வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, டிசம்பர் 28, 2007

பெனசிர் பூட்டோ கொலை - அலசல்

பெனசிர் பூட்டோ கொலைக்கான காரணம் என்ன? யார் காரணம்? என்பது பற்றி பல அலசல்கள் நடந்து கொண்டுள்ளன. மேற்கு நாடுகள் இதற்கு அல்கொய்தா அல்லது தாலிபான் காரணமாக இருக்கும் என்று சொல்லி அதைச்சார்ந்த காரணிகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியை சார்ந்த தொண்டர்கள் இதற்கு முசாரப் தான் காரணம் என்று சொல்லி நாய் முசாரப் நாய் என்று திட்டுகிறார்கள். பெனசிரும் தான் இறந்தால் அதற்கு முசாரப் தான் பொறுப்பு என்று மின்அஞ்சல் வழியாக அமெரிக்க நிருபருக்கு முன்பே தெரிவித்துள்ளார். பல பேட்டிகளில் அரசில் உள்ள சில அதிகாரிகள் தன்னை கொல்ல முயல்வதாக சொல்லியுள்ளார்.


1. அரசு பேச்சாளர் பிரிகேடியர் சிமா (Cheema) பெனசிர் பூட்டோவின் தலை காரின் sun roofல் மோதியதால் இறந்ததாக கூறுகிறார்.
2. பெனசிருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முசாதிக் கான் shrapnel காயத்தினால் இறந்திருக்கலாம் என்கிறார்.
3. பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரகுமான் மாலிக் பெனசிர் பூட்டோ கழுத்திலும் மார்பிலும் சுடப்பட்டதனால் இறந்ததாக கூறுகிறார்.

எத்தனை முரண்பாடு? ஏன் இந்த முரண்பாடு? எல்லாம் முசாரப்புக்கே வெளிச்சம்.

பெனசிர் பூட்டோ கொலையினால் முசாரப் அடையும் ஆதாயம் என்ன? என்று பார்த்தால் இக்கொலையில் அவரின் பங்கு புழப்படும்.

* பெனசிர் பூட்டோ இல்லாத நிலையில் மேற்கு நாடுகளுக்கு தற்போதைக்கு முசாரப்பை விட்டால் வேறு வழியில்லை.
* முசாரப்புக்கு மாற்றாக மேற்கு நாடுகள் பெனசிர் பூட்டோவை அதிகார மையத்துக்கு கொண்டு வர முயன்றது.
* மேற்கத்திய மிடையங்கள் பெனசிர் பூட்டோவுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்தது, இது மேற்கத்திய மிடையங்கள் புகழ் விரும்பி முசாரப்புக்கு பிடிக்காமல் போனது.
* முசாரப் விரும்பியபடி பெனசிர் அதிகார பரவல் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளாதது.
* கராச்சியில் தற்கொலை தாக்குதல் நடந்தும் பெனசிருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க தவறியது திட்டமிட்ட செயலேயன்றி வேறல்ல.
* பாதுகாப்பு மிக்க பாசரை நகரான ராவல்பிண்டியில் இக்கொலை நடந்தது பெனசிருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை சொல்லாமல் சொல்லும்.

பெனசிர் பூட்டோ கொலையில் முசாரப்புக்கு நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்தது.