காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது. காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.
1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.
1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.
1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.
1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது
1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது
1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால் கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.
1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா 4 நாள்கள் உண்ணாவிரதம்
1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.
1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.
1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.
1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.
1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.
1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205 டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.
1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள் பேச்சு.
1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.
1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை
2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை திறந்துவிட ஆணையிட்டார்.
2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.
2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்
நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.
2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.
2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.
2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.
2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.
2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.
2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.
செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.
செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.
செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.
செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு
அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு
அக் 8 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென உச்ச நீதி மன்றம் ஆணை.
அக் 8 - பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.
அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது.
அக் 9- கருநாடகாவை கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.
அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.
நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.
நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.
டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.
டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.
டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.
டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.
டிச 21 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.
டிச 25 - அரசின் அழைப்பிதழில் நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.
2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்
பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.
பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.
பிப் 13 - குறைந்த அளவு நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.
பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு அரசிதழலில் வெளியிட்டது
2014 சன 6- காவிரி நடுவர் நீதிமன்ற புதிய தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்
2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.
செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.
நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.
2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.
செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.
செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.
செப் 11 - உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.
செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.
செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.
செப் 20 - 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.
அக் 03 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது
2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி ஆக குறைப்பு
.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.