மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிசு பெட்ரோலியத்துக்கு உரிய ஆழ்கடல் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் வெடித்து 45 நாட்கள் ஆகிறது. எண்ணெய் கிணறை அடைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது வரை 50 மில்லியனுக்கு மேலான காலன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது. உண்மையா எவ்வளவு எண்ணெய் வெளியேறி உள்ளது என்று யாருக்கும் தெரியாது.
இந்த எண்ணெய் வெளியேற்றத்தால் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களின் மீன் பிடிப்பு மற்றும் கடற்கரையை சார்ந்த சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் இப்ப தான் புளோரிடா பக்கம் வர தொடங்கியிருக்கு.
மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவான குடியரசு கட்சி செல்வாக்கு உடையது.
இது அப்பகுதியின் புயல் காலம். கண்டிப்பா புயல் உண்டு. அது எண்ணெய் பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். இவங்க எண்ணெய் வெளியேற்றத்தை இப்ப நிறுத்தப்போறதில்லை (முடிஞ்சா தான).
மக்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.
குறிப்பு -- என் வலைப்பதிவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
வியாழன், ஜூன் 03, 2010
புதன், ஜூன் 02, 2010
செவ்வாய், மே 25, 2010
என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது.
என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயன்று வருகிறேன். எப்படியும் அடுத்த மாதத்துக்குள் சிக்கலுக்கான காரணத்தை கண்டுபிடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்.
சரிசெய்துவிட்டேன் என்று நினைத்த tamilers.com சிக்கல் மீண்டும் வந்துவிட்டது.
சரிசெய்துவிட்டேன் என்று நினைத்த tamilers.com சிக்கல் மீண்டும் வந்துவிட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)