வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜூன் 14, 2006

இதை கொஞ்சம் படிங்க சார்!

தமிழனோடு ஒன்றி கலந்துவிட்ட ஒரு சொல் என்னவென்றால் அது "சார்" தான். மூச்சுக்கு முன்னூறு தரம் தமிழன் உச்சரிக்கும் சொல் "சார்". என்ன சார் நான் சொல்றது சரி தானே?. அதுவும் திரைப்பட கலைஞர்களின் பேச்சில் இது மூச்சுக்கு மூவாயிரம் முறை வரும். ஒரு திரைப்பட கலைஞரின் தொலைக்காட்சிப் பேட்டியை நண்பர்களுடன் பார்த்த பொழுது தான் "சாரின்" மேன்மையை கண்டுகொண்டோம், சாரைப்பற்றி பேச ஆரம்பித்தோம். அன்னைக்கு அடிச்ச கிண்டலும் கேலியும் நக்கலும் தான் எங்களின் "சார்" பயன்பாட்டை குறைத்தது. எவனாவது ( என் நண்பர்கள் தான்) சார்ன்னு பேசுவதை கேட்டோம் அவன் தொலைஞ்சான், சாரு சாருன்னு சொல்லி அவன நோக அடிச்சிடுவோம்.

ஒருத்தரை மரியாதையாக அழைக்கனும்னா "சார்" போடாம அழைக்க முடியாதா? தமிழில் ஐயா என்ற அழகான சொல் உள்ளதே. ஆனா பாருங்க இந்த சொல்லை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. கொஞ்சம் மாற்றி பயன்படுத்தினா பொருள் மாறிவிடுகிறது அதாவது மரியாதைக்கு பதில் அவமரியாதை வந்துவிடுகிறது.

சொல்லுங்க ஐயா , சொல்லுய்யா, என்னங்கய்யா?, என்னய்யா? அதனால் நாம் மரியாதையோடு ஐயாவை பயன்படுத்தவேண்டும். இதுக்கு பேர் தான் மரியாதைக்கு மரியாதை :-))

இன்னொரு சிக்கல் "ஐயா" என்ற சொல்லை பயன்படுத்தினால் வயதில் மூத்தவர், பெரியவர், பெருசு (கிண்டல்) என்ற எண்ணம் வருகிறது. 3, 4 வயது மூத்தவர்களை ஐயா போட்டா நல்லாவா இருக்கு? அதுக்கு என்ன தீர்வு? பேர் சொல்லி அழைப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். மரியாதைக்கு "ங்க" போட்டுக்குங்க. "சரிங்க குமரன்", "என்னங்க வசந்தன்" என்பது மாதிரி. (என்னை விட வயதில் மூத்தவர்கள் என்னை "சார்" என்று கூப்பிட்டால் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்.)

பழக பழக "சார்" பயன்பாடு குறைந்துவிடும், எனவே முடிந்த அளவு "சார்" போடாம பேச முயலுங்களேன். "ஆபீசரை" "சார்" போடாம அழைத்தீர்கள் என்றால் அது மிகப் பெரிய செயல், முயன்று பாருங்க. வாழ்த்துக்கள்!


ஒரு தமிழரிடம் பேசினால் ஒரு முறையாவது "சார்" என்ற சொல்லை பயன்படுத்திவிடுவேன். சார்... அட சொல்லுங்க சார், சார் நீங்க பெரிய ஆளு சார், வசந்தன் சார் என்ன சொன்னாருன்னா , ஆமா சார், இல்ல சார், போங்க சார், கிண்டல் பண்ணாதிங்க சார், குமரன் சார், ... இந்த மாதிரியாக.

"சார்" போட்டு பேச கூடாது என்று உறுதி எடுத்து "சார்" போடாமல் பேச பழகிக்கொண்டேன். ஒரு முறை நியூயார்க் பாரத ஸ்டேட் வங்கிக்கு சில ஐயங்களை தீர்க்க தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என்னுடைய ஐயத்தை தீர்க்கவேண்டியவர் அப்போது இருக்கையில் இல்லாததால் என் அழைப்பை இன்னொருவருக்கு மாற்றினார்கள். எடுத்தவர் பாண்டியராஜன் எனக்கு ஒரு தமிழ் பெயரை பாரத ஸ்டேட் வங்கியில் கேட்டதும் மகிழ்ச்சி, உடனே நான் "சார்" I ..... என்று பேசினேன். ஒரு வாக்கியம் பேசி முடித்ததும் ச்ச தமிழ்ன்னு தெரிந்தவுடனே "சார்" போட்டு பேசிட்டோமேன்னு ஒரே விசனமாயிடுச்சி. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. :-(
பள்ளிக்கூடத்தில் (தமிழ் வழி) ஆசிரியரை ( தமிழ் ஆசிரியரையும்) "சார்" என்று கூப்பிட்டபய தானே நான். எப்படி சுலபமா "சாரை" விட முடியும்.


நம்ம வலைப்பதிவு நண்பர்களும் "சாரை" தவிர்க்க முடியாமல் இருப்பவர்கள் தான் .. இவர்களும் தமிழர்கள் தானே. ;-)

17 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

சார்,

எங்க 'சார'ணர் சங்கத்தின் 'சார்'பா உங்களுக்கு 'சார'தி (சார்+அதி) பட்டம் கொடுக்கலாமுன்னு இருக்கோம்.
அது தர விழாவிற்கு தலைமை தாங்க மடி'சார்' மாமியைக் கூப்பிடலாமுன்னு ஒரு 'சாரா'ர் சொல்லறாங்க. இந்த கருத்தை 'சாரா'து மத்தவங்க நிக்கறாங்க. யாரு வந்தா என்ன வரலைன்னா என்ன? நம்ம ஆளுங்க 'சாரை' 'சாரை'யா வருவாங்க.

விழாவில் திருமதி. 'சாரு'மதி அவர்களைப் பாட அழைத்தோம். ஆனால் கண்டிப்பாக சொல்லிட்டோம் 'சார'மதி ராகம் கட்டாயம் பாடணுமின்னு. அவங்க 'சாரி'ன்னு சொன்னாங்க. நாங்க 'சரி'ன்னு வந்துட்டோம்.

'சரோ'ஜா மாமி அவங்க 'சாரீ'ரம் சரி இல்லைன்னு சொன்னாங்களா? 'சரீ'ரம் சரியில்லைன்னு சொன்னாங்களா? ஒரே கன்பியூஷன் போங்க. எந்தா 'சாரே'? மனசுலாயோ?

(நீங்க மட்டும் அவ்வளவு சார் போட்டு ஒரு பதிவு எழுதினீங்களா? அதை படிச்ச எஃபெக்ட்டில நானும் புகுந்து விளையாட்டேன். கோச்சுக்காதீங்க.) ;)

Mugundan | முகுந்தன் சொன்னது…

ஆமாம் குறும்பன் (சார்) அய்யா,

இந்தியர்கள் தான் அதிகமாக இச் சொல்லை
பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன்,தேவை
இல்லாத நேரத்தில் கூட.

குறிப்பாக,நான் முன்பு பணிபுரிந்த அமெரிக்க நிறுவனத்தில்
இச்சொல் தடைசெய்யபட்டு இருந்தது.கடைநிலை ஊழியன்
கூட தன் அதிகாரியை மட்டுமல்ல,நிறுவனத்தின் தலைமை
அதிகாரியைக் கூட பெயர் சொல்லித்தான் அழைத்தனர்.

வேலையில் சேரும் போதே உங்களுக்கு குட்டி பெயர்(நிக் நேம்)
அளித்துவிடுவார்கள்.

ஆனாலும் கூட இந்திய அதிகாரிகள் சிலர் சார் போடவில்லை என்றால்
நேரம் வரும் போது பழியை தீர்த்து கொள்வார்கள்.

அன்புடன்,
முகு

Unknown சொன்னது…

வெளிநாட்டினரிடம் இப்பழக்கம் இல்லை என்பதை துபாய் வந்தவுடன் தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையே, ஆனால், வெறும் தமிழர்களுக்கு மட்டுமே என்பது சரியில்லை. மலையாளிகள் சாரே என அழைப்பதை கேட்டதில்லையா / பார்த்ததில்லையா?

இங்கெல்லாம் அனைவரையும் பேர்சொல்லியே அழைக்க வேண்டும் - வயது வித்தியாசம் பாராமல். வெள்ளைக்காரனை சிலர் இன்னும் சார் எனவே அழைக்கிறார்கள், அப்படி அழைப்பது மிகப்பெரிய மரியாதையாக அவர்கள் கருதுவார்கள். சிலருக்கு அப்படி அழைப்பது பிடிக்காது.

சென்னைக்கு வரும்போதெல்லாம், இந்த சார் போடாமல் பேசும் பழக்கத்தினை மற்றவர் வித்தியாசமாகவே பார்க்கிறார்கள்.

வெற்றி சொன்னது…

குறும்பன்,
நல்ல பதிவு. ஆனால் தமிழகத் தமிழர்கள் மட்டும் தான் இந்த "சார்" எனும் சொல்லைப் புழங்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஈழத்தில் சார் என்ற சொல்லை பள்ளியில் ஆசிரியர்களை விழிப்பதற்கு மட்டும்தான் புழங்குவோம். அதுவும் சார் என்று நாம் சொல்வதில்லை. நாம் சேர் என்று தான் சொல்லுவோம். ஆனால் தமிழகத் தமிழர்கள் போறவர் வாறவர் எல்லோரையும் சார் போட்டு அழைப்பதைப் போல் ஈழத்தில் இல்லை.உண்மைதான் , நீங்கள் சொல்வது போல் அய்யா எனும் அழகான தமிழ்ச் சொல் இருக்கையில் நாம் ஏன் சார் எனும் ஆங்கிலச் சொல்லைப் புழங்குவான்?


நன்றி.

அன்புடன்
வெற்றி

பெயரில்லா சொன்னது…

நல்லா சொன்ன சார்...:)

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஐயா குறும்பன்,
நானும் சார் அதிகம் பதிவுகளில் உபயோகிக்கிறேன்.
வேறு எப்படி செய்வது என்று தெரியாத காரணத்தால். புதிதாக அறிமுகம் ஆகிறவர்களைத் தடாலடியாக பெயர் சொல்லி அழைப்பது(கூட ஒரு சார் போடாமல்) கடினம்.old habits die hard.

Machi சொன்னது…

வருகைக்கும் பூந்து விளையாடுனதுக்கும் நன்றி இலவசக்கொத்தனார் ஐயா. :-) சாரதி பட்டம் குடுகிறேன் அது இதுன்னு புல்லரிக்க வைச்சுட்டிங்க குடுக்காம ஏமாற்றிடாதிங்க சீக்கிரம் சாரணர் சங்கத்தை கூட்டுங்க. :-) ஆள் வேணுன்னா சொல்லுங்க சாரி சாரி யா (லாரி லாரியா) ஆளை கொண்டாந்திடுவோம். -:))

Machi சொன்னது…

வருகைக்கு நன்றி முகு. சார்ன்னு சொன்னா வெள்ளைக்காரனோட சர் பட்டம் வாங்கிய மாதிரி ஒரு நினைப்பு நம்மாளுங்களுக்கு இருக்குமோ? என்னத்த சொல்ல? அமெரிக்கர்கள் அதிகம் சார் போடுவதில்லை அதை பார்த்த பிறகாவது British மயக்கத்திலிருந்து நம்மாளுங்க மீளுவாங்களா?

Machi சொன்னது…

வருகைக்கு நன்றி துபாய்வாசி. மலையாளிகள் பாதி தமிழ் பாதி சங்கதம் கலந்த ஆளுங்க. மலையாளம் பேசுனும்னா "சாரே" போட்டாதான் ஒரு "Nativity Touch" இருக்கும். :-)
சாரே க்கு பதிலா அய்யரே அப்படின்னு சொன்னா நல்லா இருக்காதே? நாயர் கோவிச்சுக்க மாட்டார்? :-)
//சென்னைக்கு வரும்போதெல்லாம், இந்த சார் போடாமல் பேசும் பழக்கத்தினை மற்றவர் வித்தியாசமாகவே பார்க்கிறார்கள்.//
மரியாதை குறைவா பேசுனாதான் தப்பு "சார்" போடலைன்னா தப்பேயில்லை ( போடவும் கூடாது ).

Machi சொன்னது…

வருகைக்கு நன்றி வெற்றி. ஈழத்தில் சாரை புழங்காதவரைக்கும் மகிழ்ச்சி. என்ன பண்றது வெள்ளைக்காரன் காலத்து புத்தி சீக்கிரம் மாறுமா?

Machi சொன்னது…

வருகைக்கு நன்றி பெயரில்லாத ஐயா.


வருகைக்கு நன்றி வல்லி. நல்லா சொன்னீங்க "சார்" போட்டு அழைப்பது நம் பழக்கம், எளிதில் மாற்ற முடியாதது தான். ஆனா முயன்று பாருங்க. ஐயா போடுங்க இல்லை பெயரே போதும். நாம தான் "ங்க" போட்டிக்கிறோமே அது மரியாதையை தானே குடுக்கிறதே என்னங்க (வல்லி) நான் சொல்லறது.
பழக பழக அன்னியம் விலகிடும் குறிப்பா சொல்லனும்னா இவர் என் Friend என்று சொல்லுவது வழக்கம் "நண்பர்" என்று சொல்லுவது எனக்கு அன்னியமா இருந்தது இப்ப பழக பழக அது எனக்கு அன்னியமா இல்லை இப்பவெல்லாம் என் Friends ச நான் நண்பர் என்று சொல்லி அறிமுகபடுத்தறது வழக்கம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

குறும்பன் ஐயா, (மரியாதை எப்படி? ;))
வலைப் பதிவுல எங்கய்யா சார் சொல்றாங்க?! எல்லாம் அண்ணா, அக்கான்னு ரொம்பவே மாறிப் போச்சே!!

சில பேர் இந்த "அவர்கள்" போடுவாங்க. அது அடுத்த கொடுமை. பேரே பெருசா இருக்கும். அது பூரா சொல்லிட்டு, அவர்களேன்னா, கொஞ்சம் கஷ்டம் தான். "பொன்ஸ் அவர்களே". அப்படீன்னு முதல் முதல்ல என்னைச் சொன்னப்போ பயந்து போய்ட்டேன். "என்னப்பா, ஒருத்தி தானே இருக்கோம்.. இதுல என்ன அவர்கள்னு பன்மை வேறன்னு"

ரொம்ப அடிக்கடி இல்லைன்னாலும் ஐயாவும் காணக் கிடைக்குது. ஆனா, அக்கா, அண்ணா தான் அல்டிமேட்.

இதுவரை எங்க ஸ்கூல்ல பிசிக்ஸ் எடுத்தவரைத் தான் சார் போட்டு கூப்பிட்டிருக்கேன்.. இங்கயும் சில பதிவர்கள் விரும்புவதால் அப்படிச் சொல்ல வேண்டி உள்ளது..

Machi சொன்னது…

வருகைக்கும் மரியாதைக்கும் நன்றி பொன்ஸ்க்கா. :-)
உங்களை சார் போட்டு கூப்பிடமுடியாது என்பதால் வலைபதிவுலகில் "சார்" எங்கே? என்று கேட்காதீர்கள். சாரை புழங்கற மாதிரி மேடமை நாம் புழங்குவதிலை. :-)
என் பின்னூட்டத்திற்கு பதில் போடும் போது குறும்பன் சார் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். சொல் ஒரு சொல் குமரன் அவ்வாறு என்னை அழைத்தவர்களில் ஒருவர். சார் வேண்டாம் என்ற பிறகு ஐயா போட்டார். சார் போட காரணம் நம் பழக்கம்.

பலமுறை பின்னூட்டங்களில் "சாரை" பார்த்திருக்கிறேன் :-) அதன் பொருட்டே இப்பதிவு எழுதினேன்.

//"பொன்ஸ் அவர்களே"// ஒரு மரியாதை தான். இனிமே அக்கா போட சொல்லுவோம். :-)

//ரொம்ப அடிக்கடி இல்லைன்னாலும் ஐயாவும் காணக் கிடைக்குது.//
ஐயாவை காண்பதில் மகிழ்ச்சியே.
இராம.கி, ஞானவெட்டியான் போன்றவர்களை தான் அதிகம் ஐயா போட்டு பார்த்திருகிறேன் நல்லவேளை அவர்களை யாரும் வலைபதிவில் 'சார்' போடவில்லை.

//ஆனா, அக்கா, அண்ணா தான் அல்டிமேட்// உண்மைதான். எனக்கு தெரிந்து துளசிக்காவை தான் எல்லோரும் அக்கா போட்டு கூப்பிடுறாங்க. அண்ணா நான் அதிகம் பார்க்கவில்லை.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

செல்வன் பதிவெல்லாம் பாருங்க குறும்பன்.. அதைத் தவிரவும் சில பேர் செய்யறாங்க.. அப்புறம், அக்காவை அப்படியே கட் பண்ணுங்க.. குறும்பனுக்கு சார் போட்டது, ச்சும்மா கிண்டலுக்குத் தான் :)

hosuronline.com சொன்னது…

மணதளவில் இல்லாமல் உதட்டளவில் சொல்ல ஆங்கிலமே சிறந்தது.

மண்ணிக்கவும் - நன்றி

Sorry, Thank You சொல்றதுதான் எழிது

Machi சொன்னது…

பொன்ஸ் செல்வன்$ தான சொல்றீங்க?
//அப்புறம், அக்காவை அப்படியே கட் பண்ணுங்க.. குறும்பனுக்கு சார் போட்டது, ச்சும்மா கிண்டலுக்குத் தான் :)
//
அதான அக்கா எப்படி சின்ன பசங்களை சார் போட முடியும்? :-))

Machi சொன்னது…

ஒசூர் ஆன்லைன் வருகைக்கு நன்றி.
"Sorry" என்பதற்கு பதில் மன்னிச்சுக்குங்க என்பதை அதிகம் பயன்படுத்தினீர்கள் என்றால் உதட்டளவிலும் தமிழ் சிறக்கும். உதாரணம் நானே.
நமக்கு என்ன பிரச்சனைன்னா எங்கும் எதிலும் ஆங்கிலம் என்று இருப்பதால் நாம் பயன்படுத்திய தமிழ் சொற்களை கூட மறந்து ஆங்கிலத்துக்கு மாறிவிட்டோம், இப்ப தமிழில் பேசுனா வித்தியாசமா நாமே உணர்கிறோம்.
இப்பவெல்லாம் நான் "Thanks" க்கு பதில் நன்றியை தான் அதிகம் நான் புழங்குகிறேன். ஆரம்பத்துல ஒரு மாதிரியா இருந்தது இப்ப ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை.