சிவசிவ என்று கூறுவது நான்கு மாத்திரையாகும். தமிழ் இணைய பல்கலைக்கழகம் இவ்வாறு கூறுகிறது.
550.
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.
(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.
551.
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.
(ப. இ.) அகத்தவப் பயிற்சியால் உயிர்ப்பினை வாங்கி உந்திக்கண் அடக்கி வயப்படுத்தினால் உடம்புக்கு காலவரையறைப்படி ஏற்படும் முதுமை புறத்துக் காணப்படினும் அகத்து முதுமைப்பண்பு ஒருசிறிதும் காணப்படமாட்டாது. அதற்கு மாறாக இளமைப்பண்பு கிளர்ந்தெழுந்து கொழுந்துவிடும். அதனையே பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் என்று ஓதினர். அகத்துப்பண்பு இளமையாகப் புறத்துப் பொலிவு முதுமையாவது எதன்பொருட்டெனின்? அவர்தம் பயிற்சியின் சிறப்பும்
கேவல கும்பகம் என்று ஒன்றுள்ளது. அது மூச்சில்லாத (உயிர் வளியில்லாத) நிலை. அதாவது மூச்சை வெளியிட்ட பின் மூச்சை இழுப்போம் அல்லவா அந்த இடைப்பட்ட நேரம். இந்த நேரத்தை பற்றி ஏதும் கூறவில்லை அதாவது கேவல கும்பகம் எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் என்று கூறவில்லை.
இடைகலை இடது நாசில் மூச்சை வெளியிடுவது - பிங்கலை வலது நாசியில் மூச்சை வெளியிடுவது.