வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, மார்ச் 08, 2014

மலேசிய ஏர்லைன்சு (MH370) சென்ற பாதை

விபத்துக்குள்ளான மலேசிய ஏர்லைன்சுடன் எந்த இடத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தொடர்பு முறிவு ஏற்பட்டது என்பதை காட்டும் படம்.




Image credit : Wall street journal tweeter.

புதன், ஜனவரி 29, 2014

போப் பறக்கவிட்ட அமைதிப்புறா மீது கடும் தாக்குதல்

இப்போது உள்ள போப்பை பிடிக்காதவர்கள் அவரை அவமானப்படுத்த வாட்டிகனில் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து வாட்டிகன் மாடமாளிகையிலிருந்து அவர் பறக்கவிட்ட இரண்டு அமைதிப்புறாக்களை காக்கையை கொண்டும் நீள்மூக்குள்ள பெரிய உருவமுடைய கடல்பகுதிகளில் அதிகம் காணப்படும் பறவையை கொண்டும் எதிரிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது வாட்டிகனில் பணிபுரியும் சிலரின் உள்வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது அல்லது வாட்டிகனில் இருப்பவர்கள் வெளியாளுக்கு உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் வாட்டிகன் ஆளு வேலை உள்ளது என்பது உறுதி.

கடல்பறவை - Seagull

வாட்டிகனில் போப் அவர்கள் பறக்கவிட்ட அமைதிப்புறா.


காக்கையாலும் கடல்பறவையாலும் தாக்கப்படும் அமைதிப்புறா


கடல்பறவையால் தாக்கப்படும் பரிதாப புறா


அமைதிப்புறாவை துரத்தும் காக்கை


காக்கையின் கடும் தாக்குதல்



அமைதிப்புறா மீது கடல்பறவையின் இறுதி தாக்குதல்.


கடல்பறவையால் தாக்கப்பட்ட புறா தப்பி சென்றுவிட்டது. காக்கை தாக்கிய புறாவின் கதி தெரியவில்லை.

மார்ல்பெரோ விளம்பர ஆளு இறந்திட்டாரு.

தம் அடிப்பவர்களின் கவனத்திற்கு:

மார்ல்பெரோ சிகரெட் விளம்பரத்தில் அட்டகாசமா மாடு மேய்க்கறவன் (Cow Boy) தோற்றத்தில் இருப்பாரே அவரு பேரு எரிக் லாசன். அவரு இறந்திட்டாரு. வயசு 73 தான் ஆகுது. எப்படி செத்தாரா? நுரையீரல் தொடர்பான நோயினால் இறந்திட்டாரு. கடைசி காலத்தில் மூச்சு விட முடியாம மூச்சை விட்டுருக்கார்.

தம்மர்களுக்காக அவருடைய படம் மார்ல்பெரோவுடன்.




http://news.yahoo.com/ex-marlboro-man-dies-smoking-related-disease-034350253.html