வடக்கத்தியானுங்கள விரட்டனும் நம்ம வேலையை பிடுங்கிக்கிறான் என்று ’சுருக்கமா’ கூறும் போது அதற்கு எதிர்ப்பை தமிழ் தேசியர்கள் மனிதாபமானம் அற்ற கொடூர மனமுடையவர்கள் என நினைத்துக்கொண்டு நம்ம மனிதாபிமான தமிழர்களும், தமிழ் தேசியர்களுக்கு உலகமயமாக்கல் பொருளாதார நடைமுறை தெரியாது என எண்ணி நமக்கு பாடம் எடுப்பவர்களும், சில யு-டியூப் போராளிகளும் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு விரிவா சொல்லனும் போலுள்ளது. இதை பல காலமாக பலர் கூறி வருகின்றனர் என்றபோதிலும் சமீபத்தில் சவுக்கு கூறியதும் மறுபடியும் அப்படியே தொங்கறானுங்க. இப்ப வட நாட்டவர்களை கொல்வதால் அவர்கள் சாரி சாரியாக அவங்க ஊருக்கு போறானுங்க என்ற வதந்தியும் சேர்ந்துகொண்டது. இவனுங்களுக்கு ஒரே பதிலையே பல இடங்களில் கூறி வருகிறேன். இதை தவிர்க்க ஒரு இடத்தில் பதிலை இட்டால் அவங்க கேள்விகளுக்கான பதிலை இதிலிருந்து வெட்டி ஒட்டினால் தட்டச்சும் வேலை எனக்கு மிச்சமாகும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை நினைவிலிருந்து எழுதுகிறேன் அதனால் ஏதாவது சில கேள்விகள் விடுபட்டு இருந்தாலும் இருக்கும். அதனால் ஏதாவது கேள்வி இருந்தாலும் கேட்கவும், பதில் உரைக்கிறேன்.
முதலில் வடக்கத்தியானுங்க இங்க வேலைக்கு ’வரவே கூடாதுன்னா’ தமிழ் தேசியர்கள் கூறுகிறார்கள்? வரவே கூடாதுன்னு சொல்லுவதாக நினைத்துக்கொண்டே மனிதாபிமான தமிழர்களும் நமக்கு பொருளாதார பாடம் எடுப்பவர்களும் கேள்விகள் தொடுக்கின்றனர். இவர்கள் அறிந்தோ அறியாமலோ ஏதோ சில திட்டத்துடனே இப்படிக் கூறுகிறார்கள் என எண்ணுகிறேன். இதற்கு கூறும் பதிலே கிட்டதட்ட அவர்களின் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.
(1) கேள்வி -
பொருளாதாரத்துக்காக ஒருவர் இடம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கோ மாநிலங்களுக்கோ செல்வது தவிர்க்க முடியாதது. அவங்க ஊர்லயே நல்ல வருமானம் கிடைத்தால் அவன் ஏன் வேறு ஊருக்கு செல்ல வேண்டும்? ’இதில் ஏதாவது தவறு இருக்கா இல்லை என்றே கூறமுடியும்.’
தமிழ் தேசியர்கள் -
நீங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் வகை தொகையில்லாமல் தமிழ்நாட்டுக்கு வடவர்கள் வேலைக்காக என்றாலும் படையெடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வகை தொகை இல்லாமல் வருவதால் தான் இச்சிக்கல் பெரிதாகியுள்ளது, பேசுபொருளாகியுள்ளது, கவனம் பெற்றுள்ளது. இது எதிர்காலத்தில் பேராபத்தில் நம்மை கொண்டு விட்டு விடும். இப்படி வருவதை முறைப்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம். இந்தியா என்பது பல நாடுகளின் ஒன்றியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்குத்தான் இந்தியாவில் INNER LINE PERMIT (ILP) என்பது நடைமுறையில் உள்ளது. மூன்று இந்திய மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. அதனால இது இந்தியாவில் இல்லை என்று கூற வேண்டாம். மூத்த செய்தியாளர்களுக்கு இது தெரிந்திருக்கவேண்டும், ஏன் ILP இருப்பது தெரியாத மாதிரி பேசுகிறார்கள் எனத்தெரியவில்லை. INNER LINE PERMIT இருக்கும் வரை வேலை செய்யலாம் முடிந்த பின் மூட்டையை எடுத்துக்கிட்டு சொந்த ஊருக்கு போகவேண்டியது தான். வாக்குரிமை பற்றிய பயமும் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவானோ என்ற அச்சமும் நமக்கு குறையும். மக்கள் தொகை (demography) மாற்றம் இருக்காது
திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் எல்லாரும் வர முடியாது. இதற்குத்தான் அனைத்து நாடுகளிடமும் ‘விசா’ என்ற ஒழுங்கு படுத்தும், முறைப்படுத்தும் நடைமுறை உள்ளது என்பதை INNER LINE PERMIT உடன் இணைத்துப் பார்க்கலாம். பெரும்பாலான சிக்கல்கள் ILPயை நடைமுறைப்படுத்தினாலே தீர்ந்து விடும்.
(2) கேள்வி -
வேலைக்கு வருபவர்களை எப்படி குறை சொல்லமுடியும் இங்குள்ள தமிழ் முதலாளிகள் தான் அவர்களுக்கு வேலை தருகிறார்கள் அதனால் முதலாளிகளான தமிழர்கள் தான் குற்றவாளிகள்.
தமிழ் தேசியர்கள் -
கேள்வி ஒன்றுக்கான பதிலைப் பார்க்கவும். நூறு ஆயிரம் பேர் தான் வேலைக்கு வரலாம் என்றால் முதலாளி அதிலிருந்து ஆளை எடுக்கட்டும். கிடைக்காத போது தமிழனைத் தான் நாட வேண்டும். INNER LINE PERMIT மூலம் இவர் ஆட்களை வெளி மாநிலத்திலிருந்து பெறலாம். தரகர்களும் (Consultancy) ஆட்களை பெற்றுத்தருவர்.
(3) கேள்வி-
உனக்கென்னய்யா நீ சும்மா சொல்லிட்டு போயிடுவ. வடவர்கள் நேரத்திற்கு வந்து குறைந்த கூலிக்கு அதிக நேரம் இருந்து வேலை செய்யறாங்க. தமிழர்களுக்கு கூலி அதிகமா கொடுத்தும் நேரத்திற்கு வர மாட்டிக்கிறாங்க, இதுல சிலர் வாரத்திற்கு இரு முறை எட்டியே பார்ப்பதில்லை கூப்பிட்டாலும் இதோ அதோ என்பாங்க ஆனா வரமாட்டாங்க.
தமிழ் தேசியர்கள் -
பதில் 1. முதலில் வடவன் அப்படித்தான் இருப்பான், பெண்டு பிள்ளைகளோட
இங்கு தங்கியதும் அவனும் சில ஆண்டுகளில் மாறிடுவான் ( இது மனித குணம்), இதற்கு நம்மாளுங்களே வெளிநாடுகளில் வேலைக்கு (White collar job) போன கதையை சொல்லலாம். திருமணம் ஆகாதா போது எச்சுமையும் இல்லாத போது பல மணிநேரம் அதிகமாக வேலை செய்வார்கள் அதே திருமணமாகி குழந்தை குட்டி என அங்கு தங்கும் போது குறித்த நேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டார்கள், விரைவில் வீட்டுக்கு செல்லவே பார்ப்பார்கள். பின்பு எல்லோரையும் போல் ஆகி விடுவார்கள். தேநீர், காபியை எப்படி நமக்கு வித்தாங்கன்னு தெரியும்( இந்தக்கதை தெரியலைன்னா சொல்லுங்க சொல்றேன்) வ.உ.சி கப்பல் வணிகத்தை அழித்தது எல்லாம் இப்படித்தான். இது மாதிரி நிறைய காட்டுகள் கூறலாம்.
பதில் 2. குடி இதற்கு முக்கிய காரணம். TASMAC எண்ணிக்கையை குறைத்தால் இது கட்டுக்குள் வரும் வாய்ப்பு சிறிது உண்டு, குறைவான கடைகள், திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது, முதலான பலப்பல நூதன வழிகள் மூலம் குடி பழக்கத்தை குறைக்க அரசு முயலனும். குடியை ஒழித்தாலே 90-95%
பிரச்சனை ஒழிந்துவிடும்.
(4) கேள்வி -
வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கட்டட வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாய கூலிகளும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் பாதி நேரம் வேலை செய்வதில்லை. இதில் அவர்களால் தான் இதற்கு ஆட்கள் கிடைக்கிறது.
தமிழ் தேசியர்கள் -
இதற்குத்தான் INNER LINE PERMIT என்ற உள் நுழைவு அனுமதி . பெரு முதலாளிகள் அந்த பெட்ரோமாசு லைட்டே தான் வேண்டுமென்றால் INNER LINE PERMIT பெற்று அவனை அல்லது தேவையானவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் இதற்கான அரசு அனுமதி பெற்ற தரகர்கள்\முகவர்கள் INNER LINE PERMIT மூலம் கொண்டு வந்த ஆட்களை பெற்று பணிக்கு சேர்த்துக் கொள்ளட்டும். அப்போது பாதுகாப்பு இருவருக்கும் உறுதிப்படும்.
-கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கவும். அப்போது தான் நமக்கு தெளிவு கிடைக்கும்.