என் நண்பனின் குழந்தை பெயர் சுவேதா (ஷ்வேதா). இப்பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கறாங்க என்று அவனுக்கு ஒரே வருத்தம். அதாவது ஷ்வேதா என்று உச்சரிக்காம சுவேதான்னு உச்சரிக்கறாங்களாம். குறிப்பா அவங்க அப்பா, அம்மா, மாமனார், மாமியாரெல்லாம் சுவேதாதாதாதா ன்னு கூப்பிடறாங்கன்னு அலுத்துக்கிட்டான். நானும் சுவேதான்னு உச்சரிக்கற ஆளு தான் ;-) .
இரண்டு மூன்று நாளா பார்கரப்பல்லாம் புலம்புனான். இதுல ஏதோ சங்கதி இருக்குன்னு எனக்கு புரிஞ்சிபோச்சி. ஆனா என்னன்னு தான் புரியலை. சில்பா செட்டி ( ஷில்பா ஷெட்டி ) பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்த பிறகு தான் எனக்கு அவன் புலம்பலுக்கான காரணம் புரிஞ்சிபோச்சி. உங்களுக்கும் இப்ப காரணம் புரிஞ்சி இருக்கனுமே?
'ஊர் குருவி பருந்தாக முடியாது'ன்னு சொன்னேன், அவனுக்கு ஒன்னும் புரியலை. விளக்கி சொன்ன பிறகு தான் அவனுக்கு புரிந்தது. டேய் நீ வடநாட்டுல இருந்தா தான் ஷெட்டி ஆக முடியும் தமிழ்நாட்டுல இருந்தா செட்டியா தான் இருக்க முடியும் என்று சொன்னேன். அதாவது தமிழ்நாட்டுல் ஷெ ன்னு சொல்றதுக்கு பதிலா செ ன்னு தான் சொல்லுவாங்க குறிப்பா உங்க எங்க அப்பா அம்மா எல்லாம் என்றேன். அதனால ரொம்ப கவலைப்படாத. எப்படியாவது கிரந்தம் பயன்படுத்தி எழுதுவது பேசுவது என்று பல பேரு கங்கணம் கட்டிக்கிட்டு தஇருக்காங்க, அவங்க சட்டிய கூட ஷட்டி அல்லது ஸட்டி ன்னு தான் எழுதுவாங்க அது மாதிரி நீ ஆயிடாதேன்னு சொன்னேன். சட்டியாவே இருக்கான்னா அல்ல ஷட்டி (ஸட்டி)ஆகிட்டான்னு எனக்கு தெரியாது.