வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், டிசம்பர் 31, 2009

சென்னை மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்

இது நேற்று உண்மையாக நடந்த நிகழ்வு. எப்படி எனக்கு தெரியும் என்றால் என்னுடன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பரின் பெற்றோருக்கு இது நடந்தது.

இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.

அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.

4 கருத்துகள்:

SurveySan சொன்னது…

//கதவுல ஆடி வைங்//

ஆணி தெரியும். அதென்ன ஆடி? :)

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

ஆடி - கண் ஆடி - கதவு லென்சு

குறும்பன் சொன்னது…

SurveySan கதவுல கண்ணாடி சொருகி அதன் வழியா வீட்டுக்கு வெளியில் வந்திருப்பவர்களை கதவை திறக்காமலே பார்ப்பாங்க இல்லையா அந்த கண்ணாடியை தான் ஆடி என்றேன். குழி ஆடி, குவி ஆடி அறிவியல் பாடத்துல படிச்சது. :-))

குறும்பன் சொன்னது…

சரியான விளக்கம் கொடுத்ததிற்கு நன்றிங்க SUREஷ்.