா இறங்க முக போக்கில் காளை ஒழுங்கு தான தோன்றும்? ஏன் இங்க கரடி என்று வருது? இந்த ஒழுங்கு தோன்றினால் மேலும் விலை வீழும் என பொருள். இந்த ஒழுங்கு அரிதாக தான் தோன்றும்.
இந்த ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?
* தெளிவான இறங்கு முகம் வேண்டும்.
* இதில் சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும். (இதை முதல் நாள் என்போம்)
* இரண்டாம் நாளில் முதல் நாளுக்கு கீழாக வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இது முதல் நாளை தொடக்கூடாது.
* மூன்றாம் நாளும் வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இதன் தொடக்கமும் முடிவும் இரண்டாம் நாளை ஒத்ததாக இருக்கும். அதாவது இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிதரி.
* வெள்ளை உடல்களின் நீளம் அதிகமாக இருந்தால் போக்கு தொடர அதிக வாய்ப்பு உண்டு.
* இது சிறந்த போக்கு அறியும் ஒழுங்கு அல்ல என்றாலும் நான்காவது நாள் கீழாக நல்ல இடைவெளியுடன் கருப்பு உடல் தோன்றினால் போக்கு தொடருது என நம்பலாம்.
திங்கள், ஜூலை 22, 2019
மேல் & கீழ் இழு The Tweezers Top and Tweezers Bottom
முதலில் கீழ் இழு ஒழுங்கைப்பற்றி பார்ப்போம். இது ஈருலக்கை கரடி ஒழுங்காகும்.
* வெள்ளை உடலின் முடிவும் அடுத்த நாள் தோன்றும் கருப்பு உடலின் தொடக்கமும் சமம்
* வெள்ளை உடலின் தொடக்கத்தை விட அடுத்த நாள் தோன்றும் கருப்பு உடலின் முடிவு குறைவு அதாவது கீழாக இருக்கும்.
* ஏறு முகத்திலேயே தோன்ற வேண்டும்.
* நன்றாக கவனித்தால் இது காளை விழுங்கி என்பது புலப்படும்.
காளை ஒழுங்கான மேல் இழு ஒழுங்குக்கான விதி
* கருப்பு உடலின் முடிவும் அடுத்த நாள் தோன்றும் வெள்ளை உடலின் தொடக்கமும் சமம்
* கருப்பு உடலின் தொடக்கத்தை விட அடுத்த நாள் தோன்றும் வெள்ளை உடலின் முடிவு அதிகம் அதாவது மேலாக இருக்கும்.
* இறங்கு முகத்திலேயே தோன்ற வேண்டும்.
* நன்றாக கவனித்தால் இது கரடி விழுங்கி என்பது புலப்படும்.
இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்போமா.

மேல் இழு வரைபடத்தில்
கீழிடைவெளி இரு முயல்கள் Downside gap two Rabbits
இது மேலிடைவெளி இரு காகங்களுக்கு எதிரான மூவுலக்கை காளை ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு காலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல் தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும் இது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவு முதல் நாள் உலக்கையின் முடிவை விட கீழாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும். ) இருக்க வேண்டும்.
* முதல் நாள் நீளமான கருப்பு உடல் இருக்க வேண்டும்.
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட கீழே இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டும் (காலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் வெள்ளையாக இருக்க வேண்டும், இது இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும்.

குறிச்சொல்
கீழிடைவெளி இரு முயல்கள்,
பங்கு சந்தை,
Downside gap two Rabbits
மேலிடைவெளி இரு காகங்கள் The Upside Gap Two Crows
இது மூவுலக்கை கரடி ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு மாலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல் தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும் இது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவும் முதல் நாள் உலக்கையின் முடிவை விட மேலாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும். ) இருக்க வேண்டும்.
* முதல் நாள் நீளமான வெள்ளை உடல்
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் கருப்பாக இருக்க வேண்டும் (மாலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் கருப்பாக இருக்க வேண்டும், இது இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும்.

மேலிடைவெளி இரு காகங்கள்,
The Upside Gap Two Crows
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)