வணக்கம்
திங்கள், ஜூலை 31, 2006
இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதா?
இலங்கை அரசு போர்நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவில்லை என்றும் இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை மனிதாபிமானத்தின் பால் எடுக்கப்பட்டதென்றும் கூறியுள்ளது. சிங்கள விவசாயிகளின் பயிர்கள் வாடுவது குறித்து மனிதாபிமான முறையில் கவலை கொள்ளும் அரசு தமிழ் மக்கள் குடிநீருக்காக தவிப்பது குறித்தும் மனிதாபிமான முறையில் கவலை கொண்டு அவர்கள் கவலையை போக்கினால் நன்றாக இருக்கும்.
இலங்கை அரசின் மனிதாபிமான நடவடிக்கையே குண்டுவீச்சு என்றால் இராணுவ நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அப்பட்டமான போர் நிறுத்தமீறலாக இருந்த போதிலும் இந்த குண்டுவீச்சை எந்த நாடும் கண்டித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை அவர்களும் இந்த குண்டுவீச்சு மனிதாபிமானது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்காணிப்பு குழு தலைவர் மட்டும் இந்த மனிதாபிமான தாக்குதல் தவறு என்று கூறியுள்ளார்.
இது வரை புலிகளின் நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் தாகுதலுக்கு எதிர் நடவடிக்கையாகவே உள்ளது.
பொதுவாக போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்துவிட்டதாக புலிகள் நினைத்தால் அது பலமான ஒரு தாக்குதலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தப்படும். இது வரை அப்படியொரு பலமான தாக்குதல் ஏதும் நடைபெறாததால் புலிகள் இன்னும் போர்நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்கிறார்கள் என்று கொள்வோமா?
வெள்ளி, ஜூலை 28, 2006
2006 Tour De France சட்டை கைமாறுகிறது
Tour De France -ன் இந்த ஆண்டு வெற்றியாளரான Floyd Landis ஊக்க மருந்து உட்கொண்டதாக சோதனையில் அறியப்பட்டுள்ளார். இதனால் இவரின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது, அவரது அணி பொனக்(Phonak) அவரை அணியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. 2வது மாதிரியை இன்னும் சோதனை செய்யவில்லை. அதன் முடிவை பொருத்து பன்னாட்டு சைக்கிள் அமைப்பு லெண்டிஸ் மீது நடவடிக்கை எடுக்கும்.
சைக்கிள் போட்டிகளிலேயே "Tour De France" தான் ராசா போட்டி அதாவது இது சைக்கிளின் உலக போட்டி. இதன் தூரம் எவ்வளவு தெரியுமா? 3000 - 4000 கி.மீ. ஒவ்வொரு ஆண்டும் இதன் தூரம் மாறும் ஆனால் 3000 கி.மீ க்கு கீழ் செல்லாது. இந்த ஆண்டு தூரம் 3657 கி.மீ. இது 20 கட்டங்களாக நடத்தப்படுகிறது, ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு நாள் அதன் படி 20 நாள், 2 நாள் ஓய்வு, ஆக மொத்தம் 22 நாள் இந்த போட்டி நடக்கும்.
இவ்வளவு கடுமையான போட்டியாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிப்பவருக்கும் 2 ம் இடத்தை பிடிப்பவருகும் இருக்கும் நேர இடைவெளி மிக குறைவு அதாவது ஒரு நிமிடம் இருக்கும் போட்டியின் கடுமை புரிகிறதா?
15 தாவது கட்டத்தில் முன்னனியாளராக இருந்த லெண்டிஸுக்கு கடும் சோதனை 16வது கட்டத்தில் வந்தது, தடுமாறி விழுந்தார் அதில் மதிப்புமிக்க 10 நிமிடங்களை இழந்தார், 16-ம் கட்ட முடிவில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் (Oscar Pereiro)இடையேயான நேர இடைவெளி 8 நிமிடமாக அதிகரித்தது. 11-ம் இடதுக்கு தள்ளப்பட்டார். இன்னும் 4 கட்டங்களே உள்ளன அதில் 8 நிமிட நேர இடைவெளியை குறைத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினம் என்பதால் லெண்டிஸின் கதை 2006 போட்டியில் காலி என்று அனைவரும் முடிவு செய்துவிட்டனர்.
ஆனால், எல்லோரும் அதிசயத்தக்கவகையில் பெரும் சாதனையாக 17வது கட்டத்தை லெண்டிஸ் வென்றார் இது சாதாரண வெற்றியல்ல இதில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் ஆன நேர இடைவெளியை 8 நிமிடத்தில் இருந்து 30 வினாடிகளாக கொண்டுவந்தார்.
19 & 20 ம் கட்டங்களில் முதல் நிலையை அடைந்து "Tour De France"ன் மஞ்சள் சட்டையை தனதாக்கிக்கொண்டார். 2வது இடத்தை பிடித்த ஆஸ்கார் பெரிரோவுக்கும் இவருக்குமான நேர இடைவெளி 57 வினாடிகள்.
இப்ப மஞ்சா சட்டை பறிபோகும் போல இருக்கு. 2வது மாதிரியின் முடிவை பொறுத்தே இது அமையும். முதல் மாதிரியிலிருந்து 2வது மாதிரியின் முடிவு பெரும்பாலும் மாறாது என்று கூறுகிறார்கள் அதன் படி முதல் இடம் ஆஸ்கார் பெரைரோவுக்கு போகப்போகிறது. 17வது கட்ட முடிவில் எடுக்கப்பட்ட மாதிரியில் தான் "டெஸ்டாஸ்டரோன்" (testosterone)அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக கண்டுள்ளார்கள்.
இப்பந்தயத்தில் லெண்டிஸ் இடுப்பு எலும்பு (Hip ailment -osteonecrosis) பிரச்சனையோடே கலந்து கொண்டார். விரைவில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறார்.
கடுமையான இடுப்பு எலும்பு வலியுடன் 3567 கி.மீ சைக்கிள் ஓட்டியது என்னை பிரமிக்க வைக்கிறது. பதிவு எழுத தூண்டியதும் இந்த பிரமிப்பே.
என்ன சாதனை செய்து என்ன பயன்? ஊக்க மருந்து உட்கொண்டதால் அனைத்தும் வீணாவதுடன் பழிச்சொல்லும் அல்லவா காலத்துக்கும் உடன் வரும்.
செவ்வாய், ஜூலை 18, 2006
அமெரிக்காவில் கண்ணையன்
.
.
.
.
.
.
அமெரிக்கர்கள் கண்ணனை '"கேனன்'" என்று தான் உச்சரிப்பார்கள். பெருமையா இருக்கா? நல்லது.
ஆனா பாருங்க அமெரிக்காவில் "கண்ணையன்" பொழப்புதான் மோசம். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
கண்ணன் 'கேனன்' ஆனா கண்ணையன் "கேனயன்" ஆகிடுவாரே.