வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜனவரி 26, 2009

பத்மா விருது யாருக்கு?

2009-ம் ஆண்டுக்கான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துள்ளது. தகுதியில்லாத சிலருக்கும் இது கொடுக்கப்பட்டுள்ளது என்பது சிலரின் அங்கலாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் பத்ம விபூசன் கிடைக்கவில்லை.


வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி, சரோஜினி வரதப்பன் , ஜெயகாந்தன் போன்றோருக்கு பத்ம பூசன் கிடைத்துள்ளது.


விவேக், ஐராவதம் மகாதேவன், அருணா சாய்ராம் , சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, P.R.கிருஷ்ணகுமார் , மருத்துவர் R.சிவராமன், பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் , ஆறுமுகம் சக்திவேல், ஷேக் காதர் நூர்தின் போன்றோருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. நல்லது.

எதற்காக அவர்களுக்கு இவ்விருதுகள் கொடுக்கப்பட்டது என்று அரசு தெரிவிக்கலாம். பல பேர் யார் என்றே தெரியவில்லை, எப்படி அவர்களை பற்றி அறிந்து கொள்வது? தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களைப்பற்றியே தெரியாத போது மற்ற மாநிலத்தவர்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது? பத்மா விருது வாங்கியவர்களின் பட்டியலை தெரிவிக்கும் அரசு தளத்தில் அவர்களைப்பற்றி சிறு குறிப்பாவது இருந்தால் தேவலை. இது பத்மா விருதுக்கு பெருமை சேர்க்கும்.


விவேக், ஐராவதம் மகாதேவன், ஆறுமுகம் சக்திவேல், கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன் ஆகியோரைத்தவிர மற்றவர்களைத் தெரியாது. சுப்ரமணியம் கிருஷ்ணசாமி சென்னை தூர்தர்சனில் குறும்படம் (கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்) காட்டுபவர் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிய குறிப்பு இருந்தால் இந்த ஐயம் எழுந்திருக்காது.


அப்புறம் அனைத்திந்திய அளவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், டோனி, ஹர்பஜன் சிங் பற்றி பெரும்பாலோருக்கு தெரியும். இஃகி இஃகி....

கருத்துகள் இல்லை: