வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, செப்டம்பர் 09, 2023

நீதிக்கட்சியால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரவில்லை

சுப.வீரபாண்டியன், அருள்மொழி என எல்லோரும் போகிறபோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது நீதிக்கட்சியின் ஆட்சி என்கிறார்கள்.

நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணை செயலாக்கம் பெறவில்லை; சுயேட்சை அமைச்சரவையான சுப்பராயன் அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரது முன்னெடுப்பிலேயே இட ஒதுக்கீடு அரசாணை கொண்டு வரப்பட்டு, அது தமிழ்நாட்டில் செயலாக்கம் பெற்றது என்பது வரலாறு!


அரசாணை செயலாக்கம் பெறவில்லை என்றால் என்ன ஆகும் என்பற்கு காட்டு :-- 

மகோரா ஆட்சியில் காவல் துறையில் உயர் அதிகாரிகள் காவல்துறையினரை பணியாளர்களாக (ஆர்டர்லிகள்) வைத்துக்கொள்ளுவதை நீக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த காவல்துறைப் பணியாளர்கள் காவலர்களுக்கான அரசு சம்பளத்தை பெறுவர். ஆனால் மகோரா வெளியிட்ட அரசாணை  தாலின் ஆட்சி வரையிலும் செயலாக்கம் பெறவில்லை, இன்னும் காவல்துறையினரை பணியாளர்களாக வைத்துக்கொள்ளும் போக்கு தொடர்கிறது. செயலாக்கம் பெறாத வரையில் அரசாணை என்பது பேப்பரை மட்டுமே அலங்கரிக்கும் வெற்று அலங்கார வார்த்தையே.