வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், பிப்ரவரி 11, 2010

கடும் பனிப்பொழிவுக்கு பின் - புகைப்படங்கள்

2010 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவை பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள வாசிங்டன் & பால்டிமோர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது , 2 அடி உயரத்துக்கு மேல் பனி பொழிவு இருந்தது. அப்ப வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை (நல்ல முடிவு). பனிப்பொழிவு ஓய்ந்ததுக்கு அப்புறம் குடியிறுப்பு வளாகத்தில் சில புகைப்படங்களை எடுத்தேன். வரலாற்றில் இடம் பெற்ற இந்த பனிப்பொழிவை படம் பிடிக்கலை அப்படிங்கற அவப்பெயர் வந்துட கூடாது பாருங்க இஃகிஃகி.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...


1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.


2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி


3. குடியிருப்பு வளாகம்



4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.

.

வியாழன், பிப்ரவரி 04, 2010

மழை மறைவு பகுதி நமக்கு மட்டும் தானா?

தமிழகத்தில் மழை ஏன் குறைவா பெய்யுது என்பதற்கான காரணத்தை பள்ளி பாட புத்தகத்துல படிச்சிறுப்போம். காரணம் அதிக மழைப்பொழிவை கொண்டு வரும் 4 மாசம் இருக்கும் தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால். 2 மாசம் அடிக்கும் வடமேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகத்தின் உள் பகுதிகள் எப்பவும் வறண்ட பகுதிகள் தான்.

அமெரிக்காவுல மேற்கு கரையில் அடிக்கும் காற்று மழையை 4000 கிமீ தாண்டி கிழக்கு கடற்கரை வரை கொண்டு வருது. இங்க மட்டும் மலை இல்லையா? இருக்கு.


கேரளாவ தாண்டுனா நாம தான். ஏன் நம் பகுதி மட்டும் மழை மறைவு பகுதியா இருக்கு? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.

கடற்கரையை ஒட்டி இருப்பதால் நமக்கு அதிகமான மழை பொழிவு இருக்கவேணும். வானத்த பொழந்துகிட்டு கொட்ட வேணாம், குறைஞ்சபட்சம் குடிக்க பஞ்சம் இல்லாம தண்ணி கிடைச்சாலே போதும். ஏன் இயற்கை தமிழகத்துக்கு இந்த ஓரவஞ்சனையை செய்கிறது? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
.

வியாழன், ஜனவரி 28, 2010

K V தங்கபாலுவில் KV என்பது என்ன?

தற்போதய தமிழக காங்கிரசு தலைவர் K V தங்கபாலு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுல K. V என்பது எதைக்குறிக்குது? என்னய்யா இது கேள்வி. V என்பது அவங்க அப்பா பேரோட முதல் எழுத்தா இருக்கலாம் K என்பது அவங்க கிராமத்தோட முதல் எழுத்தாவோ அல்லது அவரு தாத்தாவோட பெயரின் முதல் எழுத்தாவோ இருக்கலாம் என்று பலர் சொல்வது எனக்கு புரிகிறது. நானும் அப்படி தான் நினைத்தேன். அவங்க அப்பா பேரு என்ன என்று அறிந்து கொள்ள ஆவல். தேடி பார்த்தேன் எங்கும் கிடைக்கலை. இவரு மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டாரே அப்ப மனு தாக்கல் செய்யும் போது உறுதிமொழி ஆவணம் ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துருப்பாருல்ல அதுல பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று யோசனை வந்தது. சரின்னு தேர்தல் ஆணையத்தின் வலைக்கு போய் கண்டு பிடித்தேன்.

ஆனா பாருங்க அதுல இவரு அப்பா பேரு தங்கவேலுன்னு இருக்கு.


யாருக்காவது KVக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு தங்கபாலுவ பிடிக்காம இருக்கலாம் அதுக்காக தவறா சொல்ல வேண்டாம். இவரு தாத்தா பேரு KV ன்னு இருக்குமோ?? எண்கணித சோதிடத்தின் வேலையா இருக்குமோ???
.
.