இது மேலிடைவெளி இரு காகங்களுக்கு எதிரான மூவுலக்கை காளை ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு காலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல் தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும் இது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவு முதல் நாள் உலக்கையின் முடிவை விட கீழாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும். ) இருக்க வேண்டும்.
* முதல் நாள் நீளமான கருப்பு உடல் இருக்க வேண்டும்.
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு கீழாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட கீழே இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டும் (காலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் வெள்ளையாக இருக்க வேண்டும், இது இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், ஜூலை 22, 2019
மேலிடைவெளி இரு காகங்கள் The Upside Gap Two Crows
இது மூவுலக்கை கரடி ஒழுங்காகும். இது பார்ப்பதற்கு மாலையில் விண்மீன் மற்றும் விழுங்கி போல் தோன்றும் ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. முதல் உலக்கை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் உலக்கை முதல் உலக்கையின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும் இது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் இதன் முடிவும் முதல் நாள் உலக்கையின் முடிவை விட மேலாக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மூன்றாவது உலக்கையும் கருப்பு நிறத்தில் இரண்டாம் நாள் உலக்கையை விழுங்குவது போல் (2-ஆம் நாள் உலக்கையின் தொடக்கமும் முடிவும் 3-ஆம்நாள் உலக்கையின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும். ) இருக்க வேண்டும்.
* முதல் நாள் நீளமான வெள்ளை உடல்
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் கருப்பாக இருக்க வேண்டும் (மாலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் கருப்பாக இருக்க வேண்டும், இது இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும்.
* முதல் நாள் நீளமான வெள்ளை உடல்
* இரண்டாம் நாள் முதல் நாளின் முடிவிலிருந்து இடைவெளி விட்டு மேலாக தொடங்க வேண்டும். இதன் முடிவும் முதல் நாளின் முடிவை விட இடைவெளியுடன் முதல் நாள் உடலை தொடாமல் இருக்க வேண்டும். இரண்டாம் நாளின் உடலின் நிறம் கருப்பாக இருக்க வேண்டும் (மாலையில் விண்மீன் நினைவுக்கு வருதா?)
* மூன்றாவது நாளின் உடலின் நிறமும் கருப்பாக இருக்க வேண்டும், இது இரண்டாம் நாள் உடலை விழுங்குவது போல் இருக்க வேண்டும். அதாவது 2-ஆம் நாள் உடலின் தொடக்கமும் முடிவும் 3-ஆம் நாள் உடலின் தொடக்கம் & முடிவுக்குள் இருக்க வேண்டும்.
குறிச்சொல்
பங்கு சந்தை,
மேலிடைவெளி இரு காகங்கள்,
The Upside Gap Two Crows
ஞாயிறு, ஜூலை 21, 2019
விழும் மூவுலக்கை வழிமுறை The Falling Three Methods
முதல் உலக்கையின் உடலின் நிறம் கருப்பு இது நீளமானது.
இரண்டாம் மூன்றாம் நான்காம் உலக்கைகளின் உடலின் நிறம் வெள்ளை இவை சிறிய நீளமுடையவை.
ஐந்தாம் உலக்கையின் உடலின் நிறம் கருப்பு இதுவும் நீளமானது.
சமிக்கையை அதிகபடுத்தும் செயல்கள்
* இந்த ஒழுங்கு இறங்கு முகத்தில் தோன்ற வேண்டும்.
* முதல் உலக்கையின் கருப்பு நிற உடலுக்கு சிறிய குச்சிகள் இருக்க வேண்டும்.
ஏன் இந்த ஒழுங்கு வேலை செய்யுமுன்னு நினைக்கறாங்க?
காளைகளை அமுக்கி விட்டு கரடிகள் செல்வாக்கடைவதை நீண்ட கருப்பு நிற உடல் தெரிவிக்கிறது. விட்டேனா பார் என்று காளைகள் மெதுவாக மூன்று நாள்கள் எழும் நான்காவது நாள் காளையின் தலையில் நங்கென்று குத்தி கரடி பெரிதாக மேலெழும். இது காளைகளை அமுக்கி மேலும் வாலாட்ட முடியாதவாறு செய்துவிடும்.
குறிச்சொல்
பங்கு சந்தை,
விழும் மூவுலக்கை வழிமுறை,
The Falling Three Methods
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)