நாட்டின் அரசியலில் சிறப்பு இடத்தை பெற்ற உபி யாதவ் குடும்பம் பற்றி தெரியவேண்டாமா? இதோ உங்களுக்காக
.
முலாயம் அப்பா பெயர் மேவாராம் சிங் யாதவ். அவருக்கு சுகர் சிங் யாதவ் அதாவது சர்க்கரை சிங் யாதவ் பாச்சி லால் சிங் யாதவ் என்று இரு பையன்கள்.
சுகருக்கு 5 பசங்க. அபய் ராம், ரத்தன் (ராணுவ வீரர் 1965 இந்தோ பாக் போரில் பங்குபெற்றவர்) , முலாயம் (SP head), ராச்பால், சிவ்பால்(state president of SP)
பாச்சிலாலுக்கு இரு மனைவிகள் இரு பிள்ளைகள்
முதல் மனைவி கீதா தேவி இவர்களின் மகன் அரவிந்து
2வது மனைவி பூல்வதி இவர்களின் மகனே ராம்கோபால் (expelled from SP)
ராம்கோபாலின் மனைவி பூலான்தேவி மகன் அக்சய் பெரோசாபாத் SP MP
அபய்ராம் செயதேவியை கட்டிக்கிட்டார் அவர்களின் மகன் தர்மேந்திரா (இரட்டை மகன் மகள்) பதுவன் தொகுதி SP MP.
தர்மேந்திராவின் சகோதரி சந்தியா (இரட்டை) மணிபுரி சில்லாபரிசத் தலைவர்.
தர்மேந்திராவின் மருமகள் வந்தனா அமிர்பூர் சில்லா பரிசத் தலைவர். இன்னொரு சகோதரி சீலா லக்டோ மாவட்ட முன்னேற்ற ஆணைய உறுப்பினர்.
சீலாவின் மருமகன் அசந்த் கோட்ட முன்னேற்ற அதிகாரி
ரத்தனின் மகன் ரன்வீர் .
ரன்வீரின் மனைவி மிருதுளா சைபி ஒன்றிய முன்னேற்ற அலுவலர். இவங்க மகன் தேச் பிரதாப் மணிபூரியின் SP MP. இவரின் மனைவி ராச்லட்சுமியின் அப்பா தான் லல்லு.
லல்லுவும் முலாயமும் எப்படி உறவினர்கள் என்று இப்போது புரிந்ததா??.
முலாயமுக்கும் மாலதிதேவிக்கும் பிறந்தவர் தான் உபி முதல்வர் அகிலேசு.
அகிலேசின் மனைவி டிம்பிள் கனுச்சின் SP MP
முலாயமின் தொடுப்பு தற்போதைய மனைவி சாதனா குப்தாவுக்கு பிறந்தவர் பிரதீப் (பிரதீக்?)
பிரதீப்பின் மனைவி அபர்னா இப்போது (2017) லக்னோ கன்டோன்மென்ட் வேட்பாளர்.
ராச்பாலின் மனைவி பிரேமலதா. அவங்க பையன் அபிசேக் @ அன்சுல் எடாவா சில்லா பரிசத் தலைவர்
சிவ்பாலின் மனைவி சரளாதேவி. இவர்களின் மகன் அதியா உபி பிராந்திக் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர்.
எனக்கு சக்கரை பெரியவரா பாச்சி லால் பெரியவரா என்று தான் தெரியவில்லை
2017 சனவரியில் முகநூலில் எழுதியது