வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூலை 10, 2012

கண்ணதாசன் கவிஞன் அல்ல

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என முத்தமிழும் அறிந்த வித்தகர் (யாருங்க அந்தாளு?) ஒருவர் கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

2 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

இதை கூகுள் ப்ளஸ் ல் வெளியிட வேண்டும் என்று பத்திரிக்கையில்படித்த போதே நினைத்தேன். ஏற்கனவே பல பேர்கள் என் மேல் கொல வெறியோடு இருக்குறாங்க. ஜெ ஆதரவு என்று நினைத்துக் கொண்டு?

குறும்பன் சொன்னது…

முகவை விமர்சித்தால் நீங்க ஜெ ஆதரவு. ஜெவை விமர்சித்தால் நீங்க முக ஆதரவு. (விமர்சனம் என்பதை விட அவர்களுக்கு உவப்பில்லாத என்று கொள்ளலாம்) கட்சி சார்பு இல்லாம ஒருவரை நம்மாளுங்களால் பார்க்கமுடியாது :) சிலருக்கு நான் அதிமுக சிலருக்கு நான் திமுக சிலருக்கு நான் காங். இவங்களுக்காக நாம ஏதும் சொல்லாம\பகிர்ந்துக்காம இருக்க முடியுமா? எனக்கு தெரிந்து திமுக காரங்கதான் இணையத்தில் அதிகம் இருக்காங்க அதாவது தீவிரமா இருக்காங்க. அதிமுக காரங்க இருக்காங்க ஆனா அவங்க அப்படி தீவிரமா இருப்பதில்லை.