வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

முயற்சியை கைவிடேல் எல்க்கு சொல்லும் பாடம்.

கடமான் வகையை சேர்ந்த எல்க்கு (elk) என்னும் விலங்கு கூட்டம் அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் எல்லோஇசுடோன் தேசிய பூங்கா (Yellow Stone National Park) அருகில் கம்பி வேலியை தாண்டி குதித்து சென்றது. சில எல்க்குகளால் முதல் முயற்சியில் தாண்ட முடியவில்லை. ஆனால் இரண்டாவது முயற்சியில் தாண்டிவிட்டன. ஆனால் ஒரே ஒரு எல்க்கினால் மட்டும் தாண்ட முடியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. பல முறை பலவாறு முயன்றது பலன் இல்லை. அப்ப பார்த்து சாலையில் மகிழுந்து ஒன்று சென்றது அதனால் பயந்து பின்னால் ஓடியது. பின் ஓரே ஓட்டம் வேலியை தாண்டி தன் கூட்டத்தோடு இணைந்து கொண்டது.

காணொளியை பாருங்கள். அதன் முயற்சியை தெரிந்து கொள்வீர்கள்.


 


5 கருத்துகள்:

தருமி சொன்னது…

கார் ஓட்டுபவர்கள் எல்லோரும் வழி விட்டு ஒதுங்கி இருதிருப்பீர்கள் போலும். நல்லது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தன் கூட்டத்தைச் சேர்ந்தது, தத்தளித்துப் பின்வாங்கும் போது காத்திருந்து அதையும் கூட்டிச் செல்கின்றனவே! அவ்வியல்பு ஆச்சரியப்பட வைக்கிறது.

குறும்பன் சொன்னது…

கார் ஓட்டுபவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள். அப்படி ஒதுங்காம எல்க்கு மோதுனா காருக்கு செலவு அதிகமாயிரும். காவல்துறையும் இது ஓட்டுநர் தவறுன்னு சொல்லிடும் அப்ப கார் காப்பீடும் உதவாது.

குறும்பன் சொன்னது…

எனக்கு தெரிந்து மனிதனை தவிர எல்லா மிருகக்கூட்டமும் தன் கூட்டாளியை காத்திருந்து கூட்டிச்செல்பவை.

குறும்பன் சொன்னது…

நெடுஞ்சாலையில் மான் மோதி வண்டிக்கு (தண்ட) செலவுன்னு மக்கள் அழறத கேள்விப்பட்டிருப்பீங்களே.