வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜூலை 29, 2019

மூவுலக்கை தாக்குதல் Three Line Strike


மூவுலக்கை   தாக்குதல் அப்படின்னு சொன்னாலும் நாலு  உலக்கைகளை இவ்வொழுங்கை அமைக்கின்றன. மூன்று உலக்கைகள் படி மாதிரி செல்லும். நான்காவது உலக்கை மூன்று  உலக்கைகளையும் விழுங்கி விடும். அந்த அளவு நீளத்தில் இருக்கும்.

மூவுலக்கை தாக்குதல்- காளை
இதை எப்படி அறிவது?



  1. முதலில் ஏறுமுகம் இருக்கனும்
  2. இரண்டாவது  வெள்ளை உடல் நிறம் தோன்றனும்
  3. மூன்றாவதும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும். அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  4. நான்காவதாகவும் வெள்ளை உடல் நிறம் தோன்றனும்  ஆனா அதன் முடிவு இதற்கு முன் நாள் தோன்றிய வெள்ளை உடலை விட மேல இருக்கனும்.
  5. ஐந்தாவதா பெரிய கருப்பு நிற உடல் மூன்று வெள்ளை உடல்களும் அடங்க அளவு நீளமா தோன்றனும் அதாவது மூன்றாவது வெள்ளை உடலின் முடிவுக்கு அதிகமாவும் முதல் வெள்ளை உடலின் தொடக்கத்துக்கு குறைவாகவும் இருக்கும் (உடலின் நீளம் விலை அல்ல)

ஏறுமுகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் ஏறுமுகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான கருப்பு உடல் மூன்று வெள்ளை உடல்களால் கிடைத்த லாபத்தை விழுங்கி விடும் ஆனால் ஒரே நாளில் மூன்று  நாள் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுப்பதால் அது இறங்கு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் ஏறு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.

மூவுலக்கை தாக்குதல் - கரடி
இதை எப்படி அறிவது?



  1. முதலில் இறங்கு முக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவது கருப்பு உடல்  தோன்றனும்
  3. மூன்றாவதும்  கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  4. நான்காவதும் கருப்பு உடல் தான். அதன் தொடக்கமும் முடிவும் இதற்கு முன் நாள் தோன்றிய கருப்பு உடலை விட கீழ  இருக்கனும்.
  5. ஐந்தாவததாக பெரிய வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்களை தன்னுல் அடக்கும் அளவுக்கு தோன்றனும் அதாவது மூன்றாவது கருப்பு உடலின் தொடக்கத்துக்கு அதிகமாவும் முதல் கருப்பு உடலின் முடிவுக்கு குறைவாகவும் இருக்கும்
இறங்கு முகத்தில் தோன்றும் மூன்று வெள்ளை உடல்களும் இறங்கு முகம் தொடர்வதை காட்டுகிறது. நீளமான வெள்ளை உடல் மூன்று கருப்பு உடல்கள் விலையை கீழே கொண்டு போனதை  ஒரே நாளில் இல்லாமல் ஆக்கி மேலே விலையை கொண்டு வந்துவிடும் அது ஏறு முகம் ஏற்படுவதை தடுத்து விடும் பின் மீண்டும் இறங்கு முகம் தொடரும் என்று எண்ணுகிறார்கள்.  இது   நம்பத்தகுந்தது அல்ல.

மூன்று உள் உலக்கைகள் Three Inside Candlestick Pattern

வெளி உலக்கை விழுங்கி, உள் உலக்கை புள்ளத்தாச்சி  இது தான் வேறுபாடு.

மூன்று  உள் உலக்கை - காளை
இது காளை புள்ளத்தாச்சியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.


  1. முதலில்   இறங்குமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக பெரிய கருப்பு உடல் தோன்றனும்
  3. மூன்றாவதாக சிறிய வெள்ளை உடல் தோன்றனும். இது கருப்பு உடலுக்குள் அடங்குவதாக இருக்கனும். (புள்ளத்தாச்சி ஒழுங்கு)
  4. நான்காவதா காளை புள்ளத்தாச்சி ஒழுங்கை உறுதிபடுத்தும் விதமாக அடுத்த நாள் வெள்ளை உடல் தோன்றனும்.

  • சொல்லப்போனா இது காளை புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • புள்ளத்தாச்சி வெள்ளை உடலை விட கருப்பு உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய இறங்கு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.


மூன்று உள் உலக்கை - கரடி

காளை ஒழுங்கு மாதிரி தான் இதுவும். இது கரடி புள்ளத்தாச்சியை 
கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.



  1. முதலில்  சந்தை ஏறுமுகமாக இருக்கவேண்டும்.
  2. இரண்டாவதாக பெரிய வெள்ளை உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக சின்ன கருப்பு உடல் தோன்றனும் வெள்ளை உடல் இதை  முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (கரடி புள்ளத்தாச்சி)
  4. நான்காவதாக அடுத்த நாள் கரடி புள்ளத்தாச்சியை உறுதிபடுத்தும் விதம் கருப்பு உடல் தோன்ற வேண்டும்.
  • சொல்லப்போனா இது கரடி புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • புள்ளத்தாச்சி கருப்பு உடலை விட வெள்ளை உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய ஏறு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.



மூன்று வெளி உலக்கைகள் Three Outside candlestick pattern

மூன்று  வெளி உலக்கை - காளை
இது காளை விழுங்கியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.

  1. முதலில் இறங்குமுகமாக சந்தை இருக்க வேண்டும்.
  2. இரண்டாவதாக சின்ன கருப்பு உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக பெரிய வெள்ளை உடல் தோன்றனும் கருப்பு உடலை இது முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (காளை விழுங்கி)
  4. நான்காவதாக அடுத்த நாள் காளை விழுங்கியை உறுதிபடுத்தும் விதம் வெள்ளை உடல் தோன்ற வேண்டும்.

  • சொல்லப்போனா இது காளை விழுங்கியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • விழுங்கி கருப்பு உடலை விட வெள்ளை உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய இறங்கு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.


மூன்று  வெளி உலக்கை - கரடி

காளை ஒழுங்கு மாதிரி தான் இதுவும். இது கரடி விழுங்கியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.

  1. முதலில்  சந்தை ஏறுமுகமாக இருக்கவேண்டும்.
  2. இரண்டாவதாக சின்ன வெள்ளை உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக பெரிய கருப்பு உடல் தோன்றனும் வெள்ளை உடலை இது முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (கரடி விழுங்கி)
  4. நான்காவதாக அடுத்த நாள் கரடி விழுங்கியை உறுதிபடுத்தும் விதம் கருப்பு உடல் தோன்ற வேண்டும்.
  • சொல்லப்போனா இது கரடி விழுங்கியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • விழுங்கி வெள்ளை உடலை விட கருப்பு உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய ஏறு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.