விமானம் எப்படி பறக்கிறது? என்று கல்லூரி காவலாளிக்கு ஒரு ஐயம் வந்துவிட்டது. என் நண்பனை பார்த்து எப்படிப்பா ஏரோபிளேன் வானத்துல பறக்குது? அங்க தான் ரோடு இல்லையே என்று கேட்டார்.
என் நண்பன் அவருக்கு விளக்க ஆரம்பித்து விட்டான். இவ்வளவு உயரத்தில் பறக்கனும் அதை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு சொல்லும் என்று விலாவாரியாக எடுத்துச்சொன்னான். பாவம் அவர் ஒன்னும் புரியாம விழிச்சார். அதை கவனித்த நான் உடனே களத்தில் குதித்தேன். தள்ளுடா உனக்கு சொல்ல தெரியலை என்று சொல்லிவிட்டு நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்.
அதலாம் இல்லிங்க மெட்ராசுல இருந்து பிளேன் கிளம்புனதும் 10000 அடி உயரத்துக்கு போயிடும் அங்கயே அது நிக்கும், பூமி சுத்துதா? சுத்தி அமெரிக்காவுக்கு கீழ பிளேன் வந்ததும் போன் போட்டு சொன்னதும் பிளேன் கீழ இறங்கி வந்துடும் என்று சொன்னேன்.
என் விளக்கம் அவருக்கு புரிந்துவிட்டது. அதான பார்த்தேன் பிளேன் எப்படி ரோடு இல்லாம ஓடும்? தம்பி சரியா சொன்னப்பா என் சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி எனக்கு நன்றி சொன்னார்.
அவர் எனக்கு நன்றி சொன்னதை கேட்ட நண்பன் நொந்து போயிட்டான், இப்பவும் என்கிட்ட பேசும் போது என்னடா பிளேன் பறக்கற கதையை இன்னும் எத்தனை பேருக்கு சொன்ன அப்படின்னு பொறாமைல கேட்பான். ;-)
இது என் அனுபவம் இல்லை, இது நண்பரின் அனுபவம் ;-) சொன்னார் இங்க போட்டாச்சு.