வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், அக்டோபர் 23, 2017

நாள் கணக்கு - மண்டலம்


கோள்கள் (நவகிரகங்கள்) 9
விண்மீன்கள் *(நட்சத்திதரங்கள்) 27
ராசிகள் 12
எல்லாத்தையும் கூட்டுனா 48 (9+12+27)
ஒரு மண்டலம் 48 நாட்கள்

இந்திய இந்து மரபில் பதினெட்டு என்ற எண் சிறப்பு பெற்றது. வியாசர் எழுதிய தொன்மங்கள் (புராணங்கள்) 18, ஐயப்பனின் புனித படிகள் 18, சபரிமலையை சுற்றி உள்ள மலைகள் 18 , கீதையின் அத்தியாயங்கள் 18 இப்படி.



ஏன் ஓம் முருகா போற்றி, ஓம் வேலவா போற்றி ,.... என்பது போன்ற அனைத்து போற்றி மந்திரங்களையும் 108 முறை ஓதுகிறார்கள்? அது என்ன 108? எச்சமிச்சா இருக்கக்கூடாதா?

108 என்பது 12, 9, 27, 18 என்ற எண்களால் வகுபடும் மிகச்சிறிய எண்.

மேலும் 1, 2, 3, 4, 6, 9  என்பதால் வகுபடும் எண் என்பதும் அதற்கு மேலும் சிறப்பை கூட்டுகிறது.






திங்கள், அக்டோபர் 09, 2017

நாற்பதுக்கும் மேலும் நின்று விளையாட - 18+

எக்சைல் புத்தகத்தில் சாரு நிவேதிதா கூறியதை அப்படியே எழுதியுள்ளேன்.

காயகல்பம்
காயம் - உடல்
கல்பம் - நரை திரை பிணி மூப்பு இல்லாமல் உடலை கல் போன்று வைத்துக்கொள்வது

கற்ப மூலிகைளில் ஒன்றான தூதுவளைக் கீரையை  மிளகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு  மண்டலம் தின்றால் ஆண்மை அதிகரிக்கும்.

தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி  பாலில் கலந்து உட்கொண்டாலும் ஆண்மை அதிகரிக்கும்.

தாலிக் கீரை என்று ஒரு கீரை உள்ளது. இதன் இலை தாலியை போல் இருக்கும். இதை தொடர்ந்து உண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தையத்தை காலையில் ஊறப்போட்டு மாலையில் அதன் நீரை வடிகட்டி ஒரு தம்ளரில் போட்டு கவிழ்த்து போட்டு மூடி வைத்து விடவேண்டும். மறு நாள் காலையில் முளை விட்டிருக்கும் வெந்தயத்தை தின்ன வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறைவதோடு ஆண்மை அதிகரிக்கும்.

துளசி கொழுப்பை குறைக்கும்.

கருந்துளசி இலைகள் 9உம் மூன்று நாட்டுப் பூண்டும் கொஞ்சம் இஞ்சியும் பச்சையாக படுக்க போகும் முன் உண்டேன் கொழுப்பு பெருமளவில் குறைந்தது என்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

பசலிப் பழம், நாவல் பழம் இரண்டும்  கொழுப்பை குறைக்கும்.


  1. அரசம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் பருகுதல்.
  2. ஓரிலைத் தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தல்.
  3. ஒற்றைச் செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து  நீரில் கொதிக்க வைத்து வெண்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தல்.
  4. கசகசாவை ஊற வைத்து தின்பது
  5. இலுப்பைப் பூவை  பாலில் போட்டு காய்ச்சி குடித்தல்
  6. சீரகப்பொடி வில்வப் பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து தின்பது
  7. நெய் மிளகு உப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை இவைகளை சேர்த்து  துவையலாக்கி தின்பது.
  8. வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேக வைத்து தினமும் இரு வேளை தின்பது.
தாது விருத்தி நீடித்த உடல் உறவு ஆகியவற்றுக்கு மேற்கண்ட மூலிகைகளுக்கு ஈடாக எந்த வயாக்ராவும் இல்லை. இதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்ட நான் மண்டலம் மண்டலமாக மாற்றி மாற்றி இவ்விசயங்களை உண்டு வருகிறேன்.

அதனால் தான் 2 மணி நேரம் foreplay இல்லாமல் என்னால் கலவியில் ஈடுபட முடிகிறது.     2 மணி நேரம் foreplay  இல்லாமலேவா என்று சில அப்பாவிகள் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது காலையில் இஞ்சி இரவு கடுக்காய்  ஒரு மண்டலம் உட் கொள்ளுங்கள்  நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்பது.

துவர்ப்பு சுவைக்கும் தாது விருத்திக்கும் தொடர்பு உண்டு என்பது என் இளமை ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
காட்டு;- மாதுளம் பழம், அதிமதுரம், கொட்டைப் பாக்கு

உடல் உறவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கொட்டைப் பாக்கைக் கடித்து தின்று விட்டால் விந்து நின்று போகும். நின்று போகும் என்றால் விந்து வெளிவர மணிக்கணக்கில் ஆகும்..

நின்று ஆட வாழ்த்து.😊 😄

                                                                                                                                                                                                                                                                                                                                                     






ஆத்தி - குறிஞ்சிப்பாட்டு

45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,

குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

பொருளுரை: 

சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.

http://sekalpana.blogspot.in/2016/04/blog-post_36.html


ஆத்தி மலரைக் குறிஞ்சிப்பாட்டு ‘அமர் ஆத்தி’ என்று குறிப்பிடுகிறது. அமர் என்னும் சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள்.
ஆத்தி மரதைக் கருங்காலி என்கின்றனர்
சோழப் பெருவேந்தர்களின் குடிப்பூ ‘ஆர்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இந்த ஆர்-மலரை ஆத்தி என்கின்றனர்.

சிவபெருமான் ஆத்திப் பூவைச் சூடியுள்ளான் என்பர். (ஆத்தி சூடி – நூல்)

http://vaiyan.blogspot.in/2015/09/kurinjipattu_12.html

ஞாயிறு, அக்டோபர் 08, 2017

இளமை திரும்பி வர இஞ்சி சுக்கு கடுக்காய்

குடு குடுத்த கிழவனுக்கும் இளமை ஆடி வர ... இஞ்சி  சுக்கு  கடுக்காய்  ஒரு மண்டலம் தின்னவும் 
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசி குலாவி 

நடப்பானே ...

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய் 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் 

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்

நன்றி !

அரவின் தீபன்...

http://siththamaruththuvavilakkam.blogspot.in/2012/08/blog-post.html

ஞாயிறு, அக்டோபர் 01, 2017

MRI -ஸ்கேன் என்னும் மின்காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி

அறிவியலின் வழியாக அளப்பரிய பயன்களை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், அதன் அடிப்படைகளைப் பற்றி என்றேனும் அறிந்துகொள்ள முயன்றிருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லைதான். அறிவியற்கண்டுபிடிப்புகள் யாவையும் அறிவியலாளர்களின் நோக்கற்கரிய நோக்கால், நுண்ணறிவால் விளைபயனை உலகிற்கு கொடுக்கப்பட்ட கொடைகள். அதுவும் இதுபோன்ற நோயுணர்த்தும் கருவிகளைக் (diagnostic tools) கண்டுபிடித்தவர்களைத் தெய்வங்கள் என்று சொன்னாலும் மிகையாக இருக்காது. இந்தக் கண்டுபிடிப்புகள், கோபுரத்தையும், குடிசையையும் ஒன்றெனக் கருதும் மழையைப்போல, கோடிகளில் புரள்பவரையு ம், அடுத்தவேளை உணவுக்காகப் போராடும் ஏழையையும் ஒன்றெனக்கருதிப் பயனளிக்க வல்லவை. சரி MRI (Magnetic Resonance Imaging) என்றால் என்ன? அதன் அடிப்படைகள், பயன்கள், வேதியியலின் பங்கு என்ன என்பது பற்றியும் தமிழ்கூறும் நல்லுலகத்துக்குப் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். தமிழ் இளநிலை -முதுநிலை அறிவியலாளர்களுக்கும், அறிவியல் விரும்பிகளுக்கும், பயனுள்ளதாக இருக்குமென்றும் நம்புகிறேன்.
நோயுணர்த்திகள் (Diagnostic Tools)
1895 களுக்கு முன்னம், உடலில் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பழுது என்றால், உடலை அறுத்துத்தான் கண்டறியமுடியும். வெறும் அனுமானத்தில், அவதானிப்பில், பட்டறிவில் தான் மருத்துவம் செய்தார்களேயொழிய, உடலின் உள்ளே, இன்ன இடத்தில், இன்னது ஏற்பட்டிருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லும் முறையெல்லாம் சாத்தியமாகி இருக்கவில்லை. 1895 களில் இராயின்டஜன் என்பவர், அதிவேக மின்காந்த அலைகளை, கடினமான உலோகப்பரப்பில் மோதவிட்டபோது, ஒருவகையான அதிக ஆற்றலுடைய, அதேசமயம் அதன் பண்புகள் இன்னதுதான் என்று முழுமையாக அறுதியிட முடியாத, ஒருவகைக் கதிர்கள் வெளியாவதைக் கண்டுபிடித்தார். அவ்வாறு, முழுமையாக கண்டுணரமுடியாத, அவ்வகைக் கதிர்வீச்சுக்கு "X" வகை, அதாவது unknown (X) rays என்று பெயரிட்டார். இந்த X-Ray கதிர்வீச்சானது, சதையை ஊடுருவிச் செல்லும். ஆனால் எலும்பை ஊடுருவமுடியாமல் எதிரொளித்துத் திரும்பிவந்துவிடும். அந்த எதிரொளிப்பைத்தான் நாம் X-Ray படமாக மாற்றிக் கொள்கிறோம். ஆகவே X-Ray தான் முதன்முதலாக மனித உடலுக்குள் நடந்திருக்கும் சீர்கேட்டை அல்லது எலும்பு முறிவை, கத்தியின்றி இரத்தமின்றி தெளிவாகக்காட்டிய கருவி ஆகும். இதன்பின்னர்தான், அதே மின்காந்த அலைகளை மூலமாகக் கொண்ட Computer Tomography (CT-Scan), நுண்ஒலியலைகளை (அதாவது நுண்ணிய சத்தத்தை) உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளில் மோதவிட்டு, எதிரொலியாகத் திரும்புவதைக் கணினியில் படமாக்கிக் காட்டும் கருவியான Ultrasound Scan, அணுக்கரு கதிர்வீச்சைக் (Nuclear Energy) கொண்டு உருவாக்கப்படும் Positran Emission Tomography (PET) என்று படிப்படியாக நோயுணர்த்தும் நுட்பங்கள் பெருவுருவாக வளர்ந்து நிற்கின்றன. அந்தவரிசையில் காந்தஅலைகளை, ரேடியோ அலைகளுடன் சேர்த்து உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளைத் தெள்ளறப் படமாக்குவதுதான் MRI-Scanning முறை ஆகும். இதைக் கண்டுபிடித்தவர்கள் Paul Lauterbur மற்றும் Sir Peter Mansfield (நோபல் பரிசும் பெற்றனர்)
தண்ணீர் தண்ணீர்!!
உண்மையிலேயே MRI கருவியின் முதன்மையான வேலை என்னவென்றால் நம் உடலுக்குள் இருக்கும் தண்ணீரைப் படமெடுப்பதுதான். தண்ணீரைப் படமெடுப்பதென்றால்?? இவ்வுலகம் நீராலானது என்பதைப்போல, நம் உடலும் 70% தண்ணீரால் ஆனதுதான். தண்ணீரென்பது இரண்டு ஹைட்ரஜன்கள், ஒரு ஆக்சிஜன் பிணைந்துதான் H2O உருவாகிறது. MRI க்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஏனென்றால் ஆக்சிஜன் காந்தவிசைக்குக் கட்டுப்படுவதில்லை. ஆனால் ஹைட்ரஜன் அணுவானது மந்திரவாதிக்குக் கட்டுப்படும் குட்டிச்சாத்தானைப்போல, காந்தவிசைக்குக் கட்டுப்பட்டு தானும் ஒரு காந்தமாக மாறிவிடுகிறது.
ஹைட்ரஜன் காந்தமாகுமா?
உலகிலிதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 118 தனிமங்களுக்கெல்லாம் முதன்மையானதாகவும், மிகமிகமிகச் சிறிய அணுவாகவும் இருப்பதுதான் இந்த ஹைட்ரஜன். ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலக்ட்ரானும் (எதிர்மின்துகள்-Negatively charged), ஒரேயொரு புரோட்டானும் (நேர்மின்துகள்-Positively charged) இருக்கின்றன. "வார்டன் ன்னா அடிப்போம்" ங்கற வடிவேலு காமெடி யைப்போல, எந்தவொரு மின்னேற்றம் பெற்ற (Charged species) துகளை காந்தப்புலத்தில் வைத்தாலும் அது தன்னைத்தானே காந்தவிசையின் அச்சை மையமாகக் கொண்டு சுழலும். அதாவது நேர்மின்னேற்றம் (Positively charged) பெற்ற புரோட்டானையோ அல்லது எதிமின்னேற்றம் (Negatively charged) பெற்ற எலக்ட்ரானையோ காந்தப்புலத்தில் வைத்தால் அது தன்னைத்தானே சுழலத் தொடங்கும். அப்படியானால், மேற்சொன்ன இரண்டு வகையான துகள்களையும் பெற்றிருக்கிற ஹைட்ரஜனும் சுழலுமல்லவா? ஆம்!! காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு ஹைட்ரஜனும் தன்னைத்தானேச் சுழலும். அவ்வாறு சுழலும்போது தன்னைச்சுற்றி ஒரு காந்தப்புலத்தையும் உருவாக்கிக் கொள்கிறது. ஹைட்ரஜன் அணுவானது, ஒரே ஒரு நொடிக்குள் 63,000,000 முறைகள் தன்னைத்தானேச் சுழன்று விடுகிறது.
மனிதவுடலுக்குள் எண்ணிலடங்காக் காந்தங்கள்
மனித உடலுக்குள் 70% தண்ணீர் இருக்கிறதென்பதால் கோடானுகோடி நீர் மூலக்கூறுகள் இருக்குமல்லவா? அப்படியென்றால்
மனித உடலை காந்தப்புலத்துக்குள் கொண்டுசெல்லும்போது, ஒரு நீர் மூலக்கூறுக்கு இரண்டு ஹைட்ரஜன் காந்தங்கள் என்ற கணக்கில், உடலில் இருக்கும் கோடானுகோடி நீர் மூலக்கூறுகளின் இருமடங்கு ஹைட்ரஜன் காந்தங்கள் உடலுக்குள் உருவாகின்றன. அத்தனை ஹைட்ரஜன் காந்தங்களும், நம் உடலுக்குள் காந்தவிசை செலுத்தப்படும் திசையையே அச்சாகக் கொண்டுத் தன்னைத்தானேச் சுழல்கின்றன. அண்டத்தின் விசையில், நாமிருக்கும் இந்தப் புவிப்பந்தும் இப்படித்தான் சுழல்கிறது, புவிகாந்தப்புலமும் உருவாகிறது.
உடலென்பது ஒன்றானாலும், பல்வேறுபட்ட உள்ளுறுப்புகளால் யாக்கப்பட்டது அல்லவா? அதுபோல நீர் மூலக்கூறின் வடிவம் (H2O) ஒன்றானாலும், அதன் வேகம், அடர்த்தி, சுற்றுப்புறம் போன்றவை உறுப்புக்கு உறுப்பு மாறுபடும். ஆகவே அதன் சுழலும் வேகமும், அதனால் உருவாகும் காந்தப்புலத்தின் தன்மையும் மாறுபடுகின்றன. இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், புரதங்கள், நுண்தாதுக்கள், இன்னபிற என்று யாவும் தண்ணீரில் கலந்துதான் இரத்தம் உருவாகிறது. இரத்தக் குழாயில் எந்தவொரு தடையுமில்லாமல் இருந்தால் ஹைட்ரஜன் அணுக்களின் சுழற்சியிலோ, உருவாகும் காந்தப்புலத்திலோ எவ்வித மாறுதலும் இருக்காது. ஆனால் அதன் வழியில் ஏதேனுமொரு அடைப்போ, துளையோ அல்லது வேறு ஏதேனுமொரு தடையோ இருந்தால் அவ்விடத்தில் (நீர்மூலக்கூறில் இருக்கும்) ஹைட்ரஜனின்
சுழற்சியில், காந்தப்புலத்தில் மாற்றமிருக்கும். அந்த மாற்றத்தைப் படமாக்கி உணர்த்துகின்ற கருவிதான் MRI.
MRI செயல்படும் முறை
வட்டவடிவமாக இருக்கும் MRI கருவிக்குள் நம்மைக் கொண்டுசென்று உடலின் எல்லாப்பகுதிக்கும் சரிசமானமாகக் காந்தவிசையைச் செலுத்துவார்கள். அப்போது நம் உடலிலுள்ள அத்தனை நீர் மூலக்கூறுகளின் ஹைட்ரஜன்களும் காந்தமாகிச் சுழலத் தொடங்குகின்றன. பெரும்பாலும் MRI கருவிகளில் 1.5 முதல் 3.0 Tesla அளவிலான காந்தவிசை மனித உடலுக்கு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட புவியின் காந்தப்புலத்தின் விசையைவிட 50000 மடங்கு அதிகம். ஒரு ஹைட்ரஜன் அணுவை நொடிக்கு சராசரியாக 63,000,000 முறைகள் சுழல வைக்கவே இவ்வளவு மிகையான காந்தப்புலவிசை கொடுக்கப்படுகிறது. கூடவே ரேடியோ அலைகளையும் 63.9 MHz நம் உடலுக்குள்ளே செலுத்தப்படுகிறது. எதற்காக என்று தெரிந்துகொள்ள ஒரு சுழல்கின்ற பம்பரத்தைக் கற்பனை செய்துகொள்வோம். சாட்டையில் சுழற்றிவிட்ட பம்பரம் மிகவேகமாகச் சுழலும்போது, தன்னைத்தானே சுழன்றுகொண்டே பம்பரத்தின் தலைப்பகுதியும் சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுவதைப் பார்க்கலாம். அதையேதான் ஹைட்ரஜனும் அதிவேகத்தில் சுழலும்போது பம்பரத்தைப்போலவே காந்தவிசை அச்சுக்கு வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுகிறது. சாட்டையிலிருந்து கொடுக்கப்படும் ஆற்றலால் பம்பரம் சுழன்றுகொண்டே சுற்றுவதைப்போல, ஹைட்ரஜன் சுழன்றுகொண்டே வெளிப்பக்கம் சாய்ந்து சுற்றுவதற்கு ரேடியோ அலை ஆற்றல் (63,000,000 rotations per second = 63.9 MegaHertz) தேவைப்படுகிறது. அதாவது நிலையான காந்தப்புலத்தில் மனித உடலை வைத்துவிட்டு, படிப்படியாக ரேடியோ அலைகளின் செறிவைக் கூட்டிக்கொண்டே சென்று ஹைட்ரஜன்களின் சுழற்சியை, சுற்றும் ஆற்றலை, காந்தப்புலத்தைக் கணக்கிடுவதன் மூலம் உடலில் மாறுபாடு அடைந்த பகுதியை படமாக்கிக் காண்பிப்பதைத்தான் காந்தவிசை ஒத்ததிர்வு படமாக்கி ஒருசில நிமிடங்களில் கத்தியின்றி, இரத்தமின்றிச் செய்துவிடுகிறது.
MRI தொழில்நுட்பத்தில் வேதியியலின் பங்கு
இயற்பியல், பொறியியல், உயிரியல், மருந்தியல் என்று எல்லாத் துறைகளும் சேர்ந்து உருவாக்கிய படைப்புதான் இந்த MRI கருவி ஆகும். ஆயினும் வேதியியல் துணைசெய்யவில்லை என்றால் நான் மேலே விளக்கியதைப்போல உடல் உள்ளுறுப்புகளைப் படமாக்கினாலும் அவ்வளவு தெள்ளத்தெளிவாக இருக்காது. காரணம் மற்ற அணுக்களைவிட ஹைட்ரஜனின் காந்தமாகும் பண்பு சற்று குறைவு என்பதால்தான். அதற்காக அதிக காந்தமாகும் திறமுள்ள கடோலினியம் என்னும் உலோகத்தாலான சேர்மத்தை MRI படமெடுப்பதற்கு முன்னால் நம் உடலுக்குள் செலுத்தப்படும். காரணம் கடோலினியம் சிறந்த காந்தமாக்கியாகச் செயல்படுவதால் உடலிலுள்ள எல்லாப் பகுதியிலிருக்கும் (நீர்) ஹைட்ரஜன்களை மிகவேகமாக காந்தமாக்கிவிடும். தடையுள்ள பகுதியிலிருக்கும் தண்ணீர் ஹைட்ரஜனும் காந்தமாகிவிடுவதால் எளிதில் அவற்றின் சுழற்சி, ஆற்றல், காந்தப்புல வேறுபாடுகளைக் கொண்டு கணினி நமக்குப் படமாக மாற்றிக் காட்டிவிடுகிறது. ஆகவே தான் இதுபோன்ற காந்தமாக்கும் மற்ற உலோகங்களான தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்றவைகளாலான சேர்மங்களை MRI Contrasting Agents (MRI படத்தெளிவாக்கி) ஆகப் பயன்படுத்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன (என்னுடையது உட்பட).
முனைவர் செ. அன்புச்செல்வன் .
01/10/2017 (4.00 am)
https://www.facebook.com/sanbu.selvan.7/posts/1593441640714654