வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், பிப்ரவரி 11, 2010

கடும் பனிப்பொழிவுக்கு பின் - புகைப்படங்கள்

2010 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவை பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள வாசிங்டன் & பால்டிமோர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது , 2 அடி உயரத்துக்கு மேல் பனி பொழிவு இருந்தது. அப்ப வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை (நல்ல முடிவு). பனிப்பொழிவு ஓய்ந்ததுக்கு அப்புறம் குடியிறுப்பு வளாகத்தில் சில புகைப்படங்களை எடுத்தேன். வரலாற்றில் இடம் பெற்ற இந்த பனிப்பொழிவை படம் பிடிக்கலை அப்படிங்கற அவப்பெயர் வந்துட கூடாது பாருங்க இஃகிஃகி.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...


1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.


2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி


3. குடியிருப்பு வளாகம்



4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.

.

8 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

அபாய பனிப்பொழிவை... அழகா படம் பிடிச்சிருக்கிங்க..... பகிர்வுக்கு நன்றி.

குறும்பன் சொன்னது…

நன்றி கருணாகரசு. வெளிய போய் படம் பிடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனா பனி அதிகம் இருந்ததால் வெளியில் நடைபாதைகள் சுத்தப்படுத்தப்படவில்லை, மேலும் நடந்து சென்றால் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் செல்லமுடியவில்லை.

பழமைபேசி சொன்னது…

பகிர்தலுக்கு நன்றிங்க.....

//குடியிறுப்பு //

குடியிருப்பு

பழமைபேசி சொன்னது…

//எடுத்ததில் சில உங்களுக்காக...//

அதென்ன சில?

எல்லாமும் வேணும் எங்களுக்கு! இஃகி!

குறும்பன் சொன்னது…

திருத்தியாச்சு. இதுக்கு தான் பழமை வேணுங்கிறது.

குறும்பன் சொன்னது…

எல்லா படமும் போட முடியாது. என் புகைப்படம் எடுக்கும் திறமை எல்லாருக்கும் தெரிஞ்சிரும் இஃகிஃகி.

எடுத்ததில் நல்லா வந்ததை மட்டும் தான் போடமுடியும் இஃகி. ஏதோ எடுத்ததில் நாலாச்சம் நல்லா வந்திருக்கேன்னு நான் மகிழ்ச்சியா இருக்கேன்.

பழமைபேசி சொன்னது…

தமிழ்மணத்துல உங்க ஓட்டு நீங்கதான் போடணும்... தெரியும்ல?

குறும்பன் சொன்னது…

கடவுச்சொல் மறந்து போச்சுங்க இஃகி. இப்ப கண்டு பிடிச்சிட்டேன்.