வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், செப்டம்பர் 18, 2007

Cyclone Typhoon Hurricane என்ன வேறுபாடு?

இப்ப சீனாவை Typhoon விப்கா (Wipha ) தாக்க வருவதால் சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

சரி Typhoon ன்னா என்ன? நம்ம ஊருல Cyclone வரும், அமெரிக்காவில் Hurricane வரும் இல்லையா அது போல சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான்.

அதாவது அமெரிக்காவில் வரும் Cyclone க்கு பேரு Hurricane, சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான். ஊருக்கு ஊர் ஓர் பேர்வைச்சுக்கிட்டு நம்மல குழப்பறாங்கப்பா. நாம மட்டும் தான் Cyclone ன Cyclone ன்னு சொல்லற ஆளுங்க. ;-))

இன்னும் குறிப்பா சொல்லனும்னா அட்லாண்டிக் & கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Hurricane. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Typhoon. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Cyclone.

5 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

cyclone/typhoone இதுகெல்லாம் சிங்கையில் பெயரே கிடையாது ஏனென்றால் ஒரு தடவை கூட வந்து நான் பார்த்ததில்லை.
அப்பப்ப 4/5 மரம் மாத்திரம் பலத்த காற்றில் விழும்.

சுல்தான் சொன்னது…

அதாவது
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Hurricaneக்கு பேரு Typhoon.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் Hurricaneக்கு பேரு Cyclone.
அட்லாண்டிக் & கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Hurricane க்கு Hurricane.
என்று தெளிவா சொல்லுங்க சார்.
எங்களுக்கொல்லாம் அமெரிக்க பாணில சொன்னாத்தான் பிரியும்.

வவ்வால் சொன்னது…

வெறுமனே கடல் மாற்றம் மட்டுல் இல்லை,இதில் இன்னும் கூட சில வேறுப்பாடுகள் இருக்கு .

புயல் உருவாகும் போது அது ஒரு சுருளாக இருக்கும் அதில் இட சுற்று , வல சுற்று
(clock wise, anti clock wiise) என்று இருக்கு, மேலும் உயர் அழுத்த காற்றினால் வருவது, தாழ்வழுத்த காற்றினால் வருவது,கடலில் வருவது , நிலத்தில் வருவது என்று பார்த்து தான் அந்த வகைப்படுத்துதல்!

நம்ம ஊரில் அரிக்கேன் லைட் சொல்றாங்களே அது கூட ஹரிக்கேன் காற்று அடித்தால் கூட அணையாத லைட் என்ற அர்த்தத்தில் வைத்த பெயர் தான்!

வற்றாயிருப்பு சுந்தர் சொன்னது…

எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒத்துமை இது மூணுல எதாவது ஒண்ணை டெய்லி தமிழ்மணத்துல பாக்கலாம். சரியா? :-)

குறும்பன் சொன்னது…

//cyclone/typhoone இதுகெல்லாம் சிங்கையில் பெயரே கிடையாது ஏனென்றால் ஒரு தடவை கூட வந்து நான் பார்த்ததில்லை.அப்பப்ப 4/5 மரம் மாத்திரம் பலத்த காற்றில் விழும்.//
சிங்கை கொடுத்து வச்சது வடுவூர் குமார் .

//எங்களுக்கொல்லாம் அமெரிக்க பாணில சொன்னாத்தான் பிரியும்.// ஹி ஹி ஆர்வகோளாறுல மாத்தி சொல்லிட்டேன் சுல்தான்.


வவ்வால் உண்மைதான்.

உண்மையை பேச கூடாது வற்றாயிருப்பு சுந்தர் :-))