பொன்னர் சங்கர் புகைப்படங்கள்
வணக்கம்
ஞாயிறு, ஏப்ரல் 17, 2022
திங்கள், ஏப்ரல் 04, 2022
எது குடும்பக் கட்சி
காங்கிரசு, திமுக, இராசுட்டிரய சனதாதளம், சமாச் வாதி, சிவசேனா, சமயசார்பற்ற சனதாதளம், தெலுங்கு தேசம், YSR காங்கிரசு, தேசிய மாநாடு உறுதியான குடும்ப கட்சிகள்.
தேசியவாத காங்கிரசு முடிவு சரத்பவார் கையில் இருக்கு.
பிசு சனதாதளம் குடும்ப கட்சியாக தொடருமா இல்லையா என்பது திருமணம் செய்து கொள்ளாத நவீன் பட்நாயக் குடும்ப உறுப்பினருக்கு கட்சி பதவியை கொடுப்பாரா மாட்டாரா என்பதில் இருக்கு.
மமதாவும் அண்ணன் பையன் அபிசேக்கை முன்னிருத்துவதாக செய்திகள் வருது, அதனால் திரிணாமுல்லைப் பற்றி இப்பக்கூறுவது சரியல்ல.
எதெல்லாம் குடும்ப கட்சிகள் இல்லை? பொதுவுடமை கட்சிகள், பாசக, அதிமுக.
குழப்பம் பாசக என்பதில் தான் சிலருக்கு உள்ளது, மற்றதில் குழப்பம் இருக்காது எனக் கருதுகிறேன். என் கருத்தை கூறுகிறேன். அதை நீங்கள் ஏற்கலாம் மறுக்கலாம் ஆனா என் கருத்தை சொல்லனுமில்லை 😉
பாசகவில் சில குடும்பங்கள் சில பகுதிகளில் செல்வாக்கு செலுத்தலாம் அதை வைத்து அதை குடும்பக்கட்சி எனக்கூறமுடியாது. கட்சித் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டும் இருந்தால் மட்டுமே அப்படிக்கூற முடியும். தலைமைக்கு பிடிக்கவில்லை கைமீறுகிறார்கள் என்றால் அது எவரையும் மாற்றக்கூடியது, அதனால் சில பகுதிகளில் சில குடும்பத்தினரின் செல்வாக்கு அக்கட்சியில் உள்ளதை வைத்து அதைக் குடும்பக்கட்சி என கூறமுடியாது. அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் இரு பெரிய கட்சிகளிலும் அப்படி உள்ளது அதற்காக குடியரசுக் கட்சியையும் டெமாக்ரட்டிக் கட்சியையும் அப்படி நாம் கூறுவதில்லை. அமெரிக்காவில் உள்ளது போல் சில மேலை நாடுகளிலும் நிப்பான் ஆத்திரேலியா போன்ற சில கீழை நாடுகளிலும் இருக்கலாம்.