வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, செப்டம்பர் 04, 2010

போக்குவரத்து நெரிசல் 100 கிமீ தூரத்துக்கு

சீனாக்காரங்க எதை பண்ணுனாலும் பெரிசா தான் பண்ணுவாங்க. உலகத்திலேயே நீளமான சுவர் எது சீனப் பெருஞ்சுவர் தான். இப்ப அவங்க கட்டியிருக்கும் மூன்று ஆழ் பள்ளத்தாக்கு அணை தான் அணைகளிலேயே மிகப்பெரியது. மிகப்பெரிய கடல் வழி பாலம் எதுன்னா 32.673 கிமீ நீளமுள்ள கன்சு பே பாலம் (Hangzhou Bay Bridge) தான். நில வழி பாலமும் சீனாவில் தான் இருக்கு அது வினன் விகி பெரிய பாலம் (Weinan Weihe Grand Bridge).

இந்த மாதிரி பெரிசுகளுக்கு சொந்த காரங்களான சீனர்களுக்கு குறையாக இருந்த மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் என்ற பெயரும் தற்போது கிடைத்து விட்டது.  கிட்டதட்ட 100 கிமீக்கு வண்டிங்க நின்னுது. 10 நாட்களுக்கு மேலாகியும் இது சரியாகலை. நிலக்கரி ஏற்றிக்கிட்டு வர சுமையுந்துகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை. இந்த நெரிசலுக்கு காரணமும் அவை தான், வடக்கில் உள்ள உள் மங்கோலியா மாகாணத்திலிருந்து  நிலக்கரி  ஏற்றிக்கிட்டு வருவதால் நெரிச்சல் (வரும் வண்டிகளின் எண்ணிக்கையை பீஜிங் நகர எல்லையில் உள்ள பகுதி சமாளிக்க முடியலை மேலும் பீஜிங் நகர எல்லையிலுள்ள சாலையில் மேம்பாட்டு பணி நடந்துகிட்டு இருக்கு இதனால் நெரிச்சல் அதிமாயிடுச்சி.  வடக்கே உள்ள திபெத்-பீஜிங் சாலையில் தான் இது நடந்துக்கிட்டிருக்கு. எதுக்கு திபெத் பேர் வச்சாங்க? திபெத் தென் மேற்கு மூலையில் அல்ல இருக்கு? ஏதாவது தொடர்பு இருக்கா???  எதிர்காலத்தில் மங்கோலியாவை ஆட்டய போட இது அச்சாரமா? என்னமோ ஒன்னும் புரியலை. பீஜி்ங் முதல் ஜினிங் (Jining) வரை நெரிசல் இருக்காம்.



பாவம்யா லாரி ஓட்டுனர்கள்.

விசைக்கு எதிர் விசை இருக்குமில்லையா. மாபெரும் நெரிசல் மூலமா பலருக்கு எரிச்சல் இருந்தால் சிலருக்காவது குளிர்ச்சி இருக்கனுமில்லையா? பத்து பதினைந்து நாளா வண்டி அங்குலம் கூட நகராம இருக்கறப்ப அதுக்கு தீனி வேணாம் ஆனா அதில் இருக்கும் மக்களுக்கு? குடிக்க தண்ணி, திங்க சோறு வேணுமே. அதுக்கு அவங்க எங்க போவாங்க? எங்கயும் போக முடியாது. சாலையோரம் உள்ள ஊர்க்காரங்க தான் கதி.  இதையறிந்த ஊர்க்காரங்க சாலையில் எங்கும் போகமுடியாம மாட்டிக்கிட்டு இருக்கற வண்டியோட்டிகளுக்கு தண்ணி, சோறு எல்லாம் கொடுத்து உதவராங்க. என்ன எல்லாத்தையும் உண்மையான விலையை விட 5 முதல் 10 மடங்கு விலை வைத்து கொடுக்கறாங்க அதாவது விக்கறாங்க.  நல்ல வசூல் வேட்டை தான். இதுபோன்ற ஒரு வாய்ப்பு இன்னொருமுறை அவங்களுக்கு கிடைக்குமோ என்னவோ அதனால இப்பவே லாபம் பார்க்கறாங்க.




குறிப்பு:
10 நாளுக்கு  முந்தியே எழுதிவிட்டு மெதுவாக இப்ப பதிவிடுவதற்காக மன்னிக்கவும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த நெரிசல் சரி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள். சரியானா நல்லது தான்.


அண்ணா சாலையில் அல்லது எந்த சாலையிலும் சில மணி நேரம் நெரிசல் இருந்தாலே எரிச்சல் படுபவர்களுக்கு இந்த இடுகை மன நிம்மதியை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது அவர்களுக்காகன இடுகை.

படங்கள் உதவி பல தளங்கள் :)

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

உமாசங்கர் மீதான தடையை தமிழக அரசு நீக்கியது

http://thatstamil.oneindia.in/news/2010/09/03/tamilnadu-umashankar-ias-suspension-tansi-md.html

நேர்மையான உமாசங்கர் இ.ஆ.ப மீது தமிழக அரசு வீண் பழி சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த அரசுக்கு இவர் வலைந்து கொடுக்கவில்லை என்பதே காரணம். முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் மீது இவர் பல குற்றசாட்டுகளை சுமத்தியிருந்தார். 

இவரின் நீக்கத்தை அடுத்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதை விசாரித்த உயர்நீதிமன்றம், உமாசங்கர் மீதான விசாரணையை தொடங்கலாம். ஆனால் இறுதி விசாரணை முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போது தமிழக அரசு அவர் மீதானா நீக்கல் உத்தரவை திரும்ப பெற்று அவரை தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக (டான்சி) நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.

அவர் மீதான மீதான விசாரணையை தொடங்கியதால் அரசு நீக்கல் ஆணையை திரும்ப பெற்றுக்கொண்டது.

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

குத்திக் காட்டியது - என் தமிழ்!!!

மின்னஞ்சலில் வந்தது இங்கே இடுகையாக
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry '
தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy
Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle'
என்று …!
 
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai'
என்று …!
 
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I
Love You' என்று …!
 
இரவில்
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
                                           -- நம்மை போல் ஒரு தமிழன்