மத்திய அமைச்சரவையில் அக்டோபர் 28, 2012 அன்று நடைபெற்ற மாற்றத்தில் 17 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்கள் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டன.
புதிய ஆய அமைச்சர்கள்:
ரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்
தின்சா படேல் - சுரங்கம்
அஜய் மேக்கான் - வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு (விளைாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்)
எம்.எம்.பல்லம் ராஜு - மனிதவள மேம்பாடு
அசுவனி குமார் - சட்டம், நீதி
ஹரீசு ராவத் - நீர்வளம் (உத்தராகண்டத்தில் முதலமைச்சர் பதவி தரப்படாததால் ஆய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்)
சந்த்ரேசு குமாரி கடோச் - கலாசாரம்
துறை மாற்றப்பட்டுள்ள ஆய அமைச்சர்கள்:
வீரப்ப மொய்லி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
ஜெய்ப்பால் ரெட்டி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார்)
கமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம்
வயலார் ரவி- வெளிநாட்டு இந்திய விவகாரம்
கபில் சிபல் - தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சி.பி.ஜோஷி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
குமாரி செல்ஜா - சமூக நீதி மற்றும் நலம்
பவன் குமார் பன்சால் - ரயில்வே
சல்மான் குர்ஷித் - வெளியுறவு (சட்டம், நீதி, சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார்)
ஜெய்ராம் ரமேஷ் - கிராமப்புற வளர்ச்சி
புதிய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
மனீஷ் திவாரி - செய்தி, ஒலிபரப்பு
கே.சிரஞ்சீவி - சுற்றுலா
துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):
ஜோதிர் ஆதித்யா சிந்தியா - மின்சாரம்
கே.எச்.முனியப்பா - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (K ஊர் கோலார், H தந்தை அனுமப்பா)
பாரத்சின்ஹ் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் மற்றும் உடல்நலம்
சச்சின் பைலட் - கார்ப்பரேட் / தொழில்துறை
ஜிதேந்திர சிங் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு
புதிய இணையமைச்சர்கள்
சசி தரூர் - மனித வள மேம்பாடு
கொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
தாரிக் அன்வர் - வேளாண்மை
கோட்லா ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி- ரயில்வே
ராணீ நராஹ் - பழங்குடியினர் நலம்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி - ரயில்வே
அபு அசிம் கான் சவுத்ரி - சுகாதாரம், குடும்ப நலம்
சர்வே சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை
நிநாங் எரிக் - சிறுபான்மையினர் நலம்
தீபா தாஸ் முன்ஷி - நகர்ப்புற வளர்ச்சி
போரிகா பல்ராம் நாயக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்
கிள்ளி க்ருபாராணி - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்
லால்சந்த் கடாரியா - பாதுகாப்பு
துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள்:
இ.அகமது - வெளியுறவு
டி.புரந்தேஸ்வரி - வர்த்தகம் மற்றும் தொழில்
ஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு
எஸ்.ஜெகத்ரட்சகன் - புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
ரஞ்சித் பிரதாப் நாராயின் சிங் - உள்துறை
கே.சி.வேணுகோபால் - பயணிகள் விமானப் போக்குவரத்து
ராஜீவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்ட கமிஷன்
http://www.ndtv.com/article/india/cabinet-reshuffle-list-of-ministers-285220
http://news.vikatan.com/index.php?nid=10980#cmt241
சுரங்க ஊழல் வெளிவந்த போது யார் எப்போ அத்துறையின் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது தெரியாததால் அமைச்சரவை மாற்றத்தை என்பதிவில் சேமிக்கலாம் என்று தோன்றியதின் விளைவு.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
ஞாயிறு, அக்டோபர் 28, 2012
செவ்வாய், அக்டோபர் 23, 2012
என்னுடைய நிழற்படம் பல தளங்களில்
எனக்கு நிழற்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சிறந்த நிழற்படம் கலைஞனாவது எனது ஆசைகளில் ஒன்று. தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பதிவு மூலம் நிழற்படம் பற்றி நான் அறிந்து கொண்டது நிறைய. படித்ததை செயல் படுத்தி பார்த்தேனா என்பது தனி. அப்படி செய்திருந்தால் இன்னேரம் பெரிய ஆளா வந்திருப்பேன். அவர்கள் மாதந்தோறும் நடத்தும் போட்டிகள் சிலவற்றில் நான் கலந்துகொண்டுள்ளேன். நிறைய போட்டிகளில் கலந்துக்க முடியாம போனதுக்கு காரணம் சிறந்த படத்தை அனுப்பவேண்டும் என்று நினைத்து அதை எடுப்பதற்குள் போட்டிக்கு படங்கள் அனுப்பவேண்டிய இறுதி நாள் வந்துடும். மாத போட்டிக்கு 2 மாசம் எடுத்துக்கிட்டா எப்படி? இஃகி இஃகி.
5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை, .....
5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை, .....
திங்கள், அக்டோபர் 15, 2012
புரட்டாசி சனிக்கிழமை ஒருசந்தி - நைனாமலை
புரட்டாசி மாசம் நிறைய பேர் கறி திங்கமாட்டாங்க. நானும் அதில் ஒருத்தன் (இப்ப முட்டை மட்டும் உண்டு இஃகி இஃகி) ஆனா ஒருசந்தி விட்டாச்சுன்னா வீட்டுல் கறி திங்க சமைக்க, கடையில் கறி திங்க தடை இல்லை.கறி திங்கனும் என்பதற்காகவே சில முறை முதல் சனிக்கிழமையே ஒருசந்தி விட்டதும் நடந்திருக்கு இஃகி இஃகி. வழக்கமா நான் புரட்டாசி 3ம் சனிக்கிழமை தான் ஒருசந்தி இருப்பது வழக்கம். இந்த முறை 4ம் சனிக்கிழமை ஒருசந்தி இருந்தேன். டூயிங்... மலரும் நினைவுக்கு போயிட்டேன்
ஊரில் இருக்கும் போது ஒருசந்தி இடுவதற்கு முன் நைனா மலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டில் ஒருசந்தி இடுவது(இருப்பது) வழக்கம். ஊர்ல இருக்கிறப்ப விடிய காலை 3~4 மணிக்கு நைனாமலைக்கு போய் மலை ஏறி உச்சியில் உள்ள வரதராச பெருமாள கும்பிட்டுவிட்டு சுமார் காலை 9~10 மணி அளவில் வீட்டுக்கு வருவேன்.
நைனா மலை என்பது உயரமான மலையான்னு கேட்டா இல்லை ஆம் என்று தான் சொல்ல வேண்டும். நைனா மலையில் விறு விறுன்னு எங்கேயும் நிக்காமல் வேகமாக ஏறினால் ஒரு மணி நேரத்தில் உச்சியை அடையலாம், உச்சியில் கல்லால் கட்டப்பட்ட வரதராச பெருமாள் கோயில் உள்ளது. ஏதோ இராசா அக்கோயிலை கட்டியிருக்கிறார் ஆனா யார் அந்த இராசா என்று தெரியவில்லை. பாதை சின்னது நிறைய இடத்துல ஒழுங்கா இருக்காது கோயில் கட்டின காலத்துல சில இடங்களில் கல் படிகளை கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன், அந்தப்படிகள் சிலது வழியில் கொஞ்சம் இருக்கு. அதுக்கப்புறம் யாரும் படி அமைத்ததாக தெரியவில்லை. நடந்து தான்
உச்சிக்கு செல்ல முடியும் வண்டிகள் செல்ல பாதை இல்லை. விடியகாலையில் ஏறுவது சிறந்தது ஏன்னா அப்ப கூட்டம் குறைவா இருக்கும் மேலும் 8 மணிக்கு அப்புறமா கூட்டம் அதிகமாகிடும் வெயில் இல்லாததால் சோர்வு குறைவாக இருக்கும், பலர் இரவு நேரத்தில் ஏறுவாங்க 6 மணிக்கெல்லாம் அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. மேலும் கதிரவனின் தயவால் பகலில் மலை ஏறுவது சற்று கடினமாக இருக்கும். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான் அதனால சில இடங்களில் எச்சரிக்கையாக தான் ஏறனும்\இறங்கனும்.
அடிவாரத்துல நிறைய கடைங்க இருக்கும் மலை ஏறப்போகும் முன் பைநிறைய பொறி, கடலை, கொய்யா, சாத்துக்குடின்னு வாங்கிக்கிட்டு ஏறுவது சிறந்தது. அடிவாரத்துல அனுமார் கோயில் இருக்குது சிலர் மலை ஏறும் முன்னும் சிலர் மலையில் இருந்து இறங்கியபின்னும் அனுமாரை கும்பிடுவாங்க. மலை ஏறாத பெருங்கூட்டம் அனுமார கும்பிட நிற்கும் என்பதால் மலை ஏறும் முன் கும்பிடுவதே சிறந்தது. கோயில் பூட்டி இருந்தது என்றால் சாமிக்கு முன்னால இருக்கும் படியில்சூடத்தை பத்த வைச்சு கும்பிட்டு மலை ஏற வேண்டியது தான். கம்பி கதவு தான் போட்டிருப்பாங்க அதனால சாமி நல்லா தெரியும், அனுமாரும் கிட்டதட்ட 6 அடி உயரம் இருப்பார்.
நைனாமலை சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தையை நோக்கி செல்லும் சாலையில் கிட்டத்தட்ட 1~2 கி.மீ தொலைவில் இருக்கு. நாமக்கலில் இருந்து சென்றால் சேலம் சாலையில் புதன்சந்தையை அடைந்து அங்கிருந்து கிழபுறமாக சேந்தமங்கலத்துக்கு செல்லும் சாலையில் சென்றால் அடையலாம். மொத்த தூரம் 10~12 கிமீ இருக்கும். அதிக அளவான பேருந்துகள் இந்த தடத்தில் தான் இயக்கப்படுகின்றன. அதாவது நாமக்கல் - நைனைமலை. நாமக்கல்லில் இருந்து இன்னொரு வழியும் உள்ளது அது மரூர்பட்டி, பொட்டணம் வழியாக செல்லும் ஆனால் இத்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. சாலையும் நன்றாக இருக்காது மேலும் இது கொஞ்சம்
தூரமும் கூட. நான் பேருந்தில் போகக்கூடிய ஆளா? சைக்கிள் அல்லது டிவிஎசு 50 தான் நம்ம வண்டி. முதல் 3 ஆண்டுகள் சைக்கிள் அப்புறம் டிவிஎசு 50. இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து தான் போவோம்.
மலை ஏறும் போது அங்கங்க உள்ள நம் மூதாதையர்களுக்கு பொறியை போட்டுக்கிட்டு போவோம், நிறைய பேர் அங்க சுத்திக்கிட்டு இருப்பாங்க, கொஞ்சம் அசந்தா பையை நம்மாளு தூக்கிக்கிட்டு போயிடுவாறு அதனால உசாரா தான் இருக்கனும். வழியில் நிறைய இடங்களில் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றை விற்பார்கள். விலை அதிகமா இருக்கும், நாங்க ஐஸ் மட்டும் வாங்கிக்குவோம். அதுமட்டுமல்லாமல் பிதாமகனில் சூரியா கட்டை உருட்டற மாதிரி நிறைய பேர் கட்டை உருட்டி பணம் பறிச்சிக்கிட்டு இருப்பாங்க. உச்சிக்கு பக்கத்துல பாலி (சிலருக்கு அது சுனை சிலருக்கு அது கிணறு எங்களுக்கு அது பாலி) ஒன்னு இருக்கு அங்க அச்சு வெல்லத்தை போடுவோம், மரு இருந்தால் அது மறைந்தால் பாலியில் வெல்லம் போடறேன் என்று வேண்டி இருப்பவர்கள் வெல்லத்தை குடுத்தனுப்புவார்கள். நமக்கு அல்லது நமக்கு தெரிஞ்சவங்களுக்கு மரு இருக்கும், மலை ஏற முடியாதவங்க பாலியில் மறக்காம வெல்லத்தை போடவேண்டும் என்று சொல்லி என்கிட்ட வெல்லம் குடுப்பார்கள். நான் மறுக்க முடியுமா?. பாலின்னா என்னன்னு அகரமுதலியில் காணவில்லை. பாலி என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பாறைகளில் தேங்கியிருக்கும் நீருக்கு பாலின்னு பெயர். கொஞ்சமா இருக்காது நிறைய நீர் இருக்கும். பாறையும் பெரியதாக இருக்கும். சில (எனக்கு தெரிந்து நிறைய இடங்களில்) இடங்களில் அது சீக்கிரம் வற்றாது, ஆண்டு முழுவதும் இருக்கும், மழை நீரே அதன் ஆதாரம்.
பாலிக்கிட்ட காத்து சில்லுன்னு வீசும் மலை ஏறி களைச்சு போனவங்களுக்கு அந்த காத்து சுகமா இருக்கும். அங்க நிறைய கடைங்க இருக்கும் அதாவது கயிற்று கடைகள், நிறைய பேர் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா விப்பாங்க. அங்க இருந்து உச்சி வரை ஏற்றமாகவும் ஏற கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். உச்சியை கொஞ்சம் சீவிவிட்டு கோயில் கட்டியிருப்பாங்க. உச்சியில் கோயில் மட்டும் தான் இருக்கும். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயில். அடிச்சிபுடிச்சி சாமியை பார்க்கனும், கூட்டம் அதிகமா இருந்தா கோயிலில் சாமிய கும்பிடாம கோபுரத்துக்கு பின்புறம் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு இறங்குவோம்.
நான் மட்டும் இல்ல என்னைப்போல் நிறைய பேர் இப்படி தான் செய்வார்கள். புரட்டாசி சனிக்கிழமை கூட்டம் குறைவா இருந்து பார்த்ததில்லை. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் கூட்டம் குறைவா இருந்து நீங்க பார்த்திருக்கிங்க? 2 முறை சாமியை பார்த்து இருக்கேன்.
இறங்கி வரப்ப கொண்டுபோனதெல்லாம் காலியாயிடும் அதனால காசு கொடுத்து வழியில் இருக்கும் கடையில் ஏதாவது தீனி வாங்கி தின்னுகிட்டே வர வேண்டியது தான். அடிவாரம் வந்ததும் நாமக்கட்டி, பூ, பொறி எல்லாம் வாங்கிட்டு வீடு வந்து சேருவோம். நாமக்கட்டிய மட்டும் மறக்காம வாங்கியாறனும், மலைக்கு போயிட்டு வந்து ஒருசந்தி விடுறோம் என்பதற்கு அதான் அடையாளம். சாமந்திப்பூ தான் முதலில் வாங்கும் வழக்கம் அதன் விலை அதிகமானதாலும் வரத்து குறைந்ததாலும் இப்ப எல்லாம் கதம்பம் தான், சில முறை துளசி மாலையும் வாங்கி வந்ததுண்டு. 1 மட்டும் வாங்குனா அது வண்டிக்கு போகும். வாங்கிய பூவில் 1 முழம் நாம வந்த வண்டிக்கு. சாமி கும்பிட்டுவிட்டு ஒருசந்தி இருக்கறவங்க எல்லாம் முதலில் தின்போம் (பசியோட இருக்காங்கல்ல). மலை ஏறவில்லை என்றாலும் ஒருசந்தி இருக்கலாம். பழம் பொறி மட்டும் தின்னாலும் அவங்க ஒருசந்தி இருக்கறதாதான் எடுத்துக்கனும், மலை ஏறுபவனும் அதை தின்னுகிட்டு தான் மலை ஏறுவான் என்பதால் அது சாமி குத்தம் ஆகாது இஃகி. நாம வர தாமதம் ஆகிவிட்டால் சில முறை நாம இல்லாமலேயே சாமி கும்பிட்டுவிட்டுவார்கள் அப்ப கடும் கோபம் வரும், அது மலை ஏறி வந்த குதூகலத்தையே கெடுத்துடும். அப்படி இரு முறை ஆனதால் எப்பவும் நான் வந்த பிறகு தான் சாமி கும்மிடனும் என்று உறுதி வாங்கிட்டுதான் கிளம்பறது வழக்கம். அவங்கள நம்பமுடியாதுன்னு 8-9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர்ற மாதிரி தான் கிளம்பறது. சில முறை அசந்து தூங்கிட்டா . மலை ஏறுனா வீட்டுக்கு வர 10 மணிக்கு மேல ஆகிடும், நாம வரும் வரை ஒருசந்தி விட காத்திருக்கமாட்டார்கள் என்ற அனுபவ பாடம் உள்ளதால், மலை ஏறாம அடிவாரத்துல இருக்கும் அனுமார் கோயிலோட வந்துடுவேன் ஆனா பழம் , பொறி, பூ, நாமக்கட்டி எல்லாம் மறக்காம வாங்கிவந்துடுவேன் இஃகி.
சாமி படையலில் மஞ்ச பூசனிக்காய் கூட்டு, வாழைக்காய் பொரியல், அப்புறம் எதாவது ஒரு பொரியல் அனேகமா அவரையா இருக்கும், நெய், பருப்பு போன்றவை இருக்கும். இந்த மாதிரி சாமி கும்பிடும் போது அல்லது வீட்டில் விருந்து வைத்தால் மட்டுமே நமக்கு பொரியல், கூட்டு எல்லாம் கிடைக்கும். பெருமாளுக்கு கோவிந்தா! கோவிந்தா!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)