வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், டிசம்பர் 05, 2016

செயலலிதாவுக்கு உண்மையில் ஏற்பட்டது மாரடைப்பா?

அப்பலோ மருத்துவமனை நிருவாகம் செயலலிதாவிற்கு Cardiac Arrest வந்துள்ளது என்று அறிவித்துள்ளது, மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்றது.

நம்ம செய்தி ஊடகங்கள் அவருக்கு மாரடைப்பு என்றன. பிபிசி ஆங்கில பதிப்பும் தமிழ் பதிப்பும் கூட அவருக்கு மாரடைப்பு என்று தான் செய்தி இட்டுள்ளன. மாரடைப்பு என்றால் Heart Attack. Heart Attack என்பது வேறு Cardiac Attack என்பது வேறு என்பது ஊடகவியலாளர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் தரத்தை காட்டுகிறது. நாம் அவர்கள் சொல்வதை தான் நம்பிக்கொண்டு உள்ளோம், எல்லாம் விதி. பிபிசி ஊடகவியலாளர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். மற்ற தமிழ் ஊடகங்களை விட அவர்கள் தரமானவர்கள் என்பது தான் அதற்கு காரணம்.


ஊடகவியலாளர்கள் புதிதாக எந்த கலைச் சொல்லையும் உருவாக்க விட்டாலும் இருக்கும் கலைச் சொல்லையாவது பயன்படுத்த வேண்டும். Cardiac arrest  என்பதற்கு தமிழ் சொல்  இதய நிறுத்தம் என்பதாகும்.


மாரடைப்பு (Heart Attack ) என்றால் என்ன?
இதயத்தசைக்குச் செல்லும் குருதி (இரத்தம்) வழக்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது மாரடைப்பு.  எளிமையாக சொல்வது என்றால் இதயத்தின் ஒரு பகுதி குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது.


இதய நிறுத்தம் (Cardiac arrest) என்றால் என்ன?
இதயத்தின் சுருங்கி விரியும் செயல்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச் சுற்றோட்டம் நிறுத்தப்படுவது இதய நிறுத்தம் ஆகும். எளிமையாக சொல்வது என்றால் இதயம் முழுவதும்  குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது. இது மாரடைப்பைவிட தீவிரமானது.

நாமாவது வேறுபாட்டை புரிந்து கொள்வோம். தமிழ் விக்கிப்பீடியாவில் இவற்றைப் பற்றி கட்டுரைகள் உள்ளது.


1 கருத்து:

வேகநரி சொன்னது…

தகவலுக்கு நன்றி.