வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜூலை 31, 2019

உடல்களின் நாள் Long and Short day candlestick pattern

நீள உடல்
தனியாக வரும் நீள  உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க நீள உடல் பயன்படுகிறது.


எது நீள  உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும்  இல்லை. வரைபடத்தை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். நீள உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்.

சிறிய உடல்
தனியாக வரும் சிறிய உடலை வைத்து கணிப்பது தவறாகும் ஆனால் பல ஒழுங்குகளை கணிக்க சிறிய உடல் பயன்படுகிறது.


எது சிறிய  உடல்\நீளமான உடல் என்பதற்கு எந்த வரையறையும்  இல்லை. வரைபடத்தில் உள்ள மற்ற உடல்களை பார்த்து நாமாகவே முடிவுக்கு வரவேண்டும். சிறிய உடல் காளையாகவும் இருக்கலாம் கரடியாகவும் இருக்கலாம்

வழுக்கைகள் SHAVED CANDLESTICK


மேல் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான மேல் வழுக்கைக்கு மேல் குச்சி இருக்காது. பார்க்க சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.

இது சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான கீழ் குச்சி இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள கீழ் குச்சி இருக்காது.

கீழ் வழுக்கை
ஓருலக்கை  ஒழுங்கான கீழ் வழுக்கைக்கு கீழ்குச்சி இருக்காது. பார்க்க தலைகீழ் சுத்தியல் மாதிரி தெரியும் ஆனால் இது  தலைகீழ் சுத்தியல் அல்ல. இதன் உடல் எந்த நிறத்திலும் இருக்கும். வரைபடத்தில் அடிக்கடி தென்படும். நம்பி செயலாற்றக்கூடிய ஒழுங்கு அல்ல. தலைகீழ் சுத்தியலுக்கான எல்லாம் இதற்கு பொருந்தும்.
இது தலைகீழ் சுத்தியல் அல்ல என்று எப்படி அறிவது? 

தலைகீழ் சுத்தியலுக்கு சிறிய உடலும் நீளமான மேல் குச்சியும் இருக்கும். இதற்கு பெரிய உடல் இருக்கும். இந்த உடலை விட இரு மடங்கு நீளமுள்ள மேல் குச்சி இருக்காது.

இழுத்துபிடிக்கும் பட்டை - Belt Hold

ஓருலக்கை ஒழுங்கான இது போக்கு மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்தும்   ஒழுங்காகும். ஓருலக்கை ஒழுங்கு நம்பகமானது அல்ல, அதிலும் இது நம்பத்தகுந்தது அல்ல என்பது என் கருத்து.

இழுத்து பிடிக்கும்  பட்டை - காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முகம் தொடரனும்
  2. பெரிய வெள்ளை உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு கீழே இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த வெள்ளை உடலுக்கு கீழ் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  மேல் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக கீழ் இடைவெளியுடன் நீளமான வெள்ளை உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு.

இழுத்து பிடிக்கும்  பட்டை - கரடி
இதை எப்படி அறிவது?


  1. முதலில் ஏறு முகம் தொடரனும்
  2. அடுத்து பெரிய கருப்பு உடல் தோன்றனும். இதன் தொடக்கம் முந்தைய உடலுக்கு மேல் இடைவெளியுடன் இருக்கனும். 
  3. இந்த கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கவே கூடாது.
  4. இதற்கு  கீழ் குச்சி இல்லாமலோ மிகச்சிறியதாகவோ இருக்கலாம். அதனால பார்க்க மருபோசு போல தோன்றும்.
அதிக மேல் இடைவெளியுடன் நீளமான கருப்பு உடல் தொடங்கினால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம்.