செந்தில்வேலவன் மாவட்ட அளவிலான பெரிய அரசு அதிகாரி. பல்வேறு காரணங்களால் இடமாற்றம் வேண்டியும் இடமாற்றம் கிடைக்கவில்லை. ஒன்பது மாதங்களாக இதற்கு பல வகைகளில் முயல்கிறார். இன்னும் ஓர் ஆண்டுக்கு இடமாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்று அறிந்து மனம் வெறுத்த நிலையில் கடைசி புகழிடமான முருகனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறார். இன்னும் முப்பது நாளைக்குள் இடமாற்றம் கிடைத்தால் அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொள்கிறார்.
ஆண்டுதோறும் நடக்கும்
சிறப்பு விழாவை கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு தரப்படுகிறது. இவ்விழாவிற்கு நிறைய
கூட்டம் வரும் மேலும் மாவட்ட அளவில்லான பெரிய அதிகாரிகளும் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்களும் அமைச்சரும் கலந்து கொள்வர். ஆளும் கட்சியின் பெரும் அரசியல் புள்ளிகள் கலந்து கொள்வதால் ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்பதால் இவ்விழா அதிகாரிகளின்
தீவிர கண்காணப்பில் நடக்கும்.
சிலைக்கு மாலை
அணிவித்தால் இடமாற்றம் அல்லது பதவி பறிப்பு போன்றவை நடக்கும் என்ற நம்பிக்கையால் எந்த
பெரிய அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினர்களும் சிலைக்கு மாலை அணிவிக்க மாட்டார்கள். இந்நம்பிக்கையை புறந்தள்ளி சிலைக்கு மாலை அணிவித்த
சில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோயுள்ளது (அடுத்த தேர்தலில்) அதிகாரிகள் இடமாற்றத்தைச்
சந்தித்துள்ளனர். அதனால் இந்நம்பிக்கை அதிகரித்தது.
செந்தில்வேலவனுக்கு
இந்நம்பிக்கை பற்றி மற்றவர்களால் சொல்லப்பட்டது. அவர் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்
சிலைக்கு மாலை அணிவித்தார்.